Tuesday, December 23, 2008

A FOR APPLE தொடர்பதிவின் எனது பதிவு !

இந்தத் தொடர்பதிவின் அடுத்த பதிவினை எழுதச் சொல்லி நண்பர் மஹாராஜா உத்தரவிட்டு இப்பொழுது நான்கு மாதங்கள் தாண்டியாகிவிட்டது. இதற்கு மேலும் பொறுமை காத்தால் தாம் படையெடுத்து வந்துவிடுவதாக மீண்டும் மீண்டும் மிரட்டுவதால் உடனே இப்பதிவிடுகிறேன்.
தாமதத்திற்கு மன்னியுங்கள் மஹாராஜா.

A void negative sources, people, places, things and habits.

http://www.analogx.com/contents/download/audio/vremover.htm
MP3 பாடல்களில் வரும் பின்னணி குரலையும் (ie Singers vocal), பின்னணி இசையையும் (Music) தனியாக பிரித்தெடுக்க உதவும் மென்பொருளைப் பெற்றுக் கொள்ள உதவும் இணையத்தளம்.

http://www.allmyfaves.com/
வலையில் உலவுவருக்குத் தேவையான அத்தனை வலைத்தளங்களையும் ஒரே வலைத்தளத்தில் பெற்றிட இவ்வலைத்தளம் உதவும்.

http://www.arusuvai.com/tamil/experts/109
சமையலின் அகராதியே தெரியாதவர்கள் கூட இலகுவாக பலவகை உணவுகளை சமைக்கச் சொல்லித்தரும் அருமையான வலைத்தளம்.

B elieve in yourself.

www.blogger.com
புதிதாக வலைப்பூவொன்றினை ஆரம்பிக்கவுள்ள ஒருவர் இவ்வலைப்பக்கத்தில் சென்று உள்நுழைவதன் மூலம் தமக்கான வலைப்பூவினை ஆரம்பிக்கலாம்.


C onsider things from every angle.

http://www.codelathe.com/mmex/mmex_download.php
வீட்டு வரவு செலவு விபரங்களை பராமரிக்க ஒரு இலகுவான மென்பொருளைக் கொண்ட இணையத்தளம்.

http://www.copyscape.com/
சொந்த இணையத்தளத்தில் அல்லது வலைப்பதிவில் பதிவிட்டவை திருட்டுப் போயுள்ளதா என அறிய இவ்வலைத்தளம் பெரிதும் உதவும்.


D on't give up and don't give in.

http://my.dot.tk/cgi-bin/login02.taloha
வலைப்பக்க முகவரியை இலவச டொமெய்ன் முகவரியாக மாற்ற உதவும் வலைத்தளம்.

www.diyfather.com
குழந்தை வளர்ப்பு பற்றி தாய்மார்களுக்குத்தான் எல்லாரும் அறிவுரை சொல்வார்கள். ஆனால், 'குழந்தை வளர்ப்பு என்பது அப்பாக் களுக்கும் தெரிந்திருக்க வேண்டிய அற்புதக்கலை' என்பதை வலியுறுத்தி, ஒரு இணையத் தளம் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த இணையத்தளத்தில் இளம் அப்பாக்கள் மற்றும் அப்பாவாகப் போகிறவர்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் மட்டும்தான் கொட்டிக் கிடக்கின்றன.

E njoy life today, yesterday is gone, tomorrow may never come.

www.evaphone.com
கணனியிலிருந்து எங்கும் இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் இணையத்தளம்.

F amily and friends are hidden treasures; enjoy their riches.

http://www.fao.com/home.jsp
வீட்டுக்குத் தேவையானவற்றை இணையம் மூலமாகவே வாங்க உதவும் இணையத்தளம்.


G ive more than you planned to.

http://www.gimp.org/
உங்கள் படங்களை மேலும் அழகுபடுத்த, சட்டமிட, அதில் உங்கள் பெயரிட, பிற்தயாரிப்புக்கள் செய்ய ஏற்ற மென்பொருளைக் கொண்டுள்ள இணையத்தளம்.

http://www.getk9.com
சிறுவயதிலிருக்கும் உங்கள் குடும்பத்தவர்களின் கணனிகளில் சில இணையத்தளங்கள் திறபடாமல் தடுக்க உதவும் மென்பொருளைக் கொண்ட இணையத்தளம்.

H ang on to your dreams.

http://www.howtosaythatname.com/
பிறரின் பெயரை எப்படி உச்சரிப்பதெனச் சொல்லித்தரும் இணையத்தளம்.

I gnore those who try to discourage you.

www.indiainfo.com
 உலகின் அனைத்துப் பிரிவுகளுக்கும் அடங்கும் தகவல்களைத் தொகுத்துத்தரும் இணையத்தளம்.

J ust do it.

www.justjoking.com
நகைச்சுவைகளுக்கான இணையத்தளம்.


K eep trying no matter how hard it seems, it will get easier.

http://www.kmart.com/
எல்லாவிதமான உபயோகப்பொருட்களையும் இணையத்தில் வாங்கமுடியுமான இணையத்தளம்.

L ove yourself first and most.

http://www.ldoceonline.com/
ஆங்கில அகராதி

http://www.lanka.info/dictionary/
தமிழ்,சிங்கள,ஆங்கில அகராதி

M ake it happen.

http://www.media-convert.com/
கைவசம் இருக்கும் எந்தவகை வீடியோக்களையும் 3GP எனும் மொபைல்போன் வகை வீடியோவாய் மாற்றி உங்கள் செல்போனில் ஏற்ற இந்த தளம் உதவும்.கூடவே அநேக வகை கோப்புகளை உருமாற்றம் செய்ய உதவும் இணையத்தளம்.

N ever lie, cheat or steal, always strike a fair deal.

www.netforbeginners.about.com
இணையத்தினைப் பயன்படுத்துவது குறித்தும் அது பற்றிய பயன்பாடுகள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்.


O pen your eyes and see things as they really are.

www.orkut.com
உலகளாவிய ரீதியில் நண்பர்களையும், வாசகர்களையும் பெற்றிட உதவும் வலைத்தளம்.


P ractice makes perfect.

http://www.pinthoora.com
புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி நல்ல விலைக்கு விற்க உதவும் இணையத்தளம்.

www.pitara.com

குழந்தைகளுக்கான தளம். கிராஃப்ட் வேலைகள், ஆங்கில இலக்கணம், ஆங்கில வார்த்தை விளையாட்டுகள், பெயின்டிங், குட்டி மேஜிக்குகள் என குழந்தைகளுக்கு எக்கச்சக்கமாகக் கற்றுக் கொடுக்கிறது தளம். கண்டுபிடிப்புகள், கதைகள், பாடல்கள், இந்திய மற்றும் உலக செய்திகள் என குழந்தைகளுக்குத் தேவையான விஷயங்களைச் சுருக்கமாக, அழகாகத் தொகுத்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு இன்டர்நெட் பரிச்சியம் ஏற்படுத்த சிறந்த  தளம்.

Q uitters never win and winners never quit.

http://quote.yahoo.com/
பங்குச் சந்தை நிலவரங்களை அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்

R ead, study and learn about everything important in your life.

http://www.rainlendar.net/cms/index.php
உங்கள் தினசரி முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் மென்பொருளைக் கொண்டுள்ள இணையத்தளம்.

S top procrastinating.

http://safemanuals.com/
வீட்டுப் பாவனைப் பொருட்களின் தொலைந்துபோன 'யூசர் கைட்' இலவசமாகப் பெற்றுக் கொள்ள உதவும் வலைத்தளம்.

http://www.splinterware.com/download/iddfree.exe
உங்கள் தினக்குறிப்புகளைப் பதிய ஒரு இலவச நாட்குறிப்பேட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ள உதவும் வலைத்தளம்.

http://www.shatterock.com/products/software/dbpwd/dbpwd.zip
உங்கள் மறந்துபோன பாஸ்வேர்ட்களை மீட்டித்தரும் மென்பொருளை இலவசமாகக் கொண்டுள்ள இணையத்தளம்.

T ake control of your own destiny.

http://www.tamilsoftwarebooks.org/
கணனி சம்பந்தமான புத்தகங்களனைத்தையும் பெற்றுக் கொள்ள மிகவும் பயனுள்ள வலைத்தளம்.

U nderstand yourself in order to better understand others.

http://www.ups.com/content/us/en/index.jsx
வெளிநாடுகளிலிருந்தான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு உதவும் இணையத்தளம்.

V isualize it.

http://www.variety.com/
ஆங்கிலப் பல்சுவை இதழொன்றின் இணையத்தளம்.

W ant it more than anything.

http://wiredberries.com/
இயற்கை மூலிகைகளால் ஆன உடல் ஆரோக்கியக் குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய வலைத்தளம்.

http://worldatlas.com/nations.htm
உலக நாடுகள் அனைத்தையும் பற்றி அறிந்துகொள்ள உதவும் இணையத்தளம்.

E X cellerate your efforts.

http://www.expertvillage.com/
கற்றுக்கொள்ள விரும்பும் சிறு சிறு வேலைகளைக் கூட ஒளிப்பதிவுகள் மூலம் இலவசமாகக் கற்றுத்தரும் வலைத்தளம்.

Y ou are unique of all God's creations, nothing can replace YOU.

http://www.yellowpages.com/
அனைத்துத் தேவைகளுக்குமான முகவரிகளைத் தரும் இணையத்தளம்.

Z ero in on your target and go for it!

http://www.zedge.net/

கைத்தொலைபேசிக்குத் தேவையான அனைத்தையும் இலவசமாகப் பெற்றுக்கொள்ள உதவும் வலைத்தளம்.

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
நான் அறிந்த வலைத்தளங்களங்களை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளித்த நண்பர் மஹாராஜாவுக்கும், இதில் பல வலைத்தளங்களை எனக்கு அறிமுகப்படுத்திய நண்பர்கள் பிகேபி, தமிழ்நெஞ்சம், கூடுதுறை ஆகியோருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்...!
இத் தொடர்பதிவில் என் சார்பாக நான் அழைக்கும் மூவர்,

Wednesday, December 10, 2008

மடிக்கணனிகளின் பற்றரிகளைத் திரும்பப்பெறும் SONY

    


நீங்கள் ஹெச்.பி.எல்., டெல் அல்லது தோஷிபா லேப் டொப் பயன்படுத்துகிறீர்களா? அதில், Sony லேப்டொப் பற்றரி பயன்படுத்தப்படுகிறதா?

உடனே Sony டீலர் அல்லது இன்டர்நெட் மூலம் உங்கள் பற்றரிக்குப் பதிலாக புதிய பற்றரி ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்கனவே வழங்கிய பற்றரி சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என்றும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கொடுத்த தீர்ப்பை அடுத்து இந்த ஏற்பாடு நடந்து வருகிறது.

இந்த லித்தியம் அயன் பற்றரியைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், அதில் சூடு ஏற்பட்டு லேப்டொப் பாழாகிப் போனது மட்டுமின்றி ஒரு சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக புகார் பதிவாகி உள்ளது.

இந்த வகை பற்றரி ஒரு லட்சம் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 35 ஆயிரம் அமெரிக்காவிலும், மீதம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தகவல்களுக்கும், எப்படி பற்றரியை மாற்றலாம் என்பதற்கும்  (http://news.sel.sony.com/en/press_room/cor GßÓ porate_news/release/38052.html) முகவரியில் உள்ள தளத்திற்கு சென்று பார்க்கலாம்.

Tuesday, November 18, 2008

சக பதிவர் கைது குறித்து...

தனித்து ஏதும் செய்யவியலா இயலாமையோடும் வருத்தத்தோடும் இதனை எழுதுகிறேன்.
இலங்கையைச் சேர்ந்த எமது சக பதிவரும், தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான திரு.ஏ.ஆர்.வி.லோஷன் சனிக்கிழமை (15-11-2008) அதிகாலை 12.50 மணியளவில் இலங்கை, வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெற்றி எப்.எம். வானொலி சேவையின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஆர். வாமலோஷனை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும். அல்லது விடுவிக்க வேண்டும் என்று ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் தொழில்படும் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர்களின் வர்த்தக சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய 5 அமைப்புக்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன. இது குறித்து 5 ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வெற்றி எப்.எம். வானொலி சேவையின் முகாமையாளரான ஏ.ஆர். வாமலோஷன் நவம்பர் 14ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வெற்றி எப்.எம். வானொலிச் சேவையில் முகாமையாளராக 2008இல் இணைவதற்கு முன்னர், பத்து வருட காலமாக இவர் வானொலி ஊடகவியலாளராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

நள்ளிரவு தம்மை பொலிஸ் அதிகாரிகளாக இனங்காட்டிக் கொண்ட 13 பேர் வீட்டுக்கு வந்து வாமலோஷனை அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் ஐந்து ஊடக அமைப்புக்களிடம் தெரிவித்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வாமலோஷன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரிகள் ரசீது ஒன்றை வழங்கியுள்ளனர்.

இவர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படியோ அல்லது விடுதலை செய்யும்படியோ நாம் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஊடக சுதந்திரத்தை அழிதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றும் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்".

இவ்வாறு ஐந்து ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லோஷன் தனது பதிவுகளில் அரசியல், விளையாட்டு, சினிமா, நகைச்சுவை,சமகால நிகழ்வுகள் என அனைத்தும் எழுதிவருகிறார். இவர் இறுதியாக எழுதிய அரசியல் பதிவான இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி எனும் பதிவுதான் இவரது கைதுக்கு காரணமாக இருக்குமெனில், இலங்கையில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் குறித்து ஆராய வேண்டியிருப்பதோடு இவரது விடுதலைக்காக நாம் எல்லோரும் (சக பதிவர்கள், தமிழ்மணம்) ஏதேனும் செய்யவேண்டுமல்லவா? எவ்வகையில் அவரது விடுதலைக்கு உதவலாம் நண்பர்களே ?

Wednesday, August 20, 2008

இணைய வானொலியில் எனது கவிதை !

அன்பின் நண்பர்களுக்கு,

இனிய வணக்கங்கள்.

முத்தமிழ் இணையத்தளம் மற்றும் பிரவாகம் ஆண்டு மலரில் பிரசுரமான எனது 'புதைகுழி வீடு'கவிதை, www.worldnews.com இன் தமிழ்க்குரலின் "கவிதை கேளுங்கள்" நிகழ்ச்சியில் 19-08-2008 முதல் 25-08-2008 வரை பிரபல அறிவிப்பாளர் சாத்தான்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களது கம்பீரமான குரலில் ஒலிபரப்பாகி வருகிறது.
அதன் ஒலிக்கோப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

rishan.mp3 -

இணைய வானொலிக்காக எனது கவிதையைத் தேர்ந்தெடுத்து தனது குரல் மூலம் மேம்படுத்திய திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றி !

வானொலி ஒலிபரப்பை ஒலிக்கோப்பாக மாற்றித்தந்த நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Tuesday, August 5, 2008

நானும் எனது ஒரு வருடப்பதிவுகளும்...!

இன்றோடு வலைத்தளம் ஆரம்பித்து சரியாக ஒருவருடம் பூர்த்தியாகிறது.

கடந்த வருடம் ஏப்ரலில் இருந்துதான் இணையத்தில் உலா வர ஆரம்பித்தேன்.



ஆரம்பத்தில் பொழுதுபோக்காக எல்லா வலைப்பூக்களையும் மேய்ந்தவாறிருந்தேன். தமிழில் எழுதும் ஆவல் மிகுந்தது. ஆனால் எழுதத் தெரிந்திருக்கவில்லை. நண்பர் இசையமைப்பாளர் அமீர் அவர்கள் தமிழ் யுனிகோட் எழுத்துரு ஈ கலப்பையை அறிமுகம் செய்து வைத்து தமிழில் எழுதக் கற்றுக் கொடுத்தார். அவருக்கு நன்றி !



தொடர்ந்து ஜூலையிலிருந்து கீற்று இணையத்தளத்தில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பின்னர் கீற்று, வார்ப்பு, அதிகாலை இணையத்தளங்களில் கவிதைகளும் திண்ணை இணையத்தளத்தில் எனது சிறுகதைகளும் தொடர்ந்து வெளிவரத்தொடங்கின.



அவ்வேளையில் வலைத்தளம் ஆரம்பிப்பது குறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. நண்பர் பாடகர் ஹரீஷ் ராகவேந்திரா அவர்கள் கூகுளின் ப்ளொக்ஸ்பொட்டை அறிமுகப்படுத்தி எழுத உதவினார். அவருக்கு நன்றி.



தொடர்ந்தும் வலைப்பூ மற்றும் பதிவுகள் சம்பந்தமாக தனிப்பட்ட முறையில் நல்ல பல ஆலோசனைகள் தந்து வரும் நண்பர் PKP மற்றும் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும் எனது நன்றி !



MY PHOTO COLLECTIONS என முதன்முதல் ஆரம்பித்த வலைத்தளம் தான் இன்று தன் ஒருவருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. இதில் என்னால் எடுக்கப்பட்ட, நான் ரசித்த புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறேன்.



அடுத்ததாக எனது எண்ணங்களை வெளிப்படுத்தும் கட்டுரைகளைக் கொண்ட எண்ணச் சிதறல்கள் வலைத்தளத்தை ஆரம்பித்தேன்.

தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், சிந்திக்கச் சில படங்கள், விமர்சனங்கள், உலக நிகழ்வுகள் ஒரு பார்வை, COLLECTION OF ARTICLES என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வலைத்தளங்கள் வைத்து எழுதிவருகிறேன்.



கடந்த மார்ச் மாதத்தின் ரேடியோஸ்பதி ஒரு வார சிறப்பு நேயராக நண்பர் கானாபிரபா என்னை,எனது விருப்பப்பாடல்களுடன் அறிமுகப்படுத்தி வைக்க மிகப்பெரிய நட்புவட்டம் என்னுடன் கைகோர்த்தது. நண்பர் கானாபிரபா அவர்களுக்கு நன்றி !



கடந்த ஜூன் மாதம் முழுதும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' வலைத்தளத்தில் எழுதும்படி நண்பர் கேயாரெஸ் அவர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டேன். அந்தப்பதிவுகள் மூலமாகவும் எனக்கு ஏராளமான நண்பர்களும், வாசகர்களும் கிடைத்தனர். நண்பர் கேயாரெஸ் அவர்களுக்கு நன்றி !



எல்லாவற்றிலுமாக இந்த ஒருவருட காலப்பகுதியில் 431 பதிவுகள் எழுதிவிட்டேன்.எனது ஒவ்வொரு பதிவுக்கும் வந்து பதிவின் குறை நிறைகளைச் சொல்லிப் பின்னூட்டமிட்டு , மின்னஞ்சல் அனுப்பி, தொலைபேசி உற்சாகப்படுத்திய அத்தனை அன்புள்ளங்களுக்கும் நன்றி நண்பர்களே...!



என்றும் அன்புடன் உங்கள்,

எம்.ரிஷான் ஷெரீப்.

Wednesday, July 30, 2008

ரிஷானின் திடீர் மறைவும் அது ஏற்படுத்திய தாக்கங்களும்...!

அவ்வளவாக இல்லை. ஐந்தே ஐந்து நாட்கள்தான்.
அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு இணையமில்லை. கைபேசி (Mobile) இல்லை.ஏதோ மந்திரித்துவிட்ட நாட்டுக் கோழியாகச் சுற்றிவந்து பார்க்கையில்தான் மின்னஞ்சல் பெட்டி (Mail inbox ) நிரம்பிவழிவது தெரிகிறது. ஊர் சுற்றி வந்த களைப்பைப் பார்க்கமுடியுமா என்ன ?

வலைப்பதிவுலக நண்பர்கள்
சந்திரமௌலி, பாஸ்கர், தணிகை, கார்த்திக், பிரேம்குமார், மீறான் அன்வர், ரசிகவ் ஞானியார், ரஸீம், கலீலுர் ரஹ்மான்,குட்டிசெல்வன்,காமேஷ், அஜித்குமார்,ஆயில்யன்,நாராயணன் சுப்ரமணியம் சகோதரிகள் ஷைலஜா,ஸ்வாதி,காந்தி,சாந்தி, சூர்யா,கவிநயா, சத்யா,நட்சத்திரா, சஹாராதென்றல், வாணி, பஹீமா ஜஹான் என அத்தனை பேரும் தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், குழும மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் எனது அழைப்பின் கதவுகளைத் தட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறீர்கள்.

கைபேசியின் கைதவறிய அழைப்புக்களிலெல்லாம் நண்பர்களின் எண்களோடு புதுப்புது நாடுகளின் புதுப்புது எண்கள். அத்தனையோடும் எனது குரலினை இணைக்கமறந்தமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே. 'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு ? ' என்பதனைப் போல தொடர்பு எல்லைகள் நீங்கிய பாலைநிலமதில் கைபேசியெதெற்கு என அலுவலக நண்பரிடம் கொடுத்துப் போயிருந்தேன். அவர் எனக்கு வந்த அலுவலக எண்கள் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலெதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது.

குழுமத்தில் சகோதரி ஷைலஜா எழுதிய கவிதை ஆனந்தத்தில் விழிகலங்கச் செய்கிறது.

கவலையாய் இருக்கிறது
கற்பனைகள் நிஜத்தின் நிழல்தானோ
நிழல்நிஜமாகிவிடவேண்டாம் என்று
நெஞ்சம் தவிக்கிறது
கவிதை ஒன்று எழுதிவிட்டு
காணாமல் போயிருக்கும்
அன்புத்தம்பி ரிஷான்
அன்று ஒருநாள் சொன்னாரே
நினைவிருக்கிறதா
இலங்கைச் செய்திகளை
இடைவிடாது அளிக்கும்
தனக்கும் பாதுகாப்பு இல்லை என்று?
தொலைபேசியில் தொடர்பு கொண்டும்
மின்மடல்கள்பல அனுப்பியும்
பதில் ஒன்றும் இல்லை
தெரிந்தவர்கள் தகவல்சொன்னால்
செரிக்கும் என் உணவு.

நாலைந்து நாட்பிரிவுக்கே எவ்வளவு அன்பாக விசாரிக்கிறீர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும்...? இந்த உலகில் இக்கணத்தின் அதிர்ஷ்டக்காரன் நான்தான் என எண்ணவைக்கிறது. ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்து எழுத என ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூடப் பூர்த்தியாகவில்லை. யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்ததும் இல்லை. அதற்குள் உண்மையான நண்பர்களின் ஆதிக்கத்துக்குள் நான். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி இறைவனே...! நன்றி நண்பர்களே..!
இந்த அன்பும், நேசமும் என்றும் தொடர வேண்டுகிறேன்...!

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்

Wednesday, July 9, 2008

பதிவுத் திருடர்களை என்ன செய்யலாம் ?

அண்மையில் 'தமிழ்மணத்தில்' பார்த்து, அமலன் என்பவரது 'கடகம்' வலைத்தளத்தில் நுழைந்தேன்.

மிகவும் அதிர்ச்சியளித்தது அந்த வலைத்தளம்.எனது மூன்று பதிவுகளைத் திருடி (என்னிடம் அனுமதியைப் பெறாமல் தன் பதிவிலிட்டுள்ளதால் வேறு சொல் தெரியவில்லை) தனது வலைத்தளத்தில் இட்டிருக்கிறார்.நீக்கிவிடச் சொல்லி பின்னூட்டம், மின்னஞ்சல் மூலம் அறிவித்தும் இதுவரையில் கவனத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

என்னுடைய பதிவுகள் மட்டுமல்ல. சகோதரி கமலாவினது சமையல் குறிப்புகளும் அங்கிருக்கின்றன.மற்ற பதிவுகளின் பதிவர்கள் யாரெனத் தெரியவில்லை.

எனது மனிதாபிமானம் உங்களுக்கு மாத்திரமா ? பதிவு அங்கு,
எனது பெட்டி,பெட்டியாகத் தர்பூசணிகள் பதிவு அங்கு,

எனது யானைகள் பதிவு அங்கு,

சுயமாக எழுதத் தெரியாவிட்டால் ஏன் பதிவெழுதவேண்டும் ? இல்லாவிட்டால் பதிவின் சொந்தக்காரரிடம் அனுமதியைப் பெற்று தன் வலைத்தளங்களில் இடலாமே ? ஒவ்வொரு எழுத்தாளரும், பதிவர்களும் தங்கள் பெறுமதி வாய்ந்த நேரத்தைச் செலவுபண்ணி , தங்கள் திறமைகளைக் கொண்டு ஒரு குழந்தையைப் போல ஆக்கங்களைப் பிரசவிக்கையில் அவற்றைத் திருடிப் பதிவிடுவதைப் பார்க்கும் போது அது குறித்தான எனது வருத்தம் நியாயமானது தானே ?

Thursday, May 1, 2008

திறக்காதீர்கள்,அபாயம் காத்திருக்கிறது..!


இணையத்தில் yahoo,hotmail,AOL ஆகிய தளங்களில் மின்னஞ்சல் கணக்கை வைத்திருப்போர் அவதானமாக இருங்கள்.

11-11-2007 அன்று காலை மைக்ரோசொfப்ட் நிறுவனத்தினரிடமிருந்தும்,நோட்ரான் நிறுவனத்தினரிடமிருந்தும் நேரடி மின்னஞ்சல்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலான மின்னஞ்சல்களைத் திறக்க வேண்டாமென்ற எச்சரிக்கையுடன் வந்ததாக அறியப்படுகின்றது.

இதில் எந்தளவு தூரம் உண்மையென்று தெரியவில்லை.எனினும்,தற்கால நிகழ்வுகளை வைத்துப்பார்க்கும் போது எதற்கும் எச்சரிக்கையாக இருப்பதில் தவறில்லையென்றே தோன்றுகின்றது.

உங்களுக்கு POWER POINT PRESENTATION,LIFE IS BEAUTIFUL என்ற தலைப்பில் ஏதாவது மின்னஞ்சல்கள் வந்தால் எந்தக் காரணத்தைக் கொண்டும் திறக்கவேண்டாம்.உடனேயே அதனை அழித்துவிடுங்கள்.

அப்படிச் செய்யாமல் இந்த மடல் தாங்கிவரும் இணைப்பை நீங்கள் திறப்பீர்களாயின்,உடனடியாக உங்கள் கணனியின் திரையில் பின்வரும் செய்தி வருகிறதாம்.
"Its too late now,your life is no longer beautiful"

அந்தக் கணமே உங்கள் கணனி செயல்பாடற்றுப் போய்விடுவதுடன்,உங்களுக்கு அம்மடலை அனுப்பிய கயவர்களால் உங்கள் கணனியை அவர்கள் இருந்த இடத்திலிருந்து இயக்கவும்,உங்களுடைய கடவுச் சொற்களைக் கைப்பற்றவும் முடியும்.இவ்வகையான புதிய வைரஸ்கள் தற்பொழுது இணையத்தில் உலவத்தொடங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.

AOL நிறுவனத்தினர் ஏற்கெனவே இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் இந்த வைரஸுக்கு மாற்றுச் செயன்முறை எதுவும் தற்பொழுது கைவசம் இல்லையெனவும் சொல்லப்படுகின்றது.இந்த வைரஸை உருவாக்கியவர் தன்னை 'Life Owner' என்று மடல்களில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பின்னூட்ட வைரஸ்கள்

நீங்கள் வலைத்தளங்கள் வைத்திருப்பவராயின் கட்டாயம் இவ்வகையான வைரஸ்கள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.இவை உங்களுக்கும் வந்திருக்கக் கூடும்.எனக்கும் வந்து கொண்டேயிருக்கிறது.

இது இன்று வந்தது.பாருங்கள்.


Ditaur has left a new comment on your post "பெட்டி பெட்டிகளாகத் தர்ப்பூசணிகள் !":

See Please Here

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

Posted by Ditaur to சிந்திக்கச் சில படங்கள் at May 1, 2008 11:57 AM


வாயில் நுழையாத ஆங்கிலப் பெயர்களோடு பின்னூட்டங்கள் வரும்.
அதில் இங்கே பாருங்கள் என ஆங்கிலத்தில் ஒரு இணையத்தளத்திற்கான இணைப்பிருக்கும்.
தப்பித் தவறி அதை அழுத்திவிட்டீர்களானால் வைரஸ் தானாக உங்கள் கணனியின் தகவல்களை பதிவு செய்து கொள்ள ஆரம்பிக்கும்.இது Warnig Here என்றும் சில சமயம் வரும்.

இது போன்ற பின்னூட்டங்கள் வருமிடத்து எந்தத் தயக்கமுமின்றி அதன் Reject பொத்தானை அழுத்தி அழித்துவிடுங்கள்.

கணனி உங்களது.எவரையும் அதில் திருடவிடாதீர்கள்.

Tuesday, April 1, 2008

ஐ-பொட் / செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்தவர்களுக்காக...!

செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்?




1) முதலில் செல்பேசியின் மின்னினைப்பைத் துண்டிக்கவும்.

2) செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.

3) ஒரு கிண்ணம் முழுவதும் 'அரிசி' யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)

4) உறையிலிட்ட செல்பேசி / ஐ-பொட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.



5) செல்பேசி / ஐ-பொட்டின் - மின்கலங்களை (பேட்டரி) தனியாக வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.

6) ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.

7) அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

தகவல் உதவி - ரம்யா.

Wednesday, March 19, 2008

பிரபல வார இதழில் எனது வலைப்பூ



இவ்வருட,மார்ச் மாதத்தின் மூன்றாம் ஞாயிறன்று (16-03-2008) இலங்கையிலிருந்து வெளியாகும் பிரபல வார இதழான 'ஞாயிறு தினக்குரல்' பத்திரிகையில் 'வலைப்பூக்கள்' பகுதியில் எனது கவிதைகளுக்கான வலைப்பூவான 'எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நேரத்தில் எனது வலைப்பூவினை ஞாயிறு தினக்குரலில் அறிமுகப்படுத்திய வலைப்பூக்களுக்கான ஆசிரியர் திரு.க.தே.தாசன் அவர்களுக்கும்,எனது ஒவ்வொரு ஆக்கங்களின் போதும் ,பதிவுகளின் போதும் எனது ஆக்கங்களின் குறைகளையும்,நிறைகளையும் தக்க சமயத்தில் சுட்டிக்காட்டி எனது வளர்ச்சிக்கு உதவும் நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

Wednesday, February 20, 2008

உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?


பொதுவாகவே நாம் ஏதாவதொன்றைத் திட்டமிடும் போது,அத் திட்டம் நிறைவேறும் நாளொன்று,நேரமொன்று இருக்கும்.
உதாரணமாக நீங்கள் பரீட்சையை சிறப்பாக எழுதவேண்டுமெனத் திட்டமிட்டுப் படிப்பீர்களாயின் பரீட்சையோடு அத்திட்டமிடல் நிறைவேறிவிடும்.ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்களெனில் அப்பயணம் நிறைவேறிய பின்னர் அத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு விடும்.
அது போல திருமணம் செய்ய,வீடு கட்ட,வாகனம் வாங்க,மேற்படிப்பு படிக்க என எல்லாவற்றையும் திட்டமிட்டுத்தானே செய்கிறோம்.
ஆகவே நமது வாழ்க்கையானது இதுபோன்ற சின்னச் சின்ன,பெரிய திட்டங்கள்,இலக்குகள் கொண்டே அடுக்கடுக்காகக் கட்டப்படுகிறது எனச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்கள் தானே..?அவரவர் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குமான திட்டங்கள்,இலக்குகள் வித்தியாசப்பட்ட போதும் அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒத்த இலக்கு,இலட்சியம் என்பது 'வாழ்க்கையை வெற்றி கொள்வது' .நாமனைவரும் அதனை நோக்கியே கொஞ்சம் கொஞ்சமாக ஏனைய இலக்குகளை திட்டமிட்டுச் செய்வதன் மூலம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
ஆனால்,நம்மனைவருக்கும் வாழ்க்கையை வென்றெடுக்கவேண்டுமென்பதே இலட்சியமாக இருப்பினும் வென்றெடுக்கும் நாளெது? அதற்கான நேரமெது ? என்பதைப் பற்றிச் சிந்திக்காமலேயே காலத்தை நகர்த்திக்கொண்டிருக்கிறோம்.உண்மைதானே ?
வாழ்க்கையை வெற்றிகொள்ளவேண்டுமென நாம் பலவிதங்களில் முயற்சிக்கிறோம்.போராடுகிறோம்.ஆனால் எமதான வாழ்க்கையை எப்பொழுது வென்றெடுக்கப் போகிறோம் என்ற கேள்விக்கு எம்மிடம் பதிலிருப்பதில்லை அல்லது பதிலளிக்க முடிவதில்லை.
இதுவரை நீங்கள் பயணித்து வந்த வாழ்க்கைப் பாதையைத் திரும்பிப் பார்த்து அல்லது எதிர்காலத்தில் பயணிக்க எண்ணியிருக்கும் திசையை நோக்கிச் சொல்லுங்கள்.உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?
நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான,சிக்கலான வலைகளால் நம்மை நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டு,இலட்சியங்களை ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம்.நாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்?நாமா?நாம்தான் மரணித்துவிட்டோமே..?
நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம் வாழ்க்கையை வென்றோமா ? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள்.நம் இறப்பின் பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?
ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு செயலின் பிரதிபலன்கள் பற்றி நாம் வாழும்போதே உணர்ந்து செயல்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.நாம் வாழ்க்கையை வென்றோமா என்ற கேள்விக்கான பதில் பயனளிப்பது நமக்கேயன்றி பிறர்க்கல்ல.எப்படி நமக்கு மற்றவர்கள் வாழ்க்கையை வென்றார்களா இல்லையா என்பதற்கான விடை தேவையாக இல்லையோ அதுபோலவே அவர்களுக்கும் நமது வாழ்க்கை பற்றிய கேள்விக்கான விடை தேவையற்றதாக இருக்கும்.(சிலர் நமக்குத் தோல்வி ஏற்படும்வரை,நாம் தவறிழைக்கும் வரை சிரிக்கப் பார்த்துக்கொண்டிருப்பர் என முணுமுணுப்பீர்கள் இக்கணத்தில்.உண்மைதான்.அது பற்றி இன்னொரு கட்டுரையில் பார்க்கலாமே ! )
ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாட்களுக்குள் தான் தனது வாழ்க்கையை வெற்றிகொள்ள வேண்டியிருக்கிறது.அந்த நாள் எப்பொழுது? எந்தப் பராயத்தில் ?
*பால்யத்தில் ?
*இளமைக்காலத்தில் ?
*நடுத்தர வயதில் ?
*வயோதிபத்தில் ?

நம்மில் அனேகம்பேர் தமது வாழ்க்கையை வெல்வதற்காக அவர்களது சிறுவயதில் ஆரம்பித்த போராட்டம் அவர்களது முதுமை வரை தொடர்ந்து செல்கையில் தாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா,இல்லையா எனத் திரும்பிப் பார்க்கக் கூட நேரமிருக்காது.அவர்கள் அறியாமலேயே முதுமை வந்துவிடும்.ஒரு கட்டத்தில் வயதாகிவிட்டது எனச் சோர்ந்துவிடுவார்கள்.இளமைக் காலத்தை வீணாக்கிவிட்டோமே என வருந்துவார்கள்.
ஆகவே 'வாழ்க்கையை வெற்றி கொள்வது என்றால் என்ன?' என்பதற்கான விடையை உங்களை நீங்களே கேட்டுப்பார்த்து அதற்கான விடையைத் தெரிந்துகொள்ளும் பொழுது வாழ்க்கையை வென்றெடுக்கும் நாளெது பற்றிய கேள்வி எழாது.
உண்மையில் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்,ஒவ்வொரு பகுதியிலும் நம்மால் செய்யப்பட வேண்டிய அத்தனை செயல்களையும்,எதிர்பார்ப்புக்களையும் திட்டமிட்டு நிறைவேற்றுவதுதான் வெற்றியின் முதல்படி.ஆகவேதான் வெற்றியின் ஏனைய படிகள் நமது வாழ்க்கையின் நாட்களையும்,நேரங்களையும் சார்ந்து இருக்கின்றன.எனவே வெற்றி நமக்கான காலங்களில்,வருடங்களில்,மாதங்களில்,வாரங்களில்,நாட்களில்,மணித்தியாலங்களில்,நிமிடங்களில்,வினாடிகளில் இருக்கின்றன என்பதனை ஏற்றுக்கொள்கிறீர்கள் தானே.
இப்பொழுது இப்படிப் பார்ப்போம்.நாங்கள் சுவாசித்துக்கொண்டிருக்கும்,நீங்கள் இதனை வாசித்துக்கொண்டிருக்கும் இந்த வினாடியை,இந்த நிமிடத்தை மிகவும் நிம்மதியான முறையில்,பயனுள்ள வழியில் செலவழித்துக்கொண்டிருக்கிறீர்கள்.நமது ஒவ்வொரு வினாடிகளும் வீணடிக்கப்படாமல்,பயனுள்ள வகையில் நாம் அன்றைய தினம் போட்டுவைத்திருக்கும் திட்டங்களை நோக்கி நகரவேண்டும்.இப்படிப் பயனுள்ள விநாடிகள் கொண்டு உருவாக்கப்படும் நிமிடங்கள்,மணித்தியாலங்கள்,நாட்கள்,வாரங்கள்,மாதங்கள்,வருடங்கள்,காலங்கள் உங்களது வெற்றியை நீங்கள் வாழும்போதே கூறுபவைதானே.
வேறுவகையில் சொல்வதானால் நீங்கள் வாழ்க்கையை வெற்றிகொள்ளும் நாள் இன்று தான்.வெற்றியை நோக்கி நகரும் வினாடி இதுதான்.இந்தக்கணம் தான் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான தருணம்.இதனை நீங்கள் வீணாகப் பயனற்ற முறையில் கழிப்பீர்களானால் நீங்கள் தோல்வியை நோக்கி பாதங்களை எடுத்துவைக்கிறீர்கள் எனக்கொள்ளலாம்.இந்த நிமிடத்தை நீங்கள் விரோதம்,கோபம்,பொறாமை,வஞ்சகம்,சுயநலம் கொண்டு பூரணப்படுத்துவீர்களாயின் வாழ்க்கையில் தோற்றவர்கள் பட்டியலுக்கு நம்மை நாமே விண்ணப்பிப்பவர்கள் ஆகிறோம் அல்லவா?
பரீட்சையில் சிறப்பாகச் சித்தியடைவது,உயர்ந்த தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வது,நல்லதொரு குடும்ப வாழ்க்கையைக் கொண்டுசெல்வது,வசதியாக,நிம்மதியாக வாழ்வது என அவரவர்க்கு வெவ்வேறான இலட்சியங்கள் இருக்கும்.அவற்றை நோக்கிச் செல்லும்போது பலவிதமான தடங்கல்கள்,தடைகள் வரத்தான் செய்யும்.அவை பொருளாதார ரீதியாகவோ,பிறராலோ,பிறகாரணங்களாலோ இருக்கலாமே தவிர நமது சோம்பேறித் தனத்தால் இருக்கக்கூடாது.வெற்றி மனப்பான்மையோடு ஒவ்வொரு நிமிடத்தையும் கழிப்பவர் எவரோ அவரே வாழ்க்கையை வென்றவராகிறார்.
அந்த வகையில் நாம் எந்த வயதில் இருந்தாலும்,எத் தொழிலைச் செய்தாலும் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெற்றிமனப்பாங்கோடு கழிப்போமாயின் அதுவே வெற்றிகரமான வாழ்க்கை.
வாழ்க்கையை வெற்றிகொள்ள எதிர்காலத்தின் ஏதோ ஒருநாள் வரும்வரை பார்த்திருக்கவேண்டாம்.இன்று செய்ய வேண்டியவற்றை தன்னம்பிக்கையுடனும்,முழுமையாகவும்,மகிழ்வோடும் செய்யுங்கள்.இந்தக் கணத்தை வெற்றியின் நேரமாகக் கொண்டு செயல்படுங்கள்.அப்பொழுது உங்களை அறியாமலேயே உங்கள் வாழ்க்கையை நீங்கள் வென்றவர் ஆகிறீர்கள்.
இப்பொழுது சொல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கையை நீங்கள் வெற்றிகொள்ளத் தீர்மானித்திருக்கும் நாளெது ?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, January 16, 2008

குறிப்பாகப் பெண்கள் கவனத்திற்கு...!


கையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்,மறைமுகமாக பொருத்திபதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பதுஇன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிகச்சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாகஇருக்கிறது.
அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதைஎத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

மொபைல் கேமராக்கள்,கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

பொது இடங்களில் கேமராக்கள் :

பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள்,மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில்
வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய
நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு
தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.

பள்ளி,கல்லூரி,விடுதிகளில் :

பள்ளி,கல்லூரி,விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில்,மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சகமாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் இன்று
சகஜமாக நடந்துவருகிறது. இதிலும் கவனமாக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.

பொதுக்கழிப்பிடங்கள்,குளியலறைகள்,ஹோட்டல் அறைகள் :

பொதுக் கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்கள்,பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது வேலைநிமித்தமாக அங்கு ஹோட்டல்கள்,லொட்ஜ்களில் தங்கநேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப்பார்க்கவும்.தங்களுக்குத் தெரியாமல் தங்களை,தங்கள் செயல்களை படமெடுக்கும்
கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.கவனம் தேவை.

மருத்துவமனைகள்(ஆஸ்பத்திரிகளில்)கவனம் தேவை :

மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள்.தக்கதுணையுடன் செல்வது
நல்லது.மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும்போதும், ஆடைகளை மருத்துவ
காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள்.
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ளச் சொல்லும்போதும் கவனம் தேவை.உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.

துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :

நாம் துணிக்கடைகளுக்குச் செல்வது இயல்பானது.
அங்கு உடைகளைப்போட்டுப் பார்த்துச் சரிபார்க்க சிறியஅறை பெண்களுக்காகப் பெரிய கடைகளில்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்தத் துணிக்கடைகளின் உடைகளைப் போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால்
அங்கு கண்டிப்பாகக் கேமராக்கள் தங்களைக் கண்காணிக்கப் பொறுத்தப்பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா,துணிகளை மறைக்கிறார்களா
என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில்
கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்தக் கண்ணாடிகளிலும் இரண்டு வகைக் கண்ணாடிகள் உண்டு.இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒருவகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைப் பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு
அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்காட்டும். இந்த
இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்தக் கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்.இவைகளைக் கவனத்தில்
கொண்டு செயல்படவும்.

இறுதியாக :

நம்மையறியாமலேயே நம்மைப் படமெடுத்து,வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில்
பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிகச் சாதாரணமாகப் பரவிவருகிறது. இதற்குக்காரணம் கேமராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்
சிக்காமல்,தக்க விழிப்புணர்வை நம் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவேண்டும்.

தகவல் உதவி : திரு.சாதிக்

Tuesday, January 8, 2008

2008-ல் கணினி பாதுகாப்பு விவகாரங்கள்


2008-ம் ஆண்டின் ஆரம்பத்தில் நாம் இருக்கிறோம். வைரஸ் மற்றும் பிற அச்சுறுத்தல்களிலிருந்து கணினிகளையும், நெட்வொர்க்குகளையும் பாதுகாக்க 2008-ல் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சைமன்டெக் உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

2008-ல் நிலவக்கூடிய பாதுகாப்பு போக்குகள் குறித்து சைமன்டெக் ஒரு பட்டியலையே வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதலில் இருப்பது "தேர்தல் பிரச்சாரங்கள்". அரசியல்வாதிகள் இணையதளத்தை பிரச்சார எந்திரமாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது என்பதால், அதனால் ஏற்படும் கணினி பாதுகாப்பு விவகாரமும் முக்கியம் என்று சைமன்டெக் கூறுகிறது. அதாவது இதன் மூலம் ஆன்லைன் நன்கொடைக்கான பிரச்சாரங்கள், தவறான தகவல்கள் பரவுவது, மோசடி ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரித்துள்ளது.

இரண்டாவதாக தொழில் முறையில் வைரஸ்களை பரப்புதல், மற்றும் கணினி தொடர்பான மோசடிகளில் இறங்கும் "பாட்" (BOT) கும்பலின் வளர்ச்சியை சைமன்டெக் குறிப்பிடுகிறது. வைரஸ் பரவிய ஒரு கணினியை மோசடிக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மர்மமான வேலைகளில் இறங்க அவர்களுக்கு `பாட்' கும்பல் உதவலாம்.

உதாரணமாக `பாட்' கும்பல் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் கணினிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக விளம்பரம் செய்தார்களேயானால், இதனை பயன்படுத்திக் கொள்ள `பாட்' கும்பலுக்கு பணம் செலுத்தி மோசடிகளில் இறங்கலாம்.

மேலும் முக்கியமாக பயனாளர் அல்லது வாசகர் உருவாக்கும் இடுகைகளை (User Generated Content) வெளியிடும் ஒரு இணையதளம் மென்பொருள் வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்று சைமன்டெக் எச்சரித்துள்ளது.

அதாவது குறிப்பிட்ட இணையதளம் உயர் தொழில்நுட்ப வைரஸ் ஸ்கேனிங் முறையை வைத்திருந்தாலும் அதனை ஏமாற்றி உள்ளே நுழைய முடியும் என்று அது கூறுகிறது.

இந்த பட்டியலில் செல்பேசி மூலம் பயன்படுத்தும் பயன்பாடுகள், தொல்லை மற்றும் மோசடி மின்னஞ்சல்களின் பெருக்கம் ஆகியவை இறுதியாக இடம்பெற்றுள்ளன.

ஆனால் செல்பேசி பாதுகாப்பு குறித்து சைமன்டெக் அதிக முன்னுரிமை அளிக்கவில்லை. ஏனெனில், செல்பேசிகள் தற்போது சிக்கல் நிறைந்த ஒரு தொழில்நுட்பமாக மாறி வருகிறது. செல்பேசி வங்கி நடவடிக்கைகள் மற்றும் பிற நிதி தொடர்பான நடவடிக்கைகள் அதில் மேற்கொள்ளும்போது மட்டுமே ஹேக்கர்கள் அதில் மோசடி செய்யமுடியும்.

அதேபோல் மோசடி மின்னஞ்சல் அல்லது தொல்லை மின்னஞ்சல்களை க்ளிக் செய்ய வைக்க புதிய உத்திகளை பயன்படுத்தலாம். உதாரணமாக எம்பி.3 அல்லது ஃபிளாஷ் கோப்புகள் சேர்க்கப்படலாம்.

இணையதளத்தில் மேலும் மேலும் அதிக விஷயங்கள் சேர்க்கப்பட சேர்க்கப்பட பாதுகாப்பு விஷயங்கள் மேலும் சிக்கலாகவே போய் முடியும் என்று சைமன்டெக் எச்சரிக்கை செய்துள்ளது.