Friday, December 14, 2007

வங்கியில் வைப்பிலிடப்போகிறீர்களா? கவனம் தேவை.



நீங்கள் கஷ்டப்பட்டுப் பல வருடங்களாய் உழைத்த பணம்.
வீட்டில் வைத்தால் சேமிப்புக் கரையுமென வங்கியிலிடச் செல்கிறீர்கள்.
வங்கியின் வாசலிலேயே பட்டப்பகலில் காவலாளியின் கண்ணெதிரில்,துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?
அதுவும் நீங்கள் ஒரு பெண்ணாக இருப்பின்...?
இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது கடந்த நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையின் 2ம் தலைநகரம் எனப்படும் கண்டியின் ஒரு பிரதான தெருவில்,ஜனத்திரள் நிறைந்த ஒரு வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளைச்சம்பவம்.
கண்முன்னே தான் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம் பறிபோகும் நிலையில் அந்த அபலைப்பெண்ணின் துடிப்பும்,
பலகோடிகளை உள்வாங்கியிருக்கும் வங்கி நியமித்திருக்கும் காவலாளியின் நடவடிக்கையையும் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்நிகழ்வை இங்கு பதியும் கணம் வரைக்கும் கொள்ளைக்காரன் கைது செய்யப்படவில்லையெனக் கேள்விப்படுகிறேன்.

5 comments:

Anonymous said...

பயனுள்ள தகவல்...
மிக்க நன்றி!!
தொடரட்டும்...

M.Rishan Shareef said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தமிழச்சி !

Unknown said...

இலங்கையின் குற்றவாளிகளை விரைவாக் கைதுசெய்த வரலாறு உண்டோ?

நல்ல தகவல்களை தொடர்ந்து தருகிறீர்கள்...

என்.கே.அஷோக்பரன் said...

;-)

பொலிஸ் நித்திரை கொள்ளுதா என்ன!?

இலங்கையின் நிலமை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகுது.

Admin said...

இலங்கையில் இன்று இதெல்லாம் சகஜமாகிவிட்டது. பொலிஸ் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

பகிர்வுக்கு நன்றிகள்