Thursday, August 13, 2009

நன்றி ப்ரியமானவர்களே..!

70 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷானுக்கு ,
இரண்டு வருடங்களாக தொடர்ந்து எழுதுதல் என்பது ஆச்சர்யமல்ல ஆனால் பல தளங்களில் ( கவிதை, சிறுகதை, உலக நிகழ்வுகள் உட்பட ஏழு தளங்கள் ) எழுதுவது வியப்பூட்டும் ஆச்சர்யமே. அந்த வகையில் நீங்கள் இன்னும் 80 வருடங்கள் எழுதவேண்டும். எத்தகைய அவதூறுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் பீடு நடை போட்டு நான் முன்னரே கேட்டு கொண்டது போல எழுத்துகளுக்கான பற்பல விருதுகளை வங்க வேண்டுமென்று அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நண்பா.

Radhakrishnan said...

வாழ்த்துகள் ரிஷான் அவர்களே. மேலும் பல வெற்றிகள் பெறவும், எழுத்துப் பயணம் தொடர் வெற்றியாக இருக்கவும் வாழ்த்துகள்.

சென்ஷி said...

உனக்கான வாழ்த்துக்களில் இணைவதில் மகிழ்கிறேன் ரிஷான்

Thamira said...

வாழ்த்துகள் ரிஷான்.. இன்னும் உயரம் தொடுவீர்கள்.!

முபாரக் said...

வாழ்த்துகள் ரிஷான்! தொடர்ந்து சிறப்பான முயற்சிகள் செய்துவருகிறீர்கள். உயிரோசையில் வெளியான கட்டுரைகள் (அ) பத்திகள் சமூகநலன் கருதியது. தொடர்ந்து செயல்படுங்கள். இலங்கைப்பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள்.

ஒரு வேண்டுகோள். உங்கள் ஊர், மக்கள், வாழ்வு சார்ந்தும் எழுதுங்கள். அங்குள்ள சமூக வாழ்வைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது. மேன்மேலும் உயர வாழ்த்துகள்.

முபாரக் said...

ஊரில் எத்தனை மாதம் இருப்பீர்கள்?

geevanathy said...

எனது மனப்புர்வமான வாழ்த்துக்கள்,
தங்களின் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...
//பல தளங்களில் ( கவிதை, சிறுகதை, உலக நிகழ்வுகள் உட்பட ஏழு தளங்கள் ) எழுதுவது வியப்பூட்டும் ஆச்சர்யமே.//

எங்கள் எல்லோருக்குமே இருக்கிறது அந்த பிரமிப்பு. அது விலகிடாத வண்ணம் தொடர்ந்தும் கொண்டிருக்கிறது உங்கள் சாதனைகள்!

சி தயாளன் said...

வாழ்த்துகள் ரிஷான்..தொடர்ந்து எழுந்துங்கள்

Unknown said...

All the best.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

வாழ்த்துகள் ரிஷான்!

உங்கள் எழுத்தை யுகமாயினி இதழில் படித்திருக்கிறேன். வலைப்பூவில் இப்போதுதான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். 'அம்மாவின் மோதிரம்' சிறுகதை வாசித்தேன். நல்ல எழுத்தோட்டமுள்ள சிறுகதை. வெற்றிக்கும், இரண்டாம் ஆண்டு நிறைவுக்கும் வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல்

கானா பிரபா said...

ரிஷான்

உங்களுக்கு இருக்கும் பரந்த அறிவும், இலக்கிய ஆளுமையும் கண்டு பல இடங்களில் வியந்திருக்கின்றேன். நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒரே அடையாளம் மட்டும் போதும். வாழ்த்துக்கள் தொடருங்கள் சகோதரா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நண்பரே, நீங்கள் தொடர்ந்து இன்னும் ஊக்கத்துடன் இயங்க என்னுடைய வாழ்த்துகள்.

மாதேவி said...

வாழ்த்துக்கள் ரிஷான்.விருதுகள் மேலும் தொடரட்டும்.

விழியன் said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. இன்னும் நிறைய இருக்கு.

அப்பணா said...

ரொம்ப பெரிய ஆளுபா நீ

வாழ்க வளமுடன் ரிஷான்

புகாரி said...

நெஞ்சினின்று நெடிது பொங்கும் நிறையமுத வாழ்த்துக்கள் ரிஷான்

அன்புடன் புகாரி

Stalin Felix said...

Valthukal tholare

துரை said...

வாழ்த்துக்கள் நண்பா

மகி said...

இன்னும் வளர வாழ்த்துகிறேன் நண்பரே

திறமைக்கு எங்கும் மதிப்பு உண்டு .

வேந்தன் அரசு said...

பாராட்டுகள் ரிஷான்

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் ரிஷான். நாடறிந்த வலைப்பதிவர் என்பதை விட நீங்கள் நாடறிந்த எழுத்தாளார்.

எதிர்வரும் ஞாயிறு ஒன்றுகூடலில் பேசும் விடயங்களை உங்களுக்கும் நிச்சயம் அறியத்தருவோம்.

KARTHIK said...

வாழ்துக்கள் ரிஷான்

தொடர்ந்து எழுதுங்க

அப்புறம் பரிசுவாங்குனதுக்கு டிரீட் எப்போன்னு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும் :-)

தமிழன் வேணு said...

அன்பின் ரிஷான்!

அனைவரிடமும் அன்பு பாராட்டுகிற உங்களுக்கு இது போன்ற பரிசுகள், உங்களை மென்மேலும் உயரத்தை எட்டவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகிற உந்துதலேயன்றி வேறில்லை! இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வாழ்க!

தமிழன் வேணு

நடராஜன் said...

ரசிகர்கள் என்றும் உணர்வார்கள் பறவையின் அழகை.

ராஜா said...

வாழ்த்துக்கள் ரிஷான் !!

எழிலன் said...

அன்பின் ரிஷான் அவர்களுக்கு, வணக்கம்.
ஒர் உயர்ந்த உள்ளத்தை உயர்ந்த உள்ளங்கள் பலவும் சேர்ந்து உயர்த்தி வைப்பதென்பது உவகை தருவது மட்டுமல்ல, இதர உள்ளங்களை உணர்த்தவும் வைப்பது. சகோதரர் ரிஷான் அவர்களே! உங்கள் எழுத்தின் உயர்ந்த நோக்கத்தை நானும் பார்த்து வியந்து பல தடவைகள் மகிழ்ந்திருக்கிறேன். ஒரு பரிசுத்த இதயத்தின் பளபளப்பு உங்களின் எழுத்தில் மிளிர்கிறதைப் பார்த்துப் பூரித்திருக்கிறேன்.

சலசலப்புக்களுக்குத் தளர்வடையாதீர்கள். பழுத்த மாம்பழத்தை நோக்கி வரும் கற்கள் அதன் அருமையைத்தான் சுட்டுகின்றன. உங்களின் சிந்தனை பல இதயங்களுக்குச் சிந்தனைப் பந்தலாக இருக்கின்றது. எனக்கும்தான். அதற்காக வாழ்த்தவாஅல்லது நன்றி சொல்லவா?

நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்.

எழுந்த ஆலமதாய் நிமிர்ந்து பணி புரிக!
எழுத்தில் சிந்தனையை நிரப்பிப் பகிர்ந்திடுக!
உங்கள் சிறந்த பணி உயர்ந்து வளர்ந்திடுக!

என்றும் அன்புடன்,

எழிலன்

நரேஷ் said...

வாழ்த்துக்கள் ரிஷான்!!!

பூங்குழலி said...

வாழ்த்துகள் ரிஷான்

சாந்தி said...

பாராட்டுகளும் , வாழ்த்துகளும் ரிஷான்..

இகழ்வோரை பற்றி ஒருபோதும் கவலை வேண்டாம்.. அவைதான் நம் பலத்தை வெளிகொணரும் வாய்ப்புகள் , படிக்கட்டுகள் ரிஷான்..

தஞ்சை மீரான் said...

வாழ்த்துக்கள் ரிஷான்.

நண்பரே...........உங்களுக்கே தெரியாது, உங்களின் வளர்ச்சி, பலருக்கு முன்மாதிரியாகவும் இருக்கலாம்.

விஜி said...

நட்பின் ரிஷான்,
காயங்களினூடே பயணித்தவர்கள் தான் மிகச்சிறப்பான காவியங்களையே படைத்திருக்கின்றார்கள். எமக்குப்பிடித்தோ பிடிக்காமலோ நம்மை சிலருக்கு பிடிக்காமல் போகின்றது இது வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் தான்.

தங்களின் அற்புதமான அருமையான படைப்புகளால் பல நல்ல உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கின்றீர்கள்.

எந்தத்தோல்விகளிலும் சளைத்துவிடாது சரித்திரம் படைக்க வாழ்த்துகள்!

சுவாதி said...

அன்பின் ரிஷான்!

இன்றைக்கும் உங்களை எனக்கு அறிமுகமாகக் காரணமான அந்த மறைந்து போன தோழியைத் தான் நினைவு கூருகிறேன். அந்த தோழியின் மரண அஞ்சலிகளில் ஒன்று ஒரு கவிஞரை, ஒரு பதிவரை , இன்னும் ஒரு தம்பியை எனக்கு பெற்றுத் தந்திருக்கிறது. மரணித்தும் இந்த உறவால் அந்தப் பெண் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் எனக்கு ஏனோ அசைக்க முடியாத நம்பிக்கை. தனது மரணத்தின் பின் யாரோ ஒருவருக்கு பார்வையாக மட்டுமல்ல, இந்த அறிமுகம் வளர்த்த நட்பிலும் அன்பிலும் அவள் ஆன்மாவும் உயிர்ப்பித்திருக்கும் என்ற நம்பிக்கையில் முதலில் உங்கள் சிநேகிதிக்கு எனது நன்றி!

மற்றைய ஆக்கங்களை விட உங்கள் கவிதைகள் தான் எனக்கு அதிகமாகப் பிடிக்கும். சில சமயம் சில கவிதைகளின் அடிப்படைக் கருத்து புரியாவிட்டாலும் நினைவு வைத்து இன்னொருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமளவுக்கு உங்களுடைய கவிதைகளை எனது முக்கியமானவைகள் பட்டியலில் வைத்திருக்குமளவுக்கு வாசகியாக இருக்கிறேன்.

நீங்கள் இன்னும் நிறைய விருதுகளைப் பெற வேண்டும். உங்கள் ஆக்கங்கள் இன்னும் நிறைய ஊடகங்களிலும், தளங்களிலும் பிரசுரிக்கப்பட வேண்டும். நூல்களாக வெளிவர வேண்டும். இப்படி நிறைய வேண்டும் என்ற பிராத்தனைகளுடன் முன் வைத்து எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகள் தம்பி!!!!!!!!!!!!!!!!

கிரி said...

வாழ்த்துக்கள் ரிஷான்

திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் ஜொலிப்பார்கள்

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு நண்பர் ரிஷானுக்கு ,
இரண்டு வருடங்களாக தொடர்ந்து எழுதுதல் என்பது ஆச்சர்யமல்ல ஆனால் பல தளங்களில் ( கவிதை, சிறுகதை, உலக நிகழ்வுகள் உட்பட ஏழு தளங்கள் ) எழுதுவது வியப்பூட்டும் ஆச்சர்யமே. அந்த வகையில் நீங்கள் இன்னும் 80 வருடங்கள் எழுதவேண்டும். எத்தகைய அவதூறுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காமல் பீடு நடை போட்டு நான் முன்னரே கேட்டு கொண்டது போல எழுத்துகளுக்கான பற்பல விருதுகளை வங்க வேண்டுமென்று அந்த ஏக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் நண்பா. //

எனது ஒவ்வொரு பதிவின் போதும் வந்து கருத்திட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அன்பும் நேசமும் பிரமிக்க வைக்கிறது. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.

வருகைக்கும் அன்பான பிரார்த்தனைகளுக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் வெ.இராதாகிருஷ்ணன்,

//வாழ்த்துகள் ரிஷான் அவர்களே. மேலும் பல வெற்றிகள் பெறவும், எழுத்துப் பயணம் தொடர் வெற்றியாக இருக்கவும் வாழ்த்துகள். //

உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் பெரிதும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சென்ஷி,

//உனக்கான வாழ்த்துக்களில் இணைவதில் மகிழ்கிறேன் ரிஷான் //

உங்கள் அன்பான வாழ்த்துக்களில் நானும் மகிழ்கிறேன். நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதிமூலகிருஷ்ணன்,

//வாழ்த்துகள் ரிஷான்.. இன்னும் உயரம் தொடுவீர்கள்.!//

உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் முபாரக்,

//வாழ்த்துகள் ரிஷான்! தொடர்ந்து சிறப்பான முயற்சிகள் செய்துவருகிறீர்கள். உயிரோசையில் வெளியான கட்டுரைகள் (அ) பத்திகள் சமூகநலன் கருதியது. தொடர்ந்து செயல்படுங்கள். இலங்கைப்பதிவர் சந்திப்பு வெற்றிபெற வாழ்த்துகள்.

ஒரு வேண்டுகோள். உங்கள் ஊர், மக்கள், வாழ்வு சார்ந்தும் எழுதுங்கள். அங்குள்ள சமூக வாழ்வைத் தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது. மேன்மேலும் உயர வாழ்த்துகள். //

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

நிச்சயமாக நாடு திரும்பியதும், எனது ஊர்,சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுத எண்ணியிருக்கிறேன். இக்கணத்தில் உங்கள் ஊக்குவிப்பு பெரிதும் பலமாக இருக்கிறது.

//ஊரில் எத்தனை மாதம் இருப்பீர்கள்?//

திரும்ப வரும் எண்ணமில்லை நண்பரே. அங்கேயே தங்கிவிட ஆசை.
பிரார்த்தியுங்கள் !

M.Rishan Shareef said...

அன்பின் த.ஜீவராஜ்,

வலைப்பதிவர் சந்திப்பு புகைப்படங்களில் உங்களைக் கண்ணுற்றேன். மிகவும் மகிழ்வாக இருந்தது.

//எனது மனப்புர்வமான வாழ்த்துக்கள்,
தங்களின் பணி மென்மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கிறேன் //

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்!

பி.ஏ.ஷேக் தாவூத் said...
//பல தளங்களில் ( கவிதை, சிறுகதை, உலக நிகழ்வுகள் உட்பட ஏழு தளங்கள் ) எழுதுவது வியப்பூட்டும் ஆச்சர்யமே.//

எங்கள் எல்லோருக்குமே இருக்கிறது அந்த பிரமிப்பு. அது விலகிடாத வண்ணம் தொடர்ந்தும் கொண்டிருக்கிறது உங்கள் சாதனைகள்! //

எனது ஒவ்வொரு பதிவின் போதும் தொடர்ந்து வருகை தந்து, கருத்துக்களிட்டுச் செல்கிறீர்கள். அவை என்னை மேலும் இயங்க பெரிதும் ஊக்கமளிக்கின்றன. தொடரட்டும்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் 'டொன்'லீ,

//வாழ்த்துகள் ரிஷான்..தொடர்ந்து எழுந்துங்கள்//

நிச்சயம் முயற்சிக்கிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மஸ்தான்,

//All the best.//

உங்கள் முதல்வருகையும் வாழ்த்துக்களும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் சேரல்,

//வாழ்த்துகள் ரிஷான்!

உங்கள் எழுத்தை யுகமாயினி இதழில் படித்திருக்கிறேன். வலைப்பூவில் இப்போதுதான் வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். 'அம்மாவின் மோதிரம்' சிறுகதை வாசித்தேன். நல்ல எழுத்தோட்டமுள்ள சிறுகதை. வெற்றிக்கும், இரண்டாம் ஆண்டு நிறைவுக்கும் வாழ்த்துகள்!

-ப்ரியமுடன்
சேரல் //

எனது எழுத்துக்கள் குறித்தான உங்கள் கருத்து மிகவும் ஊக்கமளிக்கிறது. வருகைக்கும், கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கானாபிரபா,

//ரிஷான்

உங்களுக்கு இருக்கும் பரந்த அறிவும், இலக்கிய ஆளுமையும் கண்டு பல இடங்களில் வியந்திருக்கின்றேன். நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒரே அடையாளம் மட்டும் போதும். வாழ்த்துக்கள் தொடருங்கள் சகோதரா //

நான் வலையுலகுக்கு வந்த சில மாதங்களில் உங்கள் 'ரேடியோஸ்பதி' மூலம் என்னை அறிமுகப்படுத்தி, நிறைய வலையுலக நண்பர்களை அறிமுகம் செய்துவைத்தவர் நீங்கள். எனது இறுதிக்காலம்வரை மறக்க இயலாது. இக் கணத்தில் உங்கள் கருத்தும், அன்பான வாழ்த்துக்களும் பெரிதும் என்னை மகிழச் செய்கின்றன.
வருகைக்கும், கருத்துக்கும், அன்பான வாழ்த்துக்களுக்கும், தொடர் ஊக்குவிப்புக்கும் நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ஜ்யோவ்ராம் சுந்தர்,

//நண்பரே, நீங்கள் தொடர்ந்து இன்னும் ஊக்கத்துடன் இயங்க என்னுடைய வாழ்த்துகள். //

தமிழ் வலைப்பூவுலகில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முதல் சிறுகதைப்போட்டி உங்களுடையது. அதில் பெற்ற வெற்றி எனக்கு பல வாய்ப்புக்களைப் பெற்றுத் தந்திருக்கிறது. இக் கணத்தில் உங்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் திகழ்மிளிர்,

//வாழ்த்துகள் நண்பரே //

எனது பதிவுகளுக்கான உங்கள் தொடர் வருகையும் வாழ்த்துக்களும் என்னைப் பெரிதும் மகிழச் செய்கின்றன. நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மாதேவி,

//வாழ்த்துக்கள் ரிஷான்.விருதுகள் மேலும் தொடரட்டும். //

உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் விழியன் அண்ணா,

//மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி. இன்னும் நிறைய இருக்கு//

உங்கள் வாழ்த்துக்கள் கண்டு மிகவும் மகிழ்கிறேன். நன்றி அண்ணா.

M.Rishan Shareef said...

அன்பின் அப்பணா,

//ரொம்ப பெரிய ஆளுபா நீ

வாழ்க வளமுடன் ரிஷான் //

:)
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் புகாரி

//நெஞ்சினின்று நெடிது பொங்கும் நிறையமுத வாழ்த்துக்கள் ரிஷான்//

அழகான வாழ்த்து.
நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் ஸ்டாலின்,

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி அன்பு நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் துரை,

//வாழ்த்துக்கள் நண்பா//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மஹி,

//இன்னும் வளர வாழ்த்துகிறேன் நண்பரே

திறமைக்கு எங்கும் மதிப்பு உண்டு .//

உங்கள் வார்த்தைகளில் மகிழ்கிறேன். நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேந்தன் அரசு

//பாராட்டுகள் ரிஷான்//

அன்பான பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//அன்பின் ரிஷான்!

அனைவரிடமும் அன்பு பாராட்டுகிற உங்களுக்கு இது போன்ற பரிசுகள், உங்களை மென்மேலும் உயரத்தை எட்டவேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்துகிற உந்துதலேயன்றி வேறில்லை! இன்னும் பல சிகரங்களை எட்ட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். வாழ்க!//

எனது ஒவ்வொரு பதிவுகளின் போதும் நீங்களிடும் கருத்துக்களும், பின்னூட்டங்களும் மிகவும் என்னை ஊக்குவிக்கின்றன. உங்கள் விருப்பம் நிறைவேறட்டும்.

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

அன்பின் வந்தியத்தேவன்,

//வாழ்த்துக்கள் ரிஷான். நாடறிந்த வலைப்பதிவர் என்பதை விட நீங்கள் நாடறிந்த எழுத்தாளார்.

எதிர்வரும் ஞாயிறு ஒன்றுகூடலில் பேசும் விடயங்களை உங்களுக்கும் நிச்சயம் அறியத்தருவோம். //

உங்கள் பதிவிலும் மற்றும் நண்பர்கள் பதிவிலும், நிகழ்வு பற்றிய தகவல்களை அறிந்துகொண்டேன். புகைப்படங்களையும் பார்த்தேன். ஒரு சிலரைத் தவிர, மற்றவர்களை அடையாளம் கண்டுகொள்ளமுடியவில்லை... உங்களையும் கூட. முடியுமெனில் தனி மின்னஞ்சலுக்கு நம் நண்பர்களின் புகைப்படங்களை பெயர்களோடு அனுப்பி வையுங்கள் நண்பரே.

இந்த ஒன்று கூடலை ஏற்படுத்தி, அதன் இறுதிவரை சிறக்கச் செய்த உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//வாழ்துக்கள் ரிஷான்

தொடர்ந்து எழுதுங்க

அப்புறம் பரிசுவாங்குனதுக்கு டிரீட் எப்போன்னு சொன்னா கொஞ்சம் வசதியா இருக்கும் :-) //

பரிசு வாங்கியதற்கு மட்டுமல்ல, நான் வாசிக்க விரும்பிய புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாங்கி, எனக்கு அனுப்பியதற்கும் நான் ட்ரீட் தர கடமைப்பட்டிருக்கிறேன். ஆகவே உங்கள் தேனிலவுக்கு இலங்கை வாருங்கள் :)

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன்,

//ரசிகர்கள் என்றும் உணர்வார்கள் பறவையின் அழகை.//

இந்த வரியினை மிகவும் ரசித்தேன். நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ராஜா,

//வாழ்த்துக்கள் ரிஷான் !! //

அன்பான வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி நண்பரே !!

M.Rishan Shareef said...

அன்பின் எழிலன்,

//அன்பின் ரிஷான் அவர்களுக்கு, வணக்கம்.
ஒர் உயர்ந்த உள்ளத்தை உயர்ந்த உள்ளங்கள் பலவும் சேர்ந்து உயர்த்தி வைப்பதென்பது உவகை தருவது மட்டுமல்ல, இதர உள்ளங்களை உணர்த்தவும் வைப்பது. சகோதரர் ரிஷான் அவர்களே! உங்கள் எழுத்தின் உயர்ந்த நோக்கத்தை நானும் பார்த்து வியந்து பல தடவைகள் மகிழ்ந்திருக்கிறேன். ஒரு பரிசுத்த இதயத்தின் பளபளப்பு உங்களின் எழுத்தில் மிளிர்கிறதைப் பார்த்துப் பூரித்திருக்கிறேன்.

சலசலப்புக்களுக்குத் தளர்வடையாதீர்கள். பழுத்த மாம்பழத்தை நோக்கி வரும் கற்கள் அதன் அருமையைத்தான் சுட்டுகின்றன. உங்களின் சிந்தனை பல இதயங்களுக்குச் சிந்தனைப் பந்தலாக இருக்கின்றது. எனக்கும்தான். அதற்காக வாழ்த்தவாஅல்லது நன்றி சொல்லவா?

நன்றி சொல்லி வாழ்த்துகிறேன்.

எழுந்த ஆலமதாய் நிமிர்ந்து பணி புரிக!
எழுத்தில் சிந்தனையை நிரப்பிப் பகிர்ந்திடுக!
உங்கள் சிறந்த பணி உயர்ந்து வளர்ந்திடுக!

என்றும் அன்புடன்,

எழிலன்//

உங்கள் பெயரைப் போலவே அழகான வரிகளோடான உங்கள் பாராட்டுக்கள் முழுதாக மனம் மகிழச் செய்வதோடு, என்னைத் தொடர்ந்தும் இயங்க பெரிதும் ஊக்குவிக்கிறது.
சிறப்பான வரிகளுக்கும் , அன்பான வாழ்த்துக்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள் நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நரேஷ்,

//வாழ்த்துக்கள் ரிஷான்!!!//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//வாழ்த்துகள் ரிஷான் ...//

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி அக்கா,

//பாராட்டுகளும் , வாழ்த்துகளும் ரிஷான்..

இகழ்வோரை பற்றி ஒருபோதும் கவலை வேண்டாம்.. அவைதான் நம் பலத்தை வெளிகொணரும் வாய்ப்புகள் , படிக்கட்டுகள் ரிஷான்..//

நிச்சயமாக அக்கா..!
அன்பான பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !!

M.Rishan Shareef said...

அன்பின் தஞ்சை மீரான்,

//வாழ்த்துக்கள் ரிஷான்.

நண்பரே...........உங்களுக்கே தெரியாது, உங்களின் வளர்ச்சி, பலருக்கு முன்மாதிரியாகவும் இருக்கலாம்.//

முன்மாதிரியாக இருப்பேனெனில் எனக்கும் மகிழ்ச்சிதான். பார்க்கலாம்..நான் இன்னும் வளரவேண்டும். :)

அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,

//நட்பின் ரிஷான்,
காயங்களினூடே பயணித்தவர்கள் தான் மிகச்சிறப்பான காவியங்களையே படைத்திருக்கின்றார்கள். எமக்குப்பிடித்தோ பிடிக்காமலோ நம்மை சிலருக்கு பிடிக்காமல் போகின்றது இது வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் தான்.

தங்களின் அற்புதமான அருமையான படைப்புகளால் பல நல்ல உள்ளங்களை கொள்ளை கொண்டிருக்கின்றீர்கள்.

எந்தத்தோல்விகளிலும் சளைத்துவிடாது சரித்திரம் படைக்க வாழ்த்துகள்!//

எனது ஒவ்வொரு ஆக்கத்தின் போதும், அதனைப் பார்வையிட்டு உங்கள் விமர்சனங்களைத் தொடர்ந்தும் முன்வைக்கிறீர்கள். அவை என்னை மேலும் சிறப்பாக இயங்க தொடர்ந்தும் ஊக்குவிக்கின்றன. இக்கணத்தில் உங்கள் அன்பான வாழ்த்துக்கள் கண்டும் மகிழ்கிறேன்.
நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் சுவாதி அக்கா,

//அன்பின் ரிஷான்!

இன்றைக்கும் உங்களை எனக்கு அறிமுகமாகக் காரணமான அந்த மறைந்து போன தோழியைத் தான் நினைவு கூருகிறேன். அந்த தோழியின் மரண அஞ்சலிகளில் ஒன்று ஒரு கவிஞரை, ஒரு பதிவரை , இன்னும் ஒரு தம்பியை எனக்கு பெற்றுத் தந்திருக்கிறது. மரணித்தும் இந்த உறவால் அந்தப் பெண் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதில் எனக்கு ஏனோ அசைக்க முடியாத நம்பிக்கை. தனது மரணத்தின் பின் யாரோ ஒருவருக்கு பார்வையாக மட்டுமல்ல, இந்த அறிமுகம் வளர்த்த நட்பிலும் அன்பிலும் அவள் ஆன்மாவும் உயிர்ப்பித்திருக்கும் என்ற நம்பிக்கையில் முதலில் உங்கள் சிநேகிதிக்கு எனது நன்றி!

மற்றைய ஆக்கங்களை விட உங்கள் கவிதைகள் தான் எனக்கு அதிகமாகப் பிடிக்கும். சில சமயம் சில கவிதைகளின் அடிப்படைக் கருத்து புரியாவிட்டாலும் நினைவு வைத்து இன்னொருவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுமளவுக்கு உங்களுடைய கவிதைகளை எனது முக்கியமானவைகள் பட்டியலில் வைத்திருக்குமளவுக்கு வாசகியாக இருக்கிறேன்.

நீங்கள் இன்னும் நிறைய விருதுகளைப் பெற வேண்டும். உங்கள் ஆக்கங்கள் இன்னும் நிறைய ஊடகங்களிலும், தளங்களிலும் பிரசுரிக்கப்பட வேண்டும். நூல்களாக வெளிவர வேண்டும். இப்படி நிறைய வேண்டும் என்ற பிராத்தனைகளுடன் முன் வைத்து எனது மனம் கனிந்த நல்வாழ்த்துகளையும் , பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகள் தம்பி!!!!!!!!!!!!!!!!

அன்புடன்
சுவாதி//

எனது ஒவ்வொரு கவிதை குறித்தும் அம்மாவிடமும், கணவரிடமும் விவாதித்து, வரும் கருத்துக்களை அடிக்கடி என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அவை என்னை மேலும் சிறப்பாக எழுத தொடர்ந்தும் ஊக்குவித்துக் கொண்டே இருக்கின்றன. இக்கணத்தில் உங்கள் பாராட்டுக்களையும், பிரார்த்தனைகளையும், அன்பான வாழ்த்துக்களையும் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். நன்றி அன்பு அக்கா..இந்த ஆதரவு தொடர வேண்டுகிறேன் !

M.Rishan Shareef said...

அன்பின் கிரி,

//வாழ்த்துக்கள் ரிஷான்

திறமை உள்ளவர்கள் எங்கிருந்தாலும் ஜொலிப்பார்கள் //

நீண்ட நாட்களின் பிறகான உங்கள் வருகையும் வாழ்த்துக்களும் பெரிதும் மகிழ்ச்சி தருகிறது.

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

வாழ்த்துகள் ரிஷான் அவர்களே. மேலும் பல வெற்றிகள் பெறவும், எழுத்துப் பயணம் தொடர் வெற்றியாக இருக்கவும் வாழ்த்துகள்.

M.Rishan Shareef said...

அன்பின் குமரன்,

//வாழ்த்துகள் ரிஷான் அவர்களே. மேலும் பல வெற்றிகள் பெறவும், எழுத்துப் பயணம் தொடர் வெற்றியாக இருக்கவும் வாழ்த்துகள்.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !