Monday, May 18, 2009

வலைப்பதிவராகி என்ன சாதித்தேன் ?

சில நாட்கள் ஓய்வுக்குப் பின் என் அன்பு உள்ளங்களான உங்களிடம் மீண்டு வந்துவிட்டேன். இன்று முதல் மீண்டும் வழமை போலவே உங்களிடையே கலந்துகொள்ள முயல்கிறேன். எனது உடல்நலக் குறைவின் நாட்களில் என்னிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரிக்கவென பல அன்பர்கள் முயன்றதாக நண்பர்கள் கூறினர். என்னால் உரையாட முடியாத நிலையிலிருந்தேன். மன்னியுங்கள்.

இணையம் வந்து பார்த்தபொழுதுதான் எத்தனை உள்ளங்கள் எனக்கென வேண்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. மிகுந்த மகிழ்வும், அதேவேளை உங்களையெல்லாம் கவலைக்குள் ஆழ்த்திவிட்டேனே என்ற வருத்தமும் ஒருசேர மிகைத்தது. வலைப்பதிவராகி என்ன சாதித்தேனென யாரேனும் என்னிடம் கேட்டால் சுட்டிக் காட்டக் கூடியளவு அற்புதமான நண்பர்களைப் பெற்றிருக்கிறேனென தைரியமாக உங்களைக் கை காட்டலாம் நான்.

இவ் வேளை எனது ஆரோக்கியத்துக்கான கூட்டுப் பிரார்த்தனைக்கென நண்பர்களை ஒருங்கிணைக்கத் தம் வலைப்பதிவுகளிலும், குழுமங்களிலும் பதிவுகளிட்டிருந்த சகோதரி ஃபஹீமா ஜஹான்(பதிவு ஒன்று, பதிவு இரண்டு, பதிவு மூன்று), சகோதரி ஷைலஜா, சகோதரி தூயா, சகோதரி சாந்தி(தமிழமுதம்), சகோதரி ஆயிஷா மற்றும் நண்பர்கள் எம்.எம்.அப்துல்லாஹ், அபி அப்பா, ஆயில்யன், கண்ணபிரான் ரவிஷங்கர், தாயுமானவன் வெங்கட், குசும்பன், ஆசாத் ஜி, புகாரி ஐயா (அன்புடன்), சித்தன் ஐயா (யுகமாயினி), சக்தி சக்திதாசன் ஐயா அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் !

நலம் விசாரித்துத் தனி மின்னஞ்சல்கள் அனுப்பிக் காத்திருந்த மற்றும் எனது நலத்துக்கெனப் பிரார்த்தித்த அன்பு உள்ளங்கள் ஷிப்லி அஹ்மத், என்.சுரேஷ், பிரேம்குமார், லக்கி சாஜஹான், தஞ்சை-மீரான், சாபு ஐயா, கார்த்திக், மீறான் அன்வர், சகோதரி சுவாதி, அஞ்சலி, வேணு ஐயா, பாஸ்கர், முகமூடி, துரை, ஃபோநிஒ சிவகுமார், சகோதரி பூங்குழலி, அஹ்மத் சுபைர், சகோதரி நட்சத்திரா, காமேஷ், மஞ்சூர் ராசா, சசி சுப்ரமணியன், சுதர்சன், வேந்தன் அரசு, ஷேன் வேல், சகோதரி வாணி, ராம் கோபால், பாலாஜி பாஸ்கரன், என்.சுரேஷ், அப்பனா, சிவா, சகோதரி உமா ஷக்தி, வினோத் குமார், மண்குதிரை, ஆல்பர்ட் பெர்ணாண்டோ, சகோதரி ராமலக்ஷ்மி, விசாலம் அம்மா, சகோதரி கீதா சாம்பசிவம், பொன்சந்தர், சகோதரி மீனா முத்து, சகோதரி ஜெயஸ்ரீ ஷங்கர், தேகி, சென்ஷி ஐயா, விக்னேஷ்வரன், கண்ணபிரான் ரவிஷங்கர், யோகன் -பாரிஸ், தேவ், சகோதரி சேதுக்கரசி,கந்தசாமி நாகராஜன், வெ.சுப்ரமணியன், விஜியின் சுதன், சகோதரி தேனுஷா, சக்திவேல் கதிர்வேல், திரு,திருமதி வரதராஜா, சரவணக்குமார் MSK, சகோதரி சித்ரா செல்லதுரை, பிகே சிவகுமார், சகோதரி மதுமிதா, ஸன்ஃபர், சகோதரி சக்தி ராசையா, இப்னு ஹம்துன், சகோதரி காந்தி ஜெகன்னாதன், சீனா ஐயா, செல்வன், சகோதரி அன்புடன் அருணா, கார்டின், ரசிகவ் ஞானியார், செந்தில்குமார், பழமைபேசி, கிரிஜாமணாளன் ஐயா, பிச்சுமணி, சகோதரி ஆயிஷா, ஹரன், தமிழ்ப்பறவை, ஆளவந்தான், ச்சின்னப்பையன், சகோதரி அமுதா, சகோதரி புதுகைத்தென்றல், வேத்தியன், டொக்டர்.எம்.கே.முருகானந்தன், T.V.ராதாகிருஷ்ணன், நரேஷ்குமார், சகோதரி சந்தனமுல்லை, குப்பன் யாஹூ, அமிர்தவர்ஷினி அம்மா, அமல், முரளிகண்ணன், ராஜ நடராஜன், ஜெயக்குமார், சகோதரி திவ்யப்ரியா,S.A. நவாஸுத்தீன், சகோதரி புகலினி, கார்க்கி, ஆதிமூலகிருஷ்ணன், இயற்கை, சுரேஷ், நசரேயன், டொன் லீ, ஆகாயநதி, திகழ்மிளிர், தமிழன்-கறுப்பி, இராகவன் நைஜீரியா, இளா, தேவன்மாயம், அ.மு.செய்யது, சகோதரி துளசி கோபால், கானாபிரபா, ஜோதிபாரதி, முரளிகண்ணன், சீமாச்சு, ஜோ, மதுவதனன் மௌ,சகோதரி வல்லி சிம்ஹன், வேந்தன், தீப்பெட்டி, சகோதரி சின்ன அம்மிணி, விஷ்ணு, லோகு, அம்பி, சகோதரி வித்யா, சகோதரி முத்துலெட்சுமி, நான் ஆதவன், மோனிபுவன் அம்மா, கும்க்கி, delphine, சகோதரி ரம்யா, சந்தோஷ், ச.முத்துவேல், தேவஅபிரா, தமிழ்நெஞ்சம், சகோதரி தமிழ்நதி, ஜீவன், மஹேஷ், கேபிள் ஷங்கர், மாசற்ற கொடி, கிரி, லக்கிலுக், டோண்டு ராகவன், வாஞ்ஜூர், வடகரை வேலன், வால்பையன், அனுஜன்யா, குடந்தை.அன்புமணி, வெயிலான், சகோதரி ஜோதி, சகோதரி மாதேவி, டக்ளஸ், கார்த்திகைப் பாண்டியன், சதீசு குமார், ராஜ நடராஜன், பிரேம்ஜி, மாதவராஜ், துரியோதனன்,கடையம் ஆனந்த், சஞ்சய் காந்தி, ஊர்சுத்தி சாதிக், தஞ்சாவூரான், தங்கராசா ஜீவராஜ், பட்டாம்பூச்சி, DJ, அறிவே தெய்வம், நெல்லை காந்த், பெயரிலி, சகோதரி தாரணி பிரியா, கீழை ராசா, நசரேயன், சதானந்தன், சர்வேசன், மதிபாலா, சுரேகா, ராகவ், மதுரையம்பதி, சகோதரி சிந்தாமணி, கார்த்திகேயன் G, Dr.M.சிவஷங்கர், குமார்(சிங்கை), தமிழ்த்தேனீ ஐயா, சிறீதரன், ஏ.சுகுமாரன், நா.கண்ணன் ஐயா, அசரீரி, பர்ஸான்,
சித்தாந்தன், அம்பலம்-பிரபா, சா.கி.நடராஜன், வடிவேலன் ஆர் இன்னும் தொலைபேசி மூலம் அணுகியும் என்னுடன் பேச முடியாமல் போன அன்பு உள்ளங்கள், பெயர் குறிப்பிடாமலே எனக்காகப் பிரார்த்தித்தவர்கள்.. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பலர் தனி மின்னஞ்சல்களில் உடல் நலத்துக்கு என்ன ஆனதெனவும், மருத்துவமனை அனுபவங்களையும் பற்றிக் கேட்டிருந்தீர்கள். அது பற்றி விரிவாக அடுத்த பதிவில் தருகிறேன்.

மீண்டும் நன்றிகள் இனிய நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

54 comments:

கோவி.கண்ணன் said...

ரிஷான்,

தாங்கள் உடல் நிலை சரியில்லாத வேளைகளில் தமிழகத்தில் இருந்தேன், தகவல் தற்பொழுது தான் அறிந்தேன்.

நலமடைந்து மீண்டும் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

சந்தனமுல்லை said...

கடவுளுக்கு நன்றி!

மீண்டும் வந்ததில் மிக்க மகிழ்ச்சி ரிஷான்! :-)

ஆயில்யன் said...

மிக்க மகிழ்ச்சி!

Amal said...

ரீஷான் மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துகள்!

KARTHIK said...

யோவ் எங்கையா போனீங்க

திறும்ப வந்ததுல ரொம்ப சந்தோசம்.

VANJOOR said...

ரிஷான் ஷெரீப்.

மிக்க மகிழ்ச்சி.மனம் நிறைவடைந்தது.
எல்லாப் புகழும் இறைய‌வனுக்கே.

வாஞ்சையுடன் வாஞ்சூர்.

http://vanjoor-vanjoor.blogspot.com/

லக்கிலுக் said...

ரிஷான்! நலமடைந்ததில் மகிழ்ச்சி. உங்களை தொடர்ந்து பணியாற்ற எல்லோருக்கும் பெரியவன் வாய்ப்பளித்திருக்கிறான்.

வாழ்த்துகள்!

anujanya said...

அன்பின் ரிஷான்,

இப்ப தான் எல்லோருக்கும் நிம்மதி. எல்லோருக்குமே மிக மிகப் பதட்டமாக இருந்தது. குறிப்பாக அபி அப்பா.

உடல் நலம் விரைவில் தேறிட பிரார்த்தனைகளும், வாழ்த்துகளும்.

அனுஜன்யா

Vishnu - விஷ்ணு said...

கடவுளுக்கு நன்றி!
மிக்க மகிழ்ச்சி.

Venkatesh said...

ரிஷான்,

தங்கள் நலமடைந்து மீண்டும் வந்ததற்கு மகிழ்ச்சி மற்றும் கடவுளுக்கு நன்றி!!

வெங்கடேஷ்

மங்களூர் சிவா said...

மிக்க மகிழ்ச்சி ரிஷான்.

ALIF AHAMED said...

நலமடைந்ததில் மகிழ்ச்சி.

Anonymous said...

வாழ்த்துகள் நண்பரே!

நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை.

ALIF AHAMED said...

ஆயில்யன் இப்ப ஒகே வா ??

போன் நம்பர் கேட்டு வாங்கிவைச்சிக்கங்க :)

G.Ragavan said...

ஹாய் ரிஷான். உங்கள் உடல்நலம் தேறி மீண்டும் முழுநலத்தோடு வலைப்பதிய வந்தமைக்கு மகிழ்ச்சி. எல்லாம் வல்ல இறைவன் அருளால் நலமே பெருகட்டும். மகிழ்ச்சி பொங்கும் நாட்கள் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

Anonymous said...

Alhamdhulillah. Very nice to have you back

சென்ஷி said...

ரீஷான் மீண்டு(ம்) வந்ததற்கு வாழ்த்துகள்!

துளசி கோபால் said...

உடல்நலமடைந்து வந்ததுக்கு ரொம்பவே மகிழ்ச்சி.

இந்தப் பதிவுலே ஒரு 'போனஸ்' இருக்கே அதுக்கே நன்றிப்பா:-))))))

தமிழ்நதி said...

அன்பின் ரிஷான்,

எங்களை ஏன் கலங்கடித்தீர்கள் என்று உங்களைக் கேட்கவேண்டும். அதற்கு நீங்கள் இன்னமும் நன்றாகத் தேறிவரவேண்டும். இருக்கும் வேதனைகள் போதும். உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களும் இப்படிச் செய்யலாமா? மிகவும் கவலையாக இருந்தோம். மீண்டு வந்ததில் மிகவும் மகிழ்ச்சி. நிறையப் பேசவேண்டும் தம்பி. ஒருநாள் 'சாட்'இல் பேசுகிறேன். இறைவனுக்கு நன்றி என்று எப்படிச் சொல்வேன்? இத்தனை இழப்புகளைப் பார்த்தபிறகு? உங்கள் நல்ல மனதினால் மீண்டு வந்தீர்கள்.

சக்தி said...

நலம் அடைந்து தங்களின் பதிவைக் காணும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

தமிழன்-கறுப்பி... said...

வாங்கோ ரிஷான்...

நிறைய சந்தோசம்...

அமிர்தவர்ஷினி அம்மா said...

மீண்டு(ம்) வந்ததில் மிக்க மகிழ்ச்சி

எம்.எம்.அப்துல்லா said...

எல்லாப் புகழும் ஒருவனுக்கே


நலமோடு உங்களைச் சந்தித்ததில் மனம் மகிழ்ந்து போகின்றது

:)

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி அண்ணா!!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரிஷான் நலமோடு மீண்டு வந்ததில் மகிழ்ச்சி.. உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்..:-)

ராமலக்ஷ்மி said...

வாருங்கள் ரிஷான். எல்லோரும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்கிறோம்:)!

selventhiran said...

வெல்கம் பேக் ரிஷான்!

ஆயில்யன் said...

//மின்னுது மின்னல் said...

ஆயில்யன் இப்ப ஒகே வா ??

போன் நம்பர் கேட்டு வாங்கிவைச்சிக்கங்க :)
///

:))

அன்புடன் அருணா said...

மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்....வலைப்பூ எங்கே ஓடிவிடப் போகிறது???நிதானமாக எழுதலாம்.....முதலில் முழுவதுமாகக் குணமடைந்து வாருங்கள்..
அன்புடன் அருணா

கிரி said...

வாங்க வாங்க ரிஷான்

இனி அடித்து பட்டய கிளப்புங்க ... உங்களின் நலனுக்காக பலர் வேண்டியது என்னால் மறக்கவே முடியாது. இப்படி நண்பர்களை பெற்ற நீங்கள் உண்மையில் மிக சிறந்தவர் தான்.

வழக்கம் போல பதிவுகள் எழுதி உற்சாகமாக வாங்க

Anonymous said...

ஆண்டவனுக்கு நன்றிகள்! ரிஷான் இப்போதான் நிம்மதியா ஆச்சு!

அன்புடன்
அபிஅப்பா

S.A. நவாஸுதீன் said...

மிக்க மகிழ்ச்சி. அல்லாஹ் போதுமானவன்.

Anonymous said...

வாங்க ரிஷான்.

இப்பத்தான் நிம்மதியா இருக்கு.

Thamira said...

நலமோடு உங்களைச் சந்தித்ததில் மனம் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உணர்கிறோம்..

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தற்போது நலமாக இருக்கிறீர்களா ரிஷான்?
தங்கள் வருகை ஆறுதல் அளிக்கிறது.

Gowripriya said...

மகிழ்ச்சி ரிஷான்... இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விஷயம் அறிந்தேன்.. கவலையாக இருந்தது.... இறைவனுக்கு நன்றி.... விரைவில் நீங்கள் முழு உடல் நலம் பெறவேண்டும்.. காத்துக் கொண்டிருப்போம் நாங்களும் தமிழும்...

ஃபஹீமாஜஹான் said...

தம்பி ரிஷான்,2 வாரங்களுக்கு முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறியிருக்கிறார்.நீங்கள் எதிர்கொண்ட பயங்கரத்தின் படி 2 மாதங்களுக்கு முழு ஓய்வில் இருக்கச் சொல்லியிருக்க வேண்டும். தயவு செய்து பூரண குணமடைந்ததும் இணையம் வாருங்கள்.

ச.முத்துவேல் said...

மகிழ்ச்சி. தொடர்ந்து உற்சாகமாய் செயல்படுங்கள்.:)))))))

pudugaithendral said...

மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கு ரிஷான்.

ஆண்டவனுக்கு நன்றிகள்.

வாங்க வந்து பழைய பொலிவோடு கலக்குங்க.

குசும்பன் said...

மிக்க மகிழ்ச்சி ரிஷான்!

MSK / Saravana said...

Welcome back rishaan.. and take care.. :)

மாதேவி said...

உடல்நலமடைந்து வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

Sanjai Gandhi said...

அடேய் பயலே.. என்னடா இப்டி பண்ணிட்ட.. இப்போ ஆரோக்கியம் தானே.. இனியாவது ஜாக்கிறதையாக இருப்பா..

இராம்/Raam said...

குணமடைந்து மீண்டும் வந்ததது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....

:)

- யெஸ்.பாலபாரதி said...

ரிஷான்,

வாழ்த்துக்கள்..

சென்னையில் உனக்காகவும் ஒரு சந்திப்பு நடத்தவேண்டியதெல்லாம் இருக்கு..! அதுநாள தப்பிக்க முடியாது. :)

உடல்நலம் தேறி வந்தமைக்கு மீண்டும் வாழ்த்துக்கள் தம்பி!

நசரேயன் said...

மிக்க மகிழ்ச்சி

Anonymous said...

Welcome back !

Tech Shankar said...

நீங்கள் மீண்டு வந்தது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி

கண்ணில் ஆனந்தக் கண்ணீருடன் எழுதுகிறேன்.

பஹீமா - எழுதிய பின்னூட்டத்திற்கும் நன்றி.

அன்பரசு said...

மிகுந்த மகிழ்ச்சி ரிஷான்! பிரார்த்தனைகளைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாகவும் உங்கள் மீது பொறாமையாகவும் உள்ளது. பூரண நலம் பெறும் வரை கண்டிப்பாக ஓய்வு அவசியம்!

பாச மலர் / Paasa Malar said...

நல்வரவு ரிஷான்....உடல் நலத்தை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள்

கோவி.கண்ணன்,
சந்தனமுல்லை,
ஆயில்யன்,
அமல்,
கார்த்திக்,
வாஞ்சூர்,
லக்கிலுக்,
அனுஜன்யா,
விஷ்ணு,
வெங்கடேஷ் (திரட்டி.காம்),
மங்களூர் சிவா,
மின்னுது மின்னல்,
அனானி,
G.இராகவன்,
சென்ஷி,
துளசி டீச்சர்,
தமிழ்நதி,
சக்தி,
தமிழன் - கறுப்பி,
அமிர்தவர்ஷினி அம்மா,
எம்.எம்.அப்துல்லாஹ்,
கவின்,
கார்த்திகைப் பாண்டியன்,
ராமலக்ஷ்மி,
செல்வேந்திரன்,
அன்புடன் அருணா,
கிரி,
அபி அப்பா,
S.A.நவாஸுத்தீன்,
வடகரை வேலன்,
ஆதிமூலகிருஷ்ணன்,
ஜோதி பாரதி,
கௌரிப்ரியா,
ஃபஹீமா ஜஹான்,
ச.முத்துவேல்,
புதுகைத்தென்றல்,
குசும்பன்,
சரவணக்குமார் MSK,
மாதேவி,
சஞ்சய் காந்தி,
இராம்,
யெஸ்.பாலபாரதி,
நசரேயன்,
தமிழ் நெஞ்சம்,
பனங்காட்டான்,
பாச மலர்,

மிகுந்த சோர்வோடு வந்த வேளை உங்கள் எல்லோரினதும் அன்பான வரவேற்பு மிகப் பெரியளவிலான உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் அளித்தது. மீண்டும் இயங்கும் ஆர்வத்தை அளித்தது.

உங்கள் அனைவரினதும் வருகைக்கும் அன்பான வரவேற்புக்களுக்கும் நன்றிகள் நண்பர்களே !

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்.

M.Rishan Shareef said...

நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க விகடனில் தொடராக வெளிவரும் எனது மருத்துவமனை அனுபவங்களை http://mrishansharif.blogspot.com/2009/05/01.html இங்கு பதிவாக இட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது பாருங்கள் !

malar said...

எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு முழுமையான சுகத்தையும் மன அமைதியை உங்களுக்கும் உங்கள் குடுபத்திற்கும் தந்தருள்வானாக .

ஆமீன் ...அல்ஹம்ட்துலில்லா

M.Rishan Shareef said...

அன்பின் மலர்,

//எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு முழுமையான சுகத்தையும் மன அமைதியை உங்களுக்கும் உங்கள் குடுபத்திற்கும் தந்தருள்வானாக .

ஆமீன் ...அல்ஹம்ட்துலில்லா//

உங்கள் பிரார்த்தனை என்னை மகிழ்விக்கிறது. உங்களுக்கும் !!!

ஜஸாக்குமுல்லாஹு ஹய்ர்.

நன்றி சகோதரி !