Sunday, January 8, 2012

எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டு விழா இன்று !

    2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக இலங்கையின் உயர் இலக்கிய விருதான 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் தனதாக்கிக் கொண்ட பெண் எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக எழுதி, என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அம்மாவின் ரகசியம்' மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடு, ஜனவரி மாதம் 08 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையான இன்று ,  இந்தியா, சென்னை, அண்ணாசாலை, ஸ்பென்ஸர் ப்ளாஸா எதிரேயுள்ள புக் பாய்ண்ட் அரங்கில் நடைபெற உள்ளது. 

    எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியுள்ள இந் நாவலை எழுத்தாளர் அசோகமித்திரன் வெளியிட, எழுத்தாளர் தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார். அத்தோடு இந் நிகழ்வில் எழுத்தாளர்கள் கல்யாணராமன், பழ.அதியமான், பெருமாள்முருகன், அசோகமித்திரன், உமா வரதராஜன், பாவண்ணன், தேவிபாரதி, உமா ஷக்தி, சுகுமாரன் ஆகியோர் உரை நிகழ்த்தவிருக்கின்றனர்.
    அழைப்பிதழ்  இங்கே – http://rishanshareef.blogspot.com/2012/01/blog-post.html , http://mrishaanshareef.blogspot.com/2012/01/invitation-to-my-book-launch-in-india.html

    அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நன்றி
# எழுத்தாளர் அ.முத்துலிங்கம்
# விடிவெள்ளி வார இதழ்
# வீரகேசரி வாரவெளியீடு
# ஊடறு இணைய இதழ்
# பதிவுகள் இணைய இதழ்
# பெண்ணியம் இணைய இதழ்
# திண்ணை இணைய இதழ்

12 comments:

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. வாழ்த்துகள் ரிஷான்.

Unknown said...

வாழ்த்துகள் ரிஷான்.

DREAMER said...

வாழ்த்துக்கள் நண்பரே...

Unknown said...

வெளியீட்டு விழா சிறப்படைய வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

அரிய பணி செய்துள்ளீர்கள். தொடர்ந்து இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்.
மகிழ்ச்சியும். பாராட்டுக்களும்.
இலங்கையில் கிடைக்கும்போது வாங்கிப் படிப்பேன்.

மனோ.ஜி said...

வாழ்த்துக்கள் நண்பரே

பிரேம் said...

சிகரம் தொட வாழ்த்துகிறேன்..

govindh said...

மிக்க மகிழ்ச்சியான செய்தி...
வாழ்த்துக்கள் எம்.ரிஷான் ஷெரீப்.

Anonymous said...

Félicitation May Allah help you to top top top thon Everest
Ibrahim

M.Jagadeesan said...

மென்மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்

செல்வா said...

இனிய வாழ்த்துக்கள் தோழரே...!
விழா நலமாக முடிந்ததா?

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் ராமலக்ஷ்மி, செல்வராஜ் ஜெகதீசன், DREAMER, Eelavan, Dr.Muruganandan M.K., மனோ.ஜி,பிரேம்,govindh,Ibrahim, M.Jagadeesan, செல்வா,

உங்களது வருகையும் கருத்துக்களும் அன்பான வாழ்த்துக்களும் பெரும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகின்றன.

மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !