Tuesday, November 18, 2008

சக பதிவர் கைது குறித்து...

தனித்து ஏதும் செய்யவியலா இயலாமையோடும் வருத்தத்தோடும் இதனை எழுதுகிறேன்.
இலங்கையைச் சேர்ந்த எமது சக பதிவரும், தமிழ் ஊடகவியலாளரும் வெற்றி எப்.எம். வானொலி முகாமையாளருமான திரு.ஏ.ஆர்.வி.லோஷன் சனிக்கிழமை (15-11-2008) அதிகாலை 12.50 மணியளவில் இலங்கை, வெள்ளவத்தையிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாதிகளோடு தொடர்புவைத்திருத்தல், பயங்கரவாத செயல்களுக்கு துணைபோதல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இவரைக் கைதுசெய்யும்போது பொலிசாரால் வழங்கப்பட்ட பதிவுச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வெற்றி எப்.எம். வானொலி சேவையின் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் ஏ.ஆர். வாமலோஷனை உடனடியாக நீதிமன்றில் ஆஜர்செய்ய வேண்டும். அல்லது விடுவிக்க வேண்டும் என்று ஐந்து ஊடக அமைப்புக்கள் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் தொழில்படும் ஊடகவியலாளர் சங்கம், ஊடக ஊழியர்களின் வர்த்தக சம்மேளனம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய 5 அமைப்புக்களே இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன. இது குறித்து 5 ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"வெற்றி எப்.எம். வானொலி சேவையின் முகாமையாளரான ஏ.ஆர். வாமலோஷன் நவம்பர் 14ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். வெற்றி எப்.எம். வானொலிச் சேவையில் முகாமையாளராக 2008இல் இணைவதற்கு முன்னர், பத்து வருட காலமாக இவர் வானொலி ஊடகவியலாளராகக் கடமையாற்றி வந்துள்ளார்.

நள்ளிரவு தம்மை பொலிஸ் அதிகாரிகளாக இனங்காட்டிக் கொண்ட 13 பேர் வீட்டுக்கு வந்து வாமலோஷனை அழைத்துச் சென்றதாக அவரது குடும்பத்தினர் ஐந்து ஊடக அமைப்புக்களிடம் தெரிவித்தனர். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வாமலோஷன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரிகள் ரசீது ஒன்றை வழங்கியுள்ளனர்.

இவர் கொழும்பில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்படியோ அல்லது விடுதலை செய்யும்படியோ நாம் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்.

ஊடகவியலாளர் மற்றும் ஊடக ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் படியும் தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் ஊடக சுதந்திரத்தை அழிதொழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றும் அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றோம்".

இவ்வாறு ஐந்து ஊடக அமைப்புக்களும் இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

லோஷன் தனது பதிவுகளில் அரசியல், விளையாட்டு, சினிமா, நகைச்சுவை,சமகால நிகழ்வுகள் என அனைத்தும் எழுதிவருகிறார். இவர் இறுதியாக எழுதிய அரசியல் பதிவான இலங்கையில் ஒரு தமிழ் ஜனாதிபதி எனும் பதிவுதான் இவரது கைதுக்கு காரணமாக இருக்குமெனில், இலங்கையில் கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் குறித்து ஆராய வேண்டியிருப்பதோடு இவரது விடுதலைக்காக நாம் எல்லோரும் (சக பதிவர்கள், தமிழ்மணம்) ஏதேனும் செய்யவேண்டுமல்லவா? எவ்வகையில் அவரது விடுதலைக்கு உதவலாம் நண்பர்களே ?

45 comments:

Anonymous said...

'அநேக தமிழ் பதிவர்கள் இதை கண்டும் காணமாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. வேறெந்த உயிரினமும் இப்படி இருக்காது. ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது போலும் '

Anonymous said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'சக பதிவர் லோஷன் கைது குறித்து...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 18th November 2008 11:00:48 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/13745

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

Anonymous said...

தமிழ்நாட்டில் இருந்து புலி ஆதரவா பேசினாவே உள்ள போட்டுருவாங்க. இவருக்கு ஏன் வீண் வம்பு?

அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளதை மாற்ற முதலில் முயற்சி செய்ய வேண்டும்.

கானா பிரபா said...

வணக்கம் ரிஷான்

சக பதிவர் லோஷன் சுகமாக வீடு திரும்பவேண்டும் என்பதே நம் எல்லோரது வேண்டுதல்கள்.

Anonymous said...

//அமெரிக்கா, இந்தியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் புலிகள் தடை செய்யப்பட்டுள்ளதை மாற்ற முதலில் முயற்சி செய்ய வேண்டும்.//



ம்ம் நல்ல யோசனைதான்

ஒரு சக பதிவராக என்ன செய்ய முடியும்?
வழக்கம்போல கையறு நிலைதான் :-(

Anonymous said...

நமது இயலாமையே நம்மை ஒரு வழியாக்கிவிடுமோ என தோன்றுகிறது.

Anonymous said...

இய்லாமைகளின் உலகம்னு
கவிதை எழுதி அரிப்பை சொறிஞ்சுக்கலாம்

வேறென்ன செய்ய முடியும்? :-(

அரசுகளுக்கெதிரான ஒற்றைக் குரலால் என்ன சாதிக்க இயலும்?
சொந்தச்சகோதரனுக்கேதிரான போரை நிறுத்தச் சொல்லக் கூட வழியற்றுப்
போன் ஒரு இனத்திலிருந்து வந்துவிட்டு என்னதான் செய்ய முடியும்?

Anonymous said...

பதிவில் அப்படியொன்றும் தவறாக அவர் எதுவும் எழுதிவிடவில்லையே... இதெல்லாம் பயங்கரவாதம் என்றால். அப்புறம் உண்மையான பயங்கரவாதத்தை என்னவென்று சொல்ல.

Anonymous said...

==================================இவரது விடுதலைக்காக நாம் எல்லோரும் (சக பதிவர்கள், தமிழ்மணம்) ஏதேனும் செய்யவேண்டுமல்லவா? எவ்வகையில் அவரது விடுதலைக்கு உதவலாம் நண்பர்களே ?
==================================

ஏதாவது செய்து தமிழ் நாட்டில் புயலைக் கிளப்பாமல் நாம் அமைதியாய் இருந்தாலே போதும்.

தமிழ் நாடன் said...

என்ன கொடுமை இது? அப்பட்டமான மனித உரிமை மீறல். தமிழன் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கை நீதிமன்றத்தின் மூலமாக எதுவும் செய்ய இயலாதா? யாரும் அவரின் குடும்பத்துக்கு இது குறித்து உதவலாமே!

Anonymous said...

பதிவில் அப்படியொன்றும் தவறாக அவர் எதுவும் எழுதிவிடவில்லையே... இதெல்லாம் பயங்கரவாதம் என்றால். அப்புறம் உண்மையான பயங்கரவாதத்தை என்னவென்று சொல்ல.


சிங்கள அரசு என்று சொல்லுங்கள் மஞ்சூரார்

Anonymous said...

இத்தகைய நெருக்கடிகளில் முதலில் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப் படுவது வெட்கக் கேடானது .

நண்பர் சீக்கிரம் விடுதலையாக என் பிராத்தனைகள் ..

கானா பிரபா said...

வலைப்பதிவு மட்டுமே ஒருவரின் கைதுக்கு காரணம் என்று மேம்போக்க சொல்லமுடியாது.

லோஷன் போன்று இன்னும் பல ஊடகவியலாளர்கள் திஸ்ஸ்நாயகம், ஜெசிதரன், வளர்மதி ஜெசிதரன் என்று பட்டியல் நீளும். நாம் ஒன்றும் செய்யமுடியாது, நாயை சுடுவது போல் பட்டப்பகலில் பொலிஸ் பார்த்திருக்க, (சில சமயம் அவர்களே அந்தப் பணி செய்ய) சுட்டு எறியும் நாட்டில் போராட்டமும் கண்டனமும் கணக்கில் எடுபடா.

Anonymous said...

சொந்த சகோதரன் லாஜிக் எல்லாம் ராஜீவ் விசயத்திற்கு அப்புறம் மக்கள் கேட்பதில்லை.

மற்றவர்கள் ஏன் குரல் எழுப்புவதில்லை??? புலிகளுக்கும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள்.

Unknown said...

கைதுக்கு எமது கண்டனங்கள்...

சிங்கள பேரினவாதத்தின் போக்கு பாசிசத்தை உறுதி செய்கின்றன.

Maduraikkarathambi said...

it gives a one of the faces of Mr. Rajapakshe. I condemn this act and I pray god for his early release and good health.

Ilaya said...

லோஷன் அவர்களின் பதிவுகளை நான் விரும்பி வாசிப்பது உண்டு ...........அவர் கைதானதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் .........லோஷன் அவர்கள் விரைவில் விடுதலையாக இறைவனை வேண்டுகிறேன் ......

astle123 said...

அன்பு சகோதரர்களே,

இலங்கை சகோதரரும், சக பதிவருமான லோசன் அவர்கள் கைதிற்கு நான் என்னுடைய முழு எதிர்ப்பையும்
இலங்கை அரசுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

இது நிச்சயம் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது தான். இலங்கையில் தமிழர்களுக்கு என்ன வகையான சுதந்திரம் கிடைக்கிறது என்பது இப்போது தெரிகிறது.

"தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும். தர்மம் நிச்சயம் வெல்லும்"

சகோதர தமிழன்.

Anonymous said...

'தமிழ் பதிவர் லோஷன் சுகமாக வீடு திரும்பவேண்டும் என்பதே என் வேண்டுதல்.'

தமிழ்நதி said...

கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறென்ன செய்யலாம்...? ஜனநாயக நாடு என்றும் பெளத்தம் முதன்மை மதம் என்றும் சொல்லிக்கொள்ளும் (பீற்றிக்கொள்ளும்) இலங்கையில் நாம் என்ன சொல்லி எடுபடும்? பதிவுகள் போடலாம்; கண்டிக்கிறோம் எனலாம்; கூட்டாகச் சேர்ந்து அறிக்கை விடலாம்; எதிரே இருப்பவர் செவிப்புலனற்றவராக இருந்தால் பேசி என்ன பயன்? லோஷனின் பக்கத்திலுள்ள அவருடைய மகனின் முகத்தைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 'அப்பா எங்கே?'என்று அப்பிள்ளை அழும்போது என்ன சொல்லித் தேற்றுவது... 'இது ஜனநாயக நாடு கண்ணா'என்றா? செயலற்றிருக்க விதிக்கப்பட்டோம்.

தமிழ்நதி said...

கையறு நிலையில் பார்த்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறென்ன செய்யலாம்...? ஜனநாயக நாடு என்றும் பெளத்தம் முதன்மை மதம் என்றும் சொல்லிக்கொள்ளும் (பீற்றிக்கொள்ளும்) இலங்கையில் நாம் என்ன சொல்லி எடுபடும்? பதிவுகள் போடலாம்; கண்டிக்கிறோம் எனலாம்; கூட்டாகச் சேர்ந்து அறிக்கை விடலாம்; எதிரே இருப்பவர் செவிப்புலனற்றவராக இருந்தால் பேசி என்ன பயன்? லோஷனின் பக்கத்திலுள்ள அவருடைய மகனின் முகத்தைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. 'அப்பா எங்கே?'என்று அப்பிள்ளை அழும்போது என்ன சொல்லித் தேற்றுவது... 'இது ஜனநாயக நாடு கண்ணா'என்றா? செயலற்றிருக்க விதிக்கப்பட்டோம்.

ஸ்ரீ சரவணகுமார் said...

//சொந்தச்சகோதரனுக்கேதிரான போரை நிறுத்தச் சொல்லக் கூட வழியற்றுப்
போன் ஒரு இனத்திலிருந்து வந்துவிட்டு என்னதான் செய்ய முடியும்?//

என்ன தான் செய்ய முடியும் ?

KARTHIK said...

// பதிவில் அப்படியொன்றும் தவறாக அவர் எதுவும் எழுதிவிடவில்லையே...//

அவர் எந்தப்பிரச்சனையும் இல்லாம விரைவில் வீடு திறும்ப எனது பிரார்த்தனைகள்.

M.Rishan Shareef said...
This comment has been removed by the author.
Anonymous said...

எவ்வகையில் நாம் உதவமுடியும் ஷெரீப்???

Anonymous said...

ரிஷான்,
நீங்களும் கவனம், தற்போது கொழும்பில் உள்ள தமிழர்கள் மீது அரசு பாய்ந்துவருகின்றது. எங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை இப்படிப்பட்ட நிகழ்வுகளை எதிர்நோக்கியே ஆகவேண்டும்!..

ஏதாவது செய்ய முடியுமா?!!! அறியத்தாருங்கள்.

உண்மைத்தமிழன் said...

வருத்தம் தருகிறது இச்செய்தி.

ஜனநாயகத்தின் ஐந்தாவது தூணான ஊடகங்களை தடை செய்வதும், அச்சுறுத்துவதும், இலங்கை இனவாத அரசுக்குப் புதிததல்ல.

ஏற்கெனவே பல பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்களை கைது செய்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமை அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேட்க முடிவதுதான் நம்மால் முடிந்த உதவி..

யாரேனும் இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் முகவரி, மெயில் முகவரிகளை பெற்றுத் தந்தால் வலைப்பதிவுலகத்தினர் அனைவரும் அவர்களுக்கு கடிதம் எழுத உதவியாக இருக்கும்.

கொழுவி said...

இதில ஒரு வெளித்தெரியாத சிக்கல் இருக்கிறது. கைது செய்யப்பட்ட அன்று அதிகாலையே இது குறித்த செய்தியை இட்டுவிட்டு பிறகு அதை கொண்டு செல்லாது இருந்து விட்டேன்.

இலங்கை அரசை அதன் இராணுவ நிர்வாகத்தை ஜனநாயகம் பொருந்தியது என்று நம்பிக்கொண்டு

அரசை கண்டிக்கிறோம். கைதை கண்டிக்கிறோம் என்ற நமது கோசங்கள் லோசனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். நமது இலங்கை அரசு ஒரு மாதிரியான ஒற்றை ரூட்டு அரசு என்பதால்தான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் இந்த செய்தியை வைத்திருக்க வேண்டியுள்ளது.

Anonymous said...

வலைபதிவை எல்லாம் படித்து கைது செய்யும் அளவுக்கா இலங்கை அரசுக்கு பிராந்து பிடித்திருக்கிறது?

லோஷனின் குடும்பத்துக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.இலங்கையில் மனித உரிமைகளின் லட்சணம் தெரிந்ததுதான் என்றாலும் சக வலைபதிவருக்கு நடக்கும்போது தான் மனதில் சுரீலென்று உறைக்கிறது.

தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்லவேண்டும்.குழுமத்தில் யாராவது இதற்கு உதவ முடியுமா?

suvanappiriyan said...

'தமிழ் பதிவர் லோஷன் சுகமாக வீடு திரும்பவேண்டும்

Anonymous said...

விஜிசுதன் ரிஷான் இஸ்லாமியர் என்பதால் அவரைக் கைது செய்யமாட்டார்கள்.அத்துடன் அவர் இருப்பது இன்னொரு நாட்டில். இலங்கை வலைப்பதிவாளர்களின் நிலை இப்பவாவது சிலருக்கு புரிந்திருக்கும் என நினைக்கின்றோம்.

நாமக்கல் சிபி said...

வணக்கம் ரிஷான்

சக பதிவர் லோஷன் சுகமாக வீடு திரும்பவேண்டும் என்பதே நம் எல்லோரது வேண்டுதல்கள்

நாமக்கல் சிபி said...

//யாரேனும் இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் முகவரி, மெயில் முகவரிகளை பெற்றுத் தந்தால் வலைப்பதிவுலகத்தினர் அனைவரும் அவர்களுக்கு கடிதம் எழுத உதவியாக இருக்கும்.//

நிச்சயமாக! நாமனைவரும் சேர்ந்து கடிதம் எழுத உதவியாக இருக்கும்!

King... said...

இலங்கையில் இருக்கிறவிளங்காத கூட்டங்களுக்கு என்ன சொல்லியும் ஒரு பிரயோசனமும் கிடையாது ..

இளைய சமுதாயம் என்ன புடுங்குதோ யாருக்குத்தெரியும் படிக்கினமாம் படிப்பு என்ன படிச்சாலும் அறிவும் தெளிவும் இருக்கவேணுமெல்லோ...

உண்மையில் இந்த பல்கலைக்கழகங்கள் என்ன செய்த கொண்டிருக்கின்றன...

King... said...

எத்தனை ஊடகவியலாளர்களுக்கு இப்படி நடந்திருக்கிறது...!

கேவலமான அரசியலும் மக்களும் சிந்தனைத்தெளிவற்ற மக்களும்...!


இலங்கையும் ஒரு இறையாண்மை உள்ள நாடென்று சொன்னா கேட்கத்தான் வேணும்...;)

Anonymous said...

'I pray the god that he should return home safe and sooner !!!'

லூசன் said...

சக பதிவரான லோஷனின் கைது தமிழர்களுக்கு ஆதரவாக கொடுக்கும் குரல்களை நசிக்கும் ஒரு முயற்சி. அவர் பத்திரமாக வீடுதிரும்ப வேண்டும். அதுவே நம் பிரார்த்தனை.
http://irakasiyam.blogspot.com

தமிழன்-கறுப்பி... said...

ரிஷான்; ஏதாவது தகவல் தெரியுமா என்ன நடந்திருக்கிறது, இப்பொழுது எப்படி இருக்கிறார்...

M.Rishan Shareef said...

// தமிழன்-கறுப்பி... said...

ரிஷான்; ஏதாவது தகவல் தெரியுமா என்ன நடந்திருக்கிறது, இப்பொழுது எப்படி இருக்கிறார்...//

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள லோஷன் தொடர்ந்தும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளார், பக்க சார்பற்றதும் நீதியானதுமான விசாரணைகளில் இவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் விடுவிக்கப்படுவார் என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடக அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Anonymous said...

//தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து
செல்லவேண்டும்//

முதல்வருக்கு நீண்ட கடிதம் எழுதிப் பாருங்களேன்

அவர் இன்னொரு தபா தந்தி அடிக்கச் சொல்லி எல்லாரையும் கேட்கலாம்

ஒரு சர்வ கட்சி மீட்ட்ங் போடலாம் ( ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இருந்து
வடையும் டீயும் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்டுக் கொண்டே அலச ஒரு நல்ல
வாய்ப்பு கிடைக்கும்)

மனித சங்கிலி நடத்தலாம்

ராஜ நடராஜன் said...

ஒரு அரசாங்கத்துக்கு முதல் எதிரியே எழுத்து என்பது மீண்டும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது.இந்த லட்சணத்துல துப்பாக்கியப் போட்டுட்டு பேச்சுக்கு வா சித்தாந்தம் நல்லாவே இருக்குது.வாழ்க இலங்கை ஜனநாயகம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அவர் நல்லபடி வீடு திரும்ப வேண்டுகிறேன்.

Anonymous said...

//தமிழ்நாட்டு ஊடகங்கள் இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்து
செல்லவேண்டும்//

//முதல்வருக்கு நீண்ட கடிதம் எழுதிப் பாருங்களேன்//

பிரயோசனம் இல்லைங்க. செயலலிதாவோ அல்லது வேற யாராவது
முந்திக்கிட்டு செய்வதா உளவு துறை அறிக்கை கொடுத்தால் தான் கவனிப்பார்.
தானாக ‍செய்யும் தன்மையை திமுகா இழந்து பல காலமாச்சு. அம்புட்டு உள்தகராறு..

அன்புடன்,
சிவா@தமிழ்பயணி

M.Rishan Shareef said...

பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த சகபதிவரும் , வெற்றி வானொலியின் முகாமையாளருமான திரு. வாமலோஷன் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது விடுதலைக்காக ஒன்றிணைந்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

KARTHIK said...

// பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த சகபதிவரும் , வெற்றி வானொலியின் முகாமையாளருமான திரு. வாமலோஷன் இன்று நண்பகல் விடுவிக்கப்பட்டுள்ளார்.//

அருமையான செய்தி
ரொம்ப சந்தோசம்.