எனும் பின்னட்டைக் குறிப்போடு 10-10-2009 அன்று வெளிவந்திருக்கிறது கவிதாயினி பஹீமா ஜஹானின் அடுத்த கவிதைத் தொகுப்பு.
'ஒரு கடல் நீரூற்றி' எனும் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு வாசகர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து வடலி வெளியீடாக வெளிவந்திருக்கிறது 'அபராதி'.
'அபராதி' எனும் தொகுப்புத் தலைப்பிற்குரிய கவிதை, ஈழத்தின் தற்போதைய நிதர்சன நிலையை அப்பட்டமாக எடுத்தியம்பியிருப்பதால் மனதில் இனம்புரியாதவொரு சஞ்சலத்தை விதைத்துவிடுகிறது. தொகுப்பிலுள்ள மற்ற எல்லாக் கவிதைகளும் பல விதமான உணர்வுகளை, ஞாபகப்படிமங்களை உதிக்கவும் மீளவும் செய்துவிடுவதோடு நீங்காவண்ணம் மனதில் பதிந்தும் விடுகின்றன. எனவே இத் தொகுப்பும் வாசகரிடையே பரவலான வரவேற்பைப் பெறும் என்பதில் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை.
தொகுப்பை இணையத்தில் இங்கு வாங்கலாம்.
இந்தியாவில் இருப்பவர்கள் வடலி பதிப்பக உரிமையாளர் திரு.அகிலனைத் தொடர்புகொள்வதன் மூலம் இத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.
அவரது தொலைபேசி இல - +919840726807
அன்புச் சகோதரி மற்றும் கவிதாயினிக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். அடுத்த தொகுப்பையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
6 comments:
vazhththukkal
வாழ்துக்கள் :-))
வாழ்துக்கள்
தொகுப்பு பார்க்க வேண்டும்போல் இருக்கிறது
அன்பின் மண்குதிரை, கார்த்திக், ஜெயா,
உங்கள் அன்பான வாழ்த்துக்களை சகோதரியிடம் தெரிவித்துவிட்டேன்.
நன்றி அன்பு நண்பர்களே !
அன்பின் அனஸ் நானா,
//தொகுப்பு பார்க்க வேண்டும்போல் இருக்கிறது//
உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பச் சொல்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நானா !
Post a Comment