Thursday, May 1, 2008
திறக்காதீர்கள்,அபாயம் காத்திருக்கிறது..!
இணையத்தில் yahoo,hotmail,AOL ஆகிய தளங்களில் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்போர் அவதானமாக இருங்கள்.
11-11-2007 அன்று காலை மைக்ரோசொfப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும்,நோட்ரான் நிறுவனத்தினரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாமென்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்படுகின்றது.
இதில் எந்தளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.எனினும்,தற்கால நிகழ்வுகளை வைத்துப்பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லையென்றே தோன்றுகின்றது.
உங்களுக்கு POWER POINT PRESENTATION,LIFE IS BEAUTIFUL என்ற தலைப்பில் ஏதாவது மின்னஞ்சல்கள் வந்தால் எந்தக் காரணத்தைக் கொண்டும் திறக்கவேண்டாம்.உடனேயே அதனை அழித்துவிடுங்கள்.
அப்படிச் செய்யாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களாயின்,உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின்வரும் செய்தி வருகிறதாம்.
"Its too late now,your life is no longer beautiful"
அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன்,உங்களுக்கு அம்மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும்,உங்களுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும்.இவ்வகையான புதிய வைரஸ்கள் தற்பொழுது இணையத்தில் உலவத்தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
AOL நிறுவனத்தினர் ஏற்கெனவே இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்றுச் செயன்முறை எதுவும் தற்பொழுது கைவசம் இல்லையெனவும் சொல்லப்படுகின்றது.இந்த வைரஸை உருவாக்கியவர் தன்னை 'Life Owner' என்று மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னூட்ட வைரஸ்கள்
நீங்கள் வலைத்தளங்கள் வைத்திருப்பவராயின் கட்டாயம் இவ்வகையான வைரஸ்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.இவை உங்களுக்கும் வந்திருக்கக் கூடும்.எனக்கும் வந்து கொண்டேயிருக்கிறது.
இது இன்று வந்தது.பாருங்கள்.
Ditaur has left a new comment on your post "பெட்டி பெட்டிகளாகத் தர்ப்பூசணிகள் !":
See Please Here
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Ditaur to சிந்திக்கச் சில படங்கள் at May 1, 2008 11:57 AM
வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்களோடு பின்னூட்டங்கள் வரும்.
அதில் இங்கே பாருங்கள் என ஆங்கிலத்தில் ஒரு இணையத்தளத்திற்கான இணைப்பிருக்கும்.
தப்பித் தவறி அதை அழுத்திவிட்டீர்களானால் வைரஸ் தானாக உங்கள் கணனியின் தகவல்களை பதிவு செய்து கொள்ள ஆரம்பிக்கும்.இது Warnig Here என்றும் சில சமயம் வரும்.
இது போன்ற பின்னூட்டங்கள் வருமிடத்து எந்தத் தயக்கமுமின்றி அதன் Reject பொத்தானை அழுத்தி அழித்துவிடுங்கள்.
கணனி உங்களது.எவரையும் அதில் திருடவிடாதீர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
see here
ரொம்ப நாளா வந்துக்கிட்டு இருக்கு.
இன்னும் gold அது இதுன்னு வருதுதான். பேசாம இவை எல்லாத்தையும் ரிஜெக்ட் செஞ்சுரணும்.
காலத்துக்கு எற்ற பதிவு. தொடர்ந்து இப்படியான தகவல்களை தருங்கள். வாழ்த்துக்கள் நண்பரே.
ஒரு தடவை திறந்த போது எனது கணனி எச்சரிக்கை செய்தது அதில் இருந்து அறிமுகமில்லா அஞ்சல்கள் உடன் அழித்து விடுகிறேன்.
இது தெரியாம ரெண்டு முறை கிளிக் செஞ்சுட்டேன் மக்கா.:)))
நல்லவேளையா இதுவரை ஏதும் அசம்பாவீதம் ஆகலை:)
இனி நேரா டெலிட்டுதான்:))))
பயனுள்ள கட்டுரை. நன்றிகள்:)
மாம்ஸ் உங்க நோட் புக் ஸ்டெயில் பேக்கிரவுண்டு நல்லாயிருக்கு.நானும் மாறிட்டேன்ல்ல..:)
நன்றிகள் மாம்ஸ்..:)
//ரொம்ப நாளா வந்துக்கிட்டு இருக்கு.
இன்னும் gold அது இதுன்னு வருதுதான். பேசாம இவை எல்லாத்தையும் ரிஜெக்ட் செஞ்சுரணும்.//
சரியாச் சொன்னீங்க துளசி டீச்சர்.
வைரஸை எப்படியெல்லாம் அனுப்புகிறார்கள் பார்த்தீர்களா?
நாங்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டீச்சர் :)
அன்பின் தாசன்,
இன்னும் இதுபோன்ற தகவல்களைத் தொடர்ந்தும் தருகிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் யோகன்,
உங்களுடைய அதே அனுபவம் தான் எனக்கும்.
அடாடா,என்னுடைய பதிவை எவனோ ஒரு ஆங்கிலேயன் பார்த்துப் பின்னூட்டமிட்டிருக்கிறானே என்ற களிப்பில் ஒரு முறை திறந்துவிட்டேன்.பார்த்தால் ஒவ்வொரு பைலாகக் கொப்பி பண்ணிக் கொடு போகிறது.உடனே அழித்துவிட்டேன்.
இப்பதிவைப் போட்ட பிறகுதான் தெரிகிறது.இதுபோல நிறையப் பதிவர்களுக்கு நடந்திருக்கிறதென்று.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
//இது தெரியாம ரெண்டு முறை கிளிக் செஞ்சுட்டேன் மக்கா.:)))
நல்லவேளையா இதுவரை ஏதும் அசம்பாவீதம் ஆகலை:)//
நல்லவேளை தப்பிச்சிட்டீங்க ரசிகன் அண்ணாச்சி..
//இனி நேரா டெலிட்டுதான்:))))//
ஆ அது.. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)
//மாம்ஸ் உங்க நோட் புக் ஸ்டெயில் பேக்கிரவுண்டு நல்லாயிருக்கு.நானும் மாறிட்டேன்ல்ல..:)
நன்றிகள் மாம்ஸ்..:)//
ஓஹ்..டெம்ப்ளேட்டை சுட்டுட்டீங்களா?
அதை எவ்வளவு அழகா சொல்றீங்க?
ஒரே ஊர்ல இருக்கோம்றதால சும்மா விடுறேன்.இல்லேன்னா நடக்குறதே வேற.. :P
நண்பரே எனக்கும் இது போன்ற பின்னூட்டம் வந்தது. ஆனா நான் உஷாருல்ல.. எப்படின்னு கேக்கறீங்களா? அது வேறொன்னுமில்ல...என்னோட மொக்கை பதிவுகளைப் படிப்பதற்கு நம்மாளுங்க வந்தாலே அதிசயம்...அங்க இங்கிலீசு காரன் எப்படி வருவான்? அதான் அத்த டீலீட் பண்ணிட்டேன்...ஹீ..ஹு...
எனது வலைத்தளத்திற்கு வந்து பயனுள்ள தகவலை தெரிவித்ததற்கு நன்றி...நண்பரே
அன்பின் பிரதாப்,
//நண்பரே எனக்கும் இது போன்ற பின்னூட்டம் வந்தது. ஆனா நான் உஷாருல்ல..//
ஆமாம்.அப்படித்தான் உஷாரா இருக்கணும்...பாருங்க எந்த இடத்திலிருந்தெல்லாம் ஆபத்து வருதுன்னு :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
நானும் அனுபவப்பட்டிருக்கேன் ரிஷான்...
பயனுள்ள விடயம்...நன்றி...
நானும் அனுபவப்பட்டிருக்கேன் ரிஷான்...
பயனுள்ள விடயம்...நன்றி...
அன்பின் தமிழன்,
வலைப்பதிவு எழுதும் அனைவருக்கும் இந்த அனுபவம் வரப்பெறிருக்கிறது போல..:)
இனிமேலாவது கவனமாக இருப்போம்..!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
பயனுள்ள பதிவு :)))
இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் :))
வாங்க ஜி :)
உங்கள் முதல்வருகை நல்வரவாகட்டும்.
//இனி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் //
கொஞ்சமில்லை.எப்போதுமே ஜாக்கிரதையா இருங்க :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
தகவலுக்கு நன்றி ரிஷான்.
வாங்க நிஜமா நல்லவன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment