Wednesday, January 16, 2008
குறிப்பாகப் பெண்கள் கவனத்திற்கு...!
கையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்,மறைமுகமாக பொருத்திபதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பதுஇன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிகச்சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாகஇருக்கிறது.
அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதைஎத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமராக்கள்,கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
பொது இடங்களில் கேமராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள்,மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில்
வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய
நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு
தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி,கல்லூரி,விடுதிகளில் :
பள்ளி,கல்லூரி,விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில்,மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சகமாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் இன்று
சகஜமாக நடந்துவருகிறது. இதிலும் கவனமாக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள்,குளியலறைகள்,ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்கள்,பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது வேலைநிமித்தமாக அங்கு ஹோட்டல்கள்,லொட்ஜ்களில் தங்கநேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப்பார்க்கவும்.தங்களுக்குத் தெரியாமல் தங்களை,தங்கள் செயல்களை படமெடுக்கும்
கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.கவனம் தேவை.
மருத்துவமனைகள்(ஆஸ்பத்திரிகளில்)கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள்.தக்கதுணையுடன் செல்வது
நல்லது.மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும்போதும், ஆடைகளை மருத்துவ
காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள்.
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ளச் சொல்லும்போதும் கவனம் தேவை.உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்குச் செல்வது இயல்பானது.
அங்கு உடைகளைப்போட்டுப் பார்த்துச் சரிபார்க்க சிறியஅறை பெண்களுக்காகப் பெரிய கடைகளில்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்தத் துணிக்கடைகளின் உடைகளைப் போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால்
அங்கு கண்டிப்பாகக் கேமராக்கள் தங்களைக் கண்காணிக்கப் பொறுத்தப்பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா,துணிகளை மறைக்கிறார்களா
என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில்
கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்தக் கண்ணாடிகளிலும் இரண்டு வகைக் கண்ணாடிகள் உண்டு.இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒருவகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைப் பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு
அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்காட்டும். இந்த
இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்தக் கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்.இவைகளைக் கவனத்தில்
கொண்டு செயல்படவும்.
இறுதியாக :
நம்மையறியாமலேயே நம்மைப் படமெடுத்து,வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில்
பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிகச் சாதாரணமாகப் பரவிவருகிறது. இதற்குக்காரணம் கேமராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்
சிக்காமல்,தக்க விழிப்புணர்வை நம் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தகவல் உதவி : திரு.சாதிக்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மிகவும் பயனுள்ளவை ... முக்கியமாக பெண்களுக்கு ....கையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்... வந்து கொண்டுதான் இருக்கும் .... ஒருத்தரை தண்டிக்கலாம் இருவரை தண்டிக்கலாம் வளர்த்து கொண்டிருக்கும் லட்சகணக்கான பேரை எப்படி தண்டிப்பது ...
ஆகையால் நம்மிடம் தான் உள்ளது நம்முடிய பாதுகாப்பு ....
ஆமாம்.நிச்சயமாக சத்யா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் தோழி.
நல்ல தகவல்கள் ரிஷான்.
நன்றிகள் நிர்ஷன்... :)
விஞ்ஞானம் வளரும்போது வசதிகள் பெருகும் என்பது உண்மையான போதும் அதனைத் தவறாக, தீய வழிகளில் பயனபடுத்துபவரகளால் தொல்லைகள் பெருகும் என்பதை தெளிவாகக் காட்டியுள்ளீர்கள்.
ஆமாம் Dr.M.K முருகானந்தன் அவர்களே.
நாகரீகத்தின் வளர்ச்சியில் நாம் முன்னேற்ற நடைபோடும் போது கருந்நிழலாய் இப்படிப்பட்ட தீங்குகள் வந்துகொண்டேயிருக்கின்றன.எனவே தான் ஒவ்வொரு இடத்திலும் நாம் மிகச் சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டியவர்களாக உள்ளோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் நண்பரே.
Rishan,
Good collection of advices which is vital.
C.N.Raj
வாங்க C.N Raj,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...! :)
காலத்துக்கேற்ற சரியான பதிவு.
அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஆமாங்க பெண்கள் மட்டுமில்லை...ஆண்களும் சேர்ந்து இந்த கேமிரா செல்போன்காரங்க கிட்டே பார்த்து சூதானாம இருந்துக்கோங்க அப்பு...ஆப்பு எப்படி வேணுமின்னாலும் வைப்பாங்க
--
நட்புடன்
ரமேஷ்
(வேணுமின்னே யோசிப்போர் சங்கம்)
எதுக்குங்க இப்படி பயமுறுத்தறீங்க..? ஆக வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் போட்டுப்பார்த்து அளவு சரியில்லை என்றால் கொண்டே மாற்ற வேண்டியதுதான்..
நினைக்கவே பயங்கரமா இருக்கே !!
--
என்றென்றும்
சுதனின்விஜி
நல்ல பதிவு...
கவனத்துடன் என்றும் இருந்தால் இல்லை தொல்லை...என்பதை உணர்த்தியது, அன்பரே.
அன்பின் மஞ்சூரார்,
கருத்துக்கு நன்றி நண்பரே :)
சரியாகச் சொன்னீங்க ரமேஷ் :)
ஆஹா..இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வரவேண்டும் விஜிசுதன். :)
அன்பின் அராதா,
கருத்துக்கு நன்றி நண்பரே :)
கேமரா செல்பொன்களே தேவை இல்லாதது. இப்படி அவசரமாக புகைப்படம் எடுக்கும் அளவுக்கு யாருக்கு எமர்ஜென்சி வரும்? பேசாமல் தடை செய்துவிடலாம்.
Post a Comment