வலையுலகப் பிரபல விருதான பட்டாம்பூச்சி விருதினை எழுத்தாளரும், கவிஞருமான திவ்யா எனக்களித்திருக்கிறார். விருதுகள் ஒருவருடைய ஆற்றலை, திறமையை இன்னும் ஊக்குவிக்கும்படியாக வழங்கப்படுபவை. இவ் விருதும் அவ்வப்போது எழுதி வருமென்னைத் தொடர்ச்சியாகவும் நிறைவாகவும் எழுத ஊக்குவித்தபடி வந்துசேர்ந்துள்ளது. முயற்சிக்கிறேன். நன்றி திவ்யா !
இதை எழுதும் இவ்வேளையில் என்னை மேலும் எழுத உற்சாகப்படுத்தும் விதமாக விகடனின் இணைய இதழில் எனது கவிதைகளுக்கான இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், 'காதலர் தின ஸ்பெஷல்' இதழில் 'திருமண வாழ்க்கைச் சமன்பாடுகள்' எனும் ஆக்கமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இக் கணத்தில் எனது ஆக்கங்களைப் பிரசுரிக்கும் இதழ்கள்,குழுமங்கள், அவற்றின் ஆசிரியர்கள், எனது எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து, கருத்துக்கள் மூலம் என்னைச் செதுக்கி ஊக்குவிக்கும் நண்பர்கள், சக பதிவர்கள், வாசகர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகளைத் தெரிவிப்பதோடு உங்கள் அனைவரோடும் இவ்விருதினைப் பகிர்ந்துகொள்கிறேன் !
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்