அன்பின் நண்பர்களுக்கு,
இனிய வணக்கங்கள்.
முத்தமிழ் இணையத்தளம் மற்றும் பிரவாகம் ஆண்டு மலரில் பிரசுரமான எனது 'புதைகுழி வீடு'கவிதை, www.worldnews.com இன் தமிழ்க்குரலின் "கவிதை கேளுங்கள்" நிகழ்ச்சியில் 19-08-2008 முதல் 25-08-2008 வரை பிரபல அறிவிப்பாளர் சாத்தான்குளம் திரு.அப்துல் ஜப்பார் அவர்களது கம்பீரமான குரலில் ஒலிபரப்பாகி வருகிறது.
அதன் ஒலிக்கோப்பை இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இணைய வானொலிக்காக எனது கவிதையைத் தேர்ந்தெடுத்து தனது குரல் மூலம் மேம்படுத்திய திரு.அப்துல் ஜப்பார் அவர்களுக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றி !
வானொலி ஒலிபரப்பை ஒலிக்கோப்பாக மாற்றித்தந்த நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
25 comments:
கவிதை படித்தபோது வந்த பாதிப்பினைவிட திரு ஜப்பார் அவர்கள் வாசித்தபோது இன்னும் அதிகமாகவே வந்தது. இதுபற்றி குழுமத்தில் எழுதினாலும் கவிதை இணையவானொலியில் ஒலிபரப்பாவதில் மனம் மகிழ்ச்சி அடைந்து மறுபடி இங்கே வாழ்த்துகிறேன் ரிஷான்! வானொலியில் உங்கள் கவிதை இன்று ! நாளை இன்னும் அதிகமாய் பிரபலபத்திரிகைகளில் சின்னத்திரைகளில், வெள்ளித்திரைகளில் என்று பவனி வர மனம் கனிந்த வாழ்த்துகள்!
// நாளை இன்னும் அதிகமாய் பிரபலபத்திரிகைகளில் சின்னத்திரைகளில், வெள்ளித்திரைகளில் என்று பவனி வர மனம் கனிந்த வாழ்த்துகள்!//
வாழ்த்துக்கள் ரிஷான்.
அன்புடன் ரிஷானுக்கு வாழ்த்துகள் பல. ஜப்பார் ஐயாவின் குரலில் உங்கள் கவிதை அருமையாக இருக்கிறது. தமிழ் பிரவாகம் ஆண்டுமலரில் பிரசுரமான போது சரியாக பிரசுரிக்கப்படவில்லை என்பதில் இருந்த எனது வேதனையை ஜாப்பார் ஐயாவின் குரல் போக்கிவிட்டது. அவருக்கு எனது வணக்கங்களும் , நன்றியும் சமர்ப்பணமாகட்டும்.
அன்புடன்
சுவாதி
உங்கள் கவிதை இணைய வானொலிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும், ரிஷு! ஜப்பார் அவர்களும் உணர்வுபூர்வமாக வாசித்திருக்கிறார்.
//நாளை இன்னும் அதிகமாய் பிரபலபத்திரிகைகளில் சின்னத்திரைகளில், வெள்ளித்திரைகளில் என்று பவனி வர மனம் கனிந்த வாழ்த்துகள்!//
வழிமொழிகிறேன்!
அன்பின் ஷைலஜா,
//நாளை இன்னும் அதிகமாய் பிரபலபத்திரிகைகளில் சின்னத்திரைகளில், வெள்ளித்திரைகளில் என்று பவனி வர மனம் கனிந்த வாழ்த்துகள்!//
எனது ஒவ்வொரு முயற்சிகளின் போதும் இதுபோல முழுமனதோடு ஆசிர்வதிக்கிறீர்கள். உங்கள் அன்பும் நீங்கள் தரும் ஊக்கமும் என்னை உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
அன்பின் கார்த்திக்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சுவாதி அக்கா,
//அன்புடன் ரிஷானுக்கு வாழ்த்துகள் பல. ஜப்பார் ஐயாவின் குரலில் உங்கள் கவிதை அருமையாக இருக்கிறது. //
நிச்சயமாக சகோதரி.அப்துல் ஜப்பார் ஐயா அக்கவிதையை மிகக் கம்பீரமான குரலில் ஏற்ற இறக்கங்களோடு வாசிக்கையில் கவிதை மேலும் மேம்படுகின்றது.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
ரிஷான்
இந்தக் கவிதை தனி மடலில் பலரிடமிருந்தும் Fwdஇல் வந்தது!
அதுவும் அதன் ஈர்ப்பை அதிகப்படுத்தும் பரிமாணம் தான்!
ஜப்பார் குரலில் கேட்கும் போது, ஜீவனுள்ள பெண்ணொருத்தி, ஏங்கினால் எப்படியோ, அப்படி!
இன்று இணைய வானொலி!
நாளை இணையத் தொலைக்காட்சி!
எங்கும் கொடி கட்டிப் பறக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ரிஷான். இப்போதுதான் அக்கவிதையைப் படித்து விட்டு வருகிறேன். படிக்கும் போது இருந்த தாக்கத்தைப் பன்மடங்காக்கிற்று அதையே திரு. அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்கின்ற பொழுது.
உங்கள் கவிதைகள் திக்கெட்டும் ஒலித்திட வாழ்த்துக்கள்!
அன்பின் ரிஷான்
உங்கள் கவிதை இணைய வானொலிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாசிக்கப்பட்டமைக்கு மிக்க மகிழ்ச்சியும் வாழ்த்துகளும் நண்பரே.. மிகவும் சந்தோஷமாக இருந்தது.... மேலும் உங்கள் பணி தொடரட்டும்.....
கவிதையை படித்து முடித்தபோது, இதயம் கொஞ்சம் வலிப்பது போல் உணர்ந்தேன்.. இலங்கையில், தமிழர் பகுதியில் அமைதி திரும்ப இறைவனை வேண்டுகிறேன்....
அன்பின் கவிநயா,
//ரிஷு! ஜப்பார் அவர்களும் உணர்வுபூர்வமாக வாசித்திருக்கிறார்.//
ஆமாம் சகோதரி.
வருகைக்கும் அன்பார்ந்த வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி. :)
அன்பின் KRS,
//ஜப்பார் குரலில் கேட்கும் போது, ஜீவனுள்ள பெண்ணொருத்தி, ஏங்கினால் எப்படியோ, அப்படி!//
ஆமாம்..அது போல உணர்வுபூர்வமாக வாசித்திருக்கிறார்.
வருகைக்கும் இனிய வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
//உங்கள் கவிதைகள் திக்கெட்டும் ஒலித்திட வாழ்த்துக்கள்!//
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சக்தி,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
உங்கள் கவிதையின் ஒலிவடிவ
சுட்டியை வழங்கியதற்கு நன்றி
நண்பரே, கேட்டவுடன் மனதை
பிசைந்துவிட்டன அதன் வரிகள்!
கவிதையென்பது வெறும் பகட்டு
அலங்கார பொருள் அல்ல அதில்
பல இன்னல்களின் பதிவுகளும்
ஆற்றாமையின் குரலும் கூட
ஒலிக்கலாம் என்று தெரிந்தது
உங்களது உணர்ச்சி பிரவாகத்தில்
காலம் எத்தனையோ புண்களை
ஆற்றியிருக்கிறது,நம்புவோம்!
அவர் சரியாகத்தான் சொல்லி வாசித்திருக்கிறார்...
இது போல கவிதைகளுக்கான சூழல் வெகுவிரைவில் இல்லாமல் போகட்டும்...
தொடர்ந்து பயணிக்கட்டும் உங்கள் எழுத்துக்கள்,வாழ்த்துக்கள் ரிஷான்...
அன்பின் இசக்கிமுத்து,
//கவிதையை படித்து முடித்தபோது, இதயம் கொஞ்சம் வலிப்பது போல் உணர்ந்தேன்.. இலங்கையில், தமிழர் பகுதியில் அமைதி திரும்ப இறைவனை வேண்டுகிறேன்....//
உங்கள் வருகைக்கும், அன்பான வேண்டுதலுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் பாலா,
அழகான வரிகளில் உங்கள் வாழ்த்துக்களைத் தந்திருக்கிறீர்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் கிங்,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
ரிஷான் ,
உங்கள் கவிதையை ஒலி வடிவத்தில் வானொலியில் கேட்டதில் மகிழ்ச்சி.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!!
அன்பின் திவ்யா,
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)
Congrats Dear Dude
அன்பின் தமிழ்நெஞ்சம்,
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
Post a Comment