அன்பின் நண்பர்களுக்கு,
இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், கடந்த
வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான
'அம்மாவின் ரகசியம்' நாவலுக்கு '2011 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச
இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்' கிடைக்கப்பெற்றது
என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இக் கணத்தில் இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுனேத்ரா ராஜகருணாநாயக்க, மொழிபெயர்ப்பில் உதவிய சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹான், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம், நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்த எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் இந் நாவல் வெளிவர பாடுபட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
15 comments:
WOW!!!!!!!!!!!!!
Congrats!!!
வாங்க டீச்சர்.. :-)
முதல் ஆளாக வந்து வாழ்த்துச் சொன்னதில் மகிழ்ச்சி.
மிகவும் நன்றி டீச்சர்.
நல்வாழ்த்துகள் ரிஷான்:)!
தகவல் அறிந்தேன். வாழ்த்துக்கள் தோழரே ! மேன்மேலும் பல படைப்புகளையும் தந்து, விருதுகள் பல பெற வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்! மேன் மேலும் உங்களின் பணி தொடரவும் பரிசு பெறவும் வாழ்த்துகிறேன். இது என் முதல் வருகை...
வாழ்த்துக்கள்! மேன் மேலும் உங்களின் பணி தொடரவும் பரிசு பெறவும் வாழ்த்துகிறேன். இது என் முதல் வருகை...
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரீப்
அன்பின் ராமலக்ஷ்மி,
//நல்வாழ்த்துகள் ரிஷான்:)!//
எனது ஒவ்வொரு முயற்சியின் போதும் அன்போடு வந்து ஊக்கங்கள் தருகிறீர்கள்.
மிகவும் நன்றி சகோதரி !
அன்பின் இக்பால் செல்வன்,
//தகவல் அறிந்தேன். வாழ்த்துக்கள் தோழரே ! மேன்மேலும் பல படைப்புகளையும் தந்து, விருதுகள் பல பெற வாழ்த்துக்கள்//
முதல் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஆயிஷா ஃபாரூக்,
//வாழ்த்துக்கள்! மேன் மேலும் உங்களின் பணி தொடரவும் பரிசு பெறவும் வாழ்த்துகிறேன். இது என் முதல் வருகை... //
முதல் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.
தொடர்ந்தும் இந்தப்பக்கம் வாருங்கள். :-)
அன்பின் டொக்டர் M.K முருகானந்தன்,
//மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//
உங்களது வாழ்த்துக்கள் மகிழ்வைத் தருகிறது. மிகவும் நன்றி டொக்டர் !
அன்பின் தங்கராசா ஜீவராஜா,
நலமா?
//வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரீப் //
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் மனமார வாழ்த்துகிறேன்
உங்கள் படைப்புக்கள்
இன்னும் வளம் பெறவும், அவை உலகை வலம் வரவும் வாழ்த்துகிறேன்..
வாழ்த்துக்கள். சென்றாண்டு படித்தேன். சிறப்பான மொழி பெயர்ப்பு. சிறிய நூல்தான். திடுக்கிடும் அனுபவங்கள். பெண்மையின் மீது எத்தனை அவதூறுகள். அதை மீறி பெண்கள் வாழ்கிறார்கள்.
Post a Comment