நீங்கள் ஹெச்.பி.எல்., டெல் அல்லது தோஷிபா லேப் டொப் பயன்படுத்துகிறீர்களா? அதில், Sony லேப்டொப் பற்றரி பயன்படுத்தப்படுகிறதா?
உடனே Sony டீலர் அல்லது இன்டர்நெட் மூலம் உங்கள் பற்றரிக்குப் பதிலாக புதிய பற்றரி ஒன்றை பெற்றுக்கொள்ளுங்கள். ஏற்கனவே வழங்கிய பற்றரி சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை என்றும், அதனால் தீங்கு ஏற்படும் என்றும் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் கொடுத்த தீர்ப்பை அடுத்து இந்த ஏற்பாடு நடந்து வருகிறது.
இந்த லித்தியம் அயன் பற்றரியைத் தொடர்ந்து பயன்படுத்துகையில், அதில் சூடு ஏற்பட்டு லேப்டொப் பாழாகிப் போனது மட்டுமின்றி ஒரு சிலருக்கு தீக்காயம் ஏற்பட்டதாக புகார் பதிவாகி உள்ளது.
இந்த வகை பற்றரி ஒரு லட்சம் வழங்கப்பட்டதாகவும், அவற்றில் 35 ஆயிரம் அமெரிக்காவிலும், மீதம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தகவல்களுக்கும், எப்படி பற்றரியை மாற்றலாம் என்பதற்கும் (http://news.sel.sony.com/en/press_room/cor GßÓ porate_news/release/38052.html) முகவரியில் உள்ள தளத்திற்கு சென்று பார்க்கலாம்.
No comments:
Post a Comment