* பிரபல எழுத்தாளரும் சக பதிவருமான திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரையுடன் இணைந்து பதிவுலகத்திலிருந்து தொகுத்து, கடந்த வருடத்தின் இறுதி வாரத்தில் (30.12.2009) வம்சி பதிப்பகம் மூலம் வெளியிட்ட 'கிளிஞ்சல்கள் பறக்கின்றன (கவிதைத் தொகுப்பு), மரப்பாச்சியின் சில ஆடைகள் (சிறுகதைத் தொகுப்பு) ஆகிய இரண்டு தொகுப்புக்களிலும் எனது கவிதை (அவகாசம்), சிறுகதை (முற்றுப்புள்ளி) ஆகியவற்றை இணைத்துத் தொகுத்திருந்தார். தமிழ் வலைப்பதிவர்களுக்கு மிகவும் உற்சாகமூட்டக்கூடியதாகவும் காத்திரமாக மேலும் தொடர்ந்து எழுதச் செய்யக் கூடியதாகவுமான இம் முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.
நண்பர் திரு.மாதவராஜ், திரு.பவா செல்லத்துரை, வம்சி பதிப்பகம் மற்றும் இத் தொகுப்புக்களுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* தமிழ்ப்பதிவுகளின் பிரபல திரட்டியான யாழ்தேவி புதிய வருடத்தின் ஜனவரி முதல் வார நட்சத்திரப் பதிவராக என்னை அறிவித்திருந்தது. இதனால் ஜனவரி, 2010 புதுவருடமே மகிழ்ச்சிக்குரியதாகவும் ஊக்குவிப்பதாகவும் என்னை விடாமல் இயங்க உற்சாகமளிப்பதாகவும் அமைந்துவிட்டது. அத்தோடு பல புதிய வலைப்பதிவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றுத்தந்தது.
அதனைத் தொடர்ந்து இலங்கையிலிருந்து வெளிவரும் தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு இதழ் (17.01.2010) என்னைப் பற்றிய குறிப்புக்களோடு எனது கட்டுரையொன்றையும் பிரசுரித்திருந்தது. இலங்கை தமிழ்ப் பத்திரிகையுலக எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரது தனிப்பட்ட பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் அறிமுகங்களும் இதனால் கிடைத்தது. இக்கணத்தில் 'யாழ்தேவி' திரட்டிக்கும் அதன் உரிமையாள நண்பர்களுக்கும், தினக்குரல் பத்திரிகைக்கும் எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* இலங்கையின் பிரபல ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலைமகன் பைரூஸ் அவரது வலைத்தளத்தில் என்னைப் பற்றி எழுதியிருந்தார். எனது ஒவ்வொரு பதிவுகளின் போதும் தனிப்பட்ட மின்னஞ்சல்களிலும், கருத்துக்களிலும் எனது ஆக்கங்களைப் பற்றி எழுதும் இவரது விமர்சனங்களும், கருத்துக்களும் என்னை மேலும் எழுத ஊக்குவிப்பன. நண்பர் திரு.பைரூஸுக்கு எனது மனமார்ந்த நன்றியை இப் பதிவின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
* இம் மாதம் (பெப்ரவரி 2010), இந்தியாவிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் 'கலைமகள்' இலக்கியக் குடும்ப மாத இதழில் 'இணையத்தில் எழுதுகிறார்கள்; இதயத்தில் நுழைகிறார்கள்' எனும் தலைப்பில் எழுதும் எழுத்தாளர் சகோதரி ஷைலஜா, சக பதிவர்கள் திரு.SP.VR.சுப்பையா, அம்பி (ரங்கராமன்), திருமதி துளசி கோபால் ஆகியோருடன் எனது கவிதையொன்றோடு என்னையும் அறிமுகப்படுத்தியிருந்தார். பல இந்திய எழுத்தாளர்களையும், நண்பர்களையும் இந்தக் கட்டுரை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சக பதிவர்களுக்கு வாழ்த்துக்களோடு இக் கட்டுரைக்கு என்னைத் தேர்ந்தெடுத்தற்காக இப் பதிவின் மூலமாக சகோதரி ஷைலஜாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்தோடு நான் மறக்க முடியாதவர்கள் இன்னுமிருக்கிறார்கள். இலங்கையில் எனக்குக் கிடைக்காத இந்திய வார, மாத இதழ்களை எனக்காக வாங்கிச் சேகரித்து வைத்திருக்கும் எழுத்தாளர் தோழி உமா சக்தி, எழுத்தாளர் நண்பர் பி.ஏ.ஷேக் தாவூத் மற்றும் வெளிவரும் எனது ஆக்கங்களின் பக்கங்களை உடனுக்குடன் (ஸ்கேன் Scan) செய்து அனுப்பிவைக்கும் அன்புச் சகோதரி ராமலக்ஷ்மி. இக் கணத்தில் இவர்களையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.
உலகின் ஒரு மூலையிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் எனக்கு இவை அனைத்துமே எனது எழுத்துக்களுக்கான வாசகர் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்திருப்பதோடு, நல்ல விமர்சனக் கருத்துக்களையும் பெற்றுத் தந்திருக்கிறது. எனது எழுத்துக்களை மேம்படுத்த தொடர்ந்தும் உங்கள் அனைவரதும் வாழ்த்துக்களும் விமர்சனங்களும் நிச்சயம் உதவும். அன்பான சக பதிவர்களும், வாசகர்களும் இல்லாவிடில் இன்று நானில்லை.
நன்றி அன்பு நண்பர்களே !
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
36 comments:
அட!, வாழ்த்துகள்!!
சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!
வாழ்த்துக்கள் ரிஷான்
:)
மகிழ்வான தருணங்கள் ரிஷான்.. வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் ரிஷான்.
சாதனைகள் மேலும் புரிய வாழ்த்துகள் ரிஷான்!
"இணைய தளபதி" நண்பன் ரிஷான்,
தங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் இத்தகைய பாராட்டுகளுக்கு உரிய தகுதி உள்ளவை தான். சகோதரி ஷைலஜா சொன்னது போல "You deserve it little Rishan". திரு. மாதவராஜ், பைரூஸ், ஷைலஜா, உமா ஷக்தி , ராமலக்ஷ்மி , யாழ்தேவி மற்றும் தினக்குரலுக்கு உன்னை வாழ்த்தியமைக்காக என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
(குறிப்பு: சகோதரி ஷைலஜாவுக்கு நீங்கள் இணைய தளபதி, இலங்கை புயல் என்று பட்டம் கொடுத்த பிறகு அந்த பட்டத்தோடு தான் தன்னை அழைக்க வேண்டுமென படாத பாடு படுத்துகிறார் ரிஷான். அதனால் தான் மேலே இணைய தளபதி என்று அடைமொழியை பயன்படுத்தியிருக்கின்றேன்.)
நண்பரே எழுத்து துறையில் நீங்கள் இன்னும் பல உயரிய இடங்களை அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.
// பி.ஏ.ஷேக் தாவூத் said...
"இணைய தளபதி" நண்பன் ரிஷான்,
தங்களுடைய ஆக்கங்கள் அனைத்தும் இத்தகைய பாராட்டுகளுக்கு உரிய தகுதி உள்ளவை தான். சகோதரி ஷைலஜா சொன்னது போல "You deserve it little Rishan". திரு. மாதவராஜ், பைரூஸ், ஷைலஜா, உமா ஷக்தி , ராமலக்ஷ்மி , யாழ்தேவி மற்றும் தினக்குரலுக்கு உன்னை வாழ்த்தியமைக்காக என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
(குறிப்பு: சகோதரி ஷைலஜாவுக்கு நீங்கள் இணைய தளபதி, இலங்கை புயல் என்று பட்டம் கொடுத்த பிறகு அந்த பட்டத்தோடு தான் தன்னை அழைக்க வேண்டுமென படாத பாடு படுத்துகிறார் ரிஷான். அதனால் தான் மேலே இணைய தளபதி என்று அடைமொழியை பயன்படுத்தியிருக்கின்றேன்.)
////
ஆமாம் சகோதரரே ! ரிஷானுக்கு த்ரிஷான் என்றும் குழுவில் பெயர் உண்டு உங்களுக்குத்தெரியுமா ?:)அந்தப்பேரும் இணையதளபதிக்கு ரொம்பப்பிடிக்கும்னு நினைக்கிறேன்!:)
வாழ்த்துக்கள் ரிஷான்
- கிரகம்
ஓஹோ த்ரிஷான் என்ற பெயருமா? இலங்கை புயல் என்னிடம் இதை சொல்லவேயில்லை. பொதுவாக த்ரிஷா, அசின் போன்றோரை ஆண்ட்டி என்று தான் ரிஷான் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
நீங்கள் , சகோதரி பஹிமா ஜஹான் போன்றவர்கள் கொடுத்த செல்லத்தினால் தான் ரிஷான் இபப்டியிருக்கின்றார். அது மட்டுமல்ல கரோக்கியில் பாட்டு பாடி அதை கேட்க சொல்லியும் படாத பாடு படுத்துகிறார். (குறிப்பு: பாடல் நல்லா இருந்தது என்று சொன்னால் தான் தப்பிக்க முடியும்.)
வாழ்த்துக்கள் ரிஷான்
எப்போதும் பதிவுலகத்தில் மிளிருவதைப்போலவே என்றும் மிளிருங்கள்
வாழ்த்துக்கள்
சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
.ஏ.ஷேக் தாவூத் said... February 9, 2010 3:01 PM
ஓஹோ த்ரிஷான் என்ற பெயருமா? இலங்கை புயல் என்னிடம் இதை சொல்லவேயில்லை. பொதுவாக த்ரிஷா, அசின் போன்றோரை ஆண்ட்டி என்று தான் ரிஷான் சொல்ல நான் கேட்டிருக்கின்றேன்.
நீங்கள் , சகோதரி பஹிமா ஜஹான் போன்றவர்கள் கொடுத்த செல்லத்தினால் தான் ரிஷான் இபப்டியிருக்கின்றார். அது மட்டுமல்ல கரோக்கியில் பாட்டு பாடி அதை கேட்க சொல்லியும் படாத பாடு படுத்துகிறார். (குறிப்பு: பாடல் நல்லா இருந்தது என்று சொன்னால் தான் தப்பிக்க முடியும்.)
....../>>>
what! த்ரிஷா ஆண்ட்டியா? ரிஷான் அப்படி கனவிலும் சொல்லமாடடரே!!
அன்பின் நண்பன் ரிஷான் !
தங்களின் அசுரமான வளர்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
வலைப் பதிவின் மூலம் இன்னொரு இலக்கிய தொடுபுள்ளியை
நோக்கி வேகமாக நீங்கள் நகர்வது ஆரோக்கியமாகவே உள்ளது
இன்னும் ஞாபகிக்றேன் நமது பாடசாலை காலத்தை...
நாச்சியாதீவு பர்வீன்.
வாழ்த்துகள்
வாழ்த்துகள் அன்பரே
ஆகா எத்தனை பட்டங்கள் !!!!!!வாழ்த்துகள் ரிஷான் .இன்னமும் பட்டங்களும் சிறப்புகளும் பெற வாழ்த்துகள்
நன்றி ரிஷான்...
தங்கள் அருமையான எழுத்துக்களை புத்தகமாக்க்க அனுமதியளித்ததற்கு நான் நன்றிதான் தெரிவிக்க வேண்டும்.
அன்பின் சுபாங்கன்,
//அட!, வாழ்த்துகள்!!//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
எனது ஒவ்வொரு பதிவின் போதும் உடனுக்குடன் வந்து கருத்தளிப்பதோடு, இந்திய இதழ்களில் வெளியாகும் ஆக்கங்களை புகைப்படப் பிரதிகளாக்கி அனுப்பி என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும் உங்களை எப்பொழுதும் மறக்கவியலாது.
//சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ரிஷான்!//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி. :)
அன்பின் ஸ்ரீ சரவணகுமார்,
//வாழ்த்துக்கள் ரிஷான்//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சென்ஷி,
//:)
மகிழ்வான தருணங்கள் ரிஷான்.. வாழ்த்துக்கள்!//
:)
நிச்சயமாக மகிழ்வான தருணங்கள்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஏக்நாத் ராஜ்,
//வாழ்த்துகள் ரிஷான்.//
:)
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஷைலஜா அக்கா,
//சாதனைகள் மேலும் புரிய வாழ்த்துகள் ரிஷான்!//
கலைமகளில் சிறப்பாக எழுதியிருந்தீர்கள். உங்கள் எழுத்துக்களால் இன்னும் பரவலான வாசகர் வட்டமொன்று எனக்குக் கிடைத்துள்ளது அக்கா.
அதற்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அக்கா. :)
அன்பின் பி.ஏ.ஷேக்தாவூத்,
//நண்பரே எழுத்து துறையில் நீங்கள் இன்னும் பல உயரிய இடங்களை அடைய வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.//
அன்பான உங்கள் பிரார்த்தனை தொடரட்டும். வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
அன்பின் கிரகம்,
//வாழ்த்துக்கள் ரிஷான்//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கரவைக் குரல்,
//வாழ்த்துக்கள் ரிஷான்
எப்போதும் பதிவுலகத்தில் மிளிருவதைப்போலவே என்றும் மிளிருங்கள்
வாழ்த்துக்கள்//
உங்கள் அன்பான வார்த்தைகள் பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் த.ஜீவராஜ்,
//சாதனைகள் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் நாச்சியாதீவு பர்வீன்,
//அன்பின் நண்பன் ரிஷான் !
தங்களின் அசுரமான வளர்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்,
வலைப் பதிவின் மூலம் இன்னொரு இலக்கிய தொடுபுள்ளியை
நோக்கி வேகமாக நீங்கள் நகர்வது ஆரோக்கியமாகவே உள்ளது
இன்னும் ஞாபகிக்றேன் நமது பாடசாலை காலத்தை...
நாச்சியாதீவு பர்வீன்.//
உங்கள் அன்பான வாழ்த்துக்களில் பெரிதும் மகிழ்கிறேன். தொலைபேசியிலும் அழைத்து வாழ்த்தினீர்கள். மீண்டும் உங்களைச் சந்திக்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா :)
அன்பின் திகழ்,
//வாழ்த்துகள்//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் டெக் ஷங்கர்,
//வாழ்த்துகள் அன்பரே//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் பூங்குழலி,
//ஆகா எத்தனை பட்டங்கள் !!!!!!வாழ்த்துகள் ரிஷான் .இன்னமும் பட்டங்களும் சிறப்புகளும் பெற வாழ்த்துகள்//
உங்களைப் போன்றோரின் அன்பும் தொடர் ஊக்குவிப்புமே என்னை இயங்க வைக்கிறது.
அதற்கும் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் நண்பர் மாதவராஜ்,
//நன்றி ரிஷான்...
தங்கள் அருமையான எழுத்துக்களை புத்தகமாக்க்க அனுமதியளித்ததற்கு நான் நன்றிதான் தெரிவிக்க வேண்டும்.//
இணையத்தில் மட்டும் வாசிக்கக் கிடைத்தவற்றைத் திரட்டி பலதரப்பட்ட மக்களுக்கும், வாசகர்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்த சேவையை சிறப்புறச் செய்திருக்கிறீர்கள். அதில் எனது ஆக்கங்களும் இடம்பெற்றதன் மூலம் பரவலான கவனத்தையும் நிறைய வாசகர்களையும் பெற்றிருக்கிறேன். எழுத்துத் துறையிலிருப்பவர்களுக்கு இந்த ஈர்ப்பும், வாசகர்களும்தானே பெரும் ஊக்குவிப்பு. அதற்கு உங்கள் தொகுப்புகள் பெரிதும் உதவியிருக்கின்றன.
இக் கணத்தில் எனது மனமார்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் எழுத்தும், சேவைகளும் தொடர எனது அன்பான வாழ்த்துக்கள் நண்பரே !
வாழ்த்துக்கள் ரிஷான் :-)
அன்பின் கிரி,
//வாழ்த்துக்கள் ரிஷான் :-)//
நீண்ட நாட்களின் பின்னர் உங்களைக் காண்கிறேன்..நலமா நண்பரே?
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)
Post a Comment