Thursday, January 7, 2010

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )

போரிலும் பகையிலும் முதல் பொருளாய்
அவளையே சூறையாடினாய்:
அவளுக்கே துயரிழைத்தாய் ;
உன்னால் அனாதைகளாக்கப் பட்ட
குழந்தைகளையெல்லாம் அவளிடமே ஒப்படைத்தாய்:
தலைவனாகவும் தேவனாகவும் நீ
தலை நிமிர்ந்து நடந்தாய்

(கவிஞர் ஃபஹீமாஜஹானின் 'ஒரு கடல் நீரூற்றி' தொகுப்பிலிருந்து)

               பல பத்திகளில் எழுத வேண்டியவற்றை, கவிஞரின் மேற்சொன்ன வரிகள் எளிதாகவும், விரிவாகவும், வெளிப்படையாகவும் விளக்குகிறது. போர்களிலும், பகைகளிலும், பல குடும்பங்களிலும் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியது. ஒவ்வொரு இடத்திலும் அவள் அத்திவாரமாக விளங்குவதாலோ என்னவோ, எதிரிகள் அவளையே சிதைக்கிறார்கள். எள்ளி நகையாடுகிறார்கள். காவலற்றுப் போன அகிம்சை விலங்கென, வேட்டையாடுகிறார்கள். எல்லாம் செய்யும் ஆண், தப்பித்துவிடுகிறான். சிலவேளை சிறிய தண்டனை அல்லது பொது மன்னிப்பு. பெண், காலங்காலமாக தன் வாழ்வின் இறுதிக் கணம் வரை ரணம் சுமக்க வேண்டியவளாகிறாள்.

             இனி, படங்களைப் பார்ப்போம். இப் படங்கள் உங்களை அதிரச் செய்யும். இப்படியுமா கொடூரங்களென வியக்கவும் செய்யும். பாதிக்கப்பட்டவர்களுக்காக மனமுருகவும் செய்யும். அவர்களின் துயருணர்ந்து, இது போல எவருக்குமே நிகழக் கூடாதெனப் பிரார்த்தியுங்கள். நீங்கள் அறிந்தவர்கள் எவரேனும் இவ்வாறான கொடூரங்களை நிகழ்த்த முற்பட்டால், தடுங்கள். பாதிக்கப்படப் போவது ஒரு உயிர். ஒரு முழு மனித வாழ்க்கை.

                  இப் படங்களில் இருப்பவர்கள், வன்னமில (Acid) வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள். இச் சாகசத்தைச் செய்தவர்கள் ஆண்கள். பாகிஸ்தான் நாட்டில் இவை பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவரும் யுக்தி அல்லது பழிக்குப் பழி.





# இரம் சயீத் (வயது 30) - 12 வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால், நடு வீதியில் வைத்து, அமில வீச்சுக்கு உள்ளாகி முகம், தோள், பின்புறமென முழுவதுமாகப் பாதிக்கப்பட்டார். இவரைக் காப்பாற்ற, இருபத்தைந்து ப்ளாஸ்டிக் சத்திரசிகிச்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
___________________________________________




# ஷமீம் அக்தர் (வயது 18) - இவரது 15 வயதில், மூவர் இவரைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திப் பின்னர் அமிலத்தை இவர் மீது எறிந்து தப்பித்தனர். இதுவரையில் பத்து ப்ளாஸ்டிக் சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
_________________________________________



# நஜாஃப் சுல்தானா (வயது 16) - பெண் குழந்தை வேண்டாமென்று கருதிய இவரது தந்தை, இவரது ஐந்து வயதில் இவரை எரித்துவிட்டார். இதன் காரணமாக முழுமையாகப் பார்வையிழந்த இவரை பெற்றோரும் கைவிட்டு விட, தற்பொழுது உறவினர்களிடம் தஞ்சமடைந்துள்ளார். பதினைந்து தடவைக்கும் மேலாக சத்திர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.
______________________________________




# ஷெஹ்னாஸ் உஸ்மான் (வயது 36) - ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பப் பிரச்சினையொன்றின் போது, இவரது உறவினரால் அமில வீச்சுக்குள்ளானார். நிவாரணம் பெறவேண்டி இதுவரை பத்து சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
______________________________________




# ஷானாஸ் பீபி (வயது 35) - பத்து வருடங்களுக்கு முன்னர் குடும்பப் பிரச்சினையொன்றின் போது உறவினரொருவரால் அமில வீச்சுக்குள்ளான இவர் எந்தவொரு சிகிச்சைகளுக்கும் இன்றுவரை உட்படுத்தப்படவில்லை.
_______________________________________



# கன்வால் கையூம் (வயது 26) - ஒரு வருடத்திற்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இவருக்கு இதுவரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை.
_______________________________________




# முனீரா ஆசிப் (வயது 23) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
_____________________________________



# புஷ்ரா ஷாரி (வயது 39) - தனக்குப் பிடிக்காத கணவரை விவாகரத்துச் செய்ய முற்பட்டபோது, அவரால் அமில வீச்சுக்காளான இவர், இதுவரை இருபத்தைந்து சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ளார்.
_________________________________________



# மைமூனா கான் (வயது 21) - குடும்பத் தகராறொன்றின் போது ஒரு இளைஞர் குழுவினால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை இருபத்தியொரு சத்திர சிகிச்சைகளுக்குள்ளாகியுள்ளார்.
__________________________________________



# ஸைனப் பீபி (வயது 17) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை பல சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
 _____________________________________



நைலா ஃபர்ஹத் (வயது 19) - ஐந்து வருடங்களுக்கு முன்னர், இவர் திருமணம் செய்ய மறுத்த இளைஞனால் அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஏழு சத்திர சிகிச்சைகளுக்காகியுள்ளார்.
 ______________________________________



ஸாய்ரா லியாகத் (வயது 26) - பதினைந்து வயதில் திருமணமான இவர், படிப்பைத் தொடர வேண்டுமென விரும்பியதால் தனது கணவராலேயே அமில வீச்சுக்குள்ளானார். இதுவரை ஒன்பது முறை சத்திர சிகிச்சைகளுக்காளாகியுள்ள இவர், கையில் வைத்திருப்பது பழைய புகைப்படம்.

              இது போலவும், இன்னும் பல விதங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும் பாகிஸ்தானில் மட்டுமல்ல. எல்லா தேசங்களிலும்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

              போகப் பொருளாகவும், விளம்பரங்களுக்கும், அங்கங்களை வர்ணிக்கவும் பயன்படும் பெண்கள் மட்டுமல்ல. இவ்வாறாக பாதிப்புற்ற பெண்களும் நம் மத்தியில் உலவிக் கொண்டுதானிருக்கிறார்கள்.

             இவர்களுக்காகவும் நம் ஊடகங்களும், மக்களும் குரலெழுப்ப வேண்டும். பூமியெங்கும் நடை பாதை, சுவாசிக்கத் தென்றல், அருந்த நீர் - வாழும் உரிமை அவர்களுக்கும் இருக்கிறது !

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



41 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

படங்கள் தெரியவில்லை. படங்களைத் தரவிறக்கி இணைத்துவிடுங்கள்.

Anonymous said...

படங்கள் தெரியவில்லை..........

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இப்போது படங்கள் தெரிகின்றன. தெரியாமலே விட்டிருந்தால் நல்லாய் இருந்திருக்கும் போல கிடக்குது. :(

Rajakamal said...

மனித உருவத்தில் உலவும் மிருகங்களை அடையாள படுத்தியது இந்த செய்திகளும் படங்களும் - இந்த மிருகங்கள் தண்டிக்கப் பட்டால் தான் மேலும் பல பெண்களின் வாழ்கை நாசமாகமல் இருக்கும்

கண்ணகி said...

ஆந்திர்ரவில் இதுபோல் நடந்தபோது மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட்டர்களே..அதுபோல் இத்ற்கு காரணமான பாவிகளை சுட்டுத்த்ள்ளியிருக்கவேண்டும்..

சிவாஜி சங்கர் said...

:(

மகிழ்நன் said...

மிகவும் வருத்தத்திற்குரியது...........ஆண் சமூகம் திருந்த வேண்டும்....நான் உட்பட.......என்னில் மீதமிருக்கும் ஆணாதிக்க போக்குகளும் விரைவில் அழியட்டும்

ரகசிய சிநேகிதி said...

”மனித உருவில் வளர்ந்து கொண்டிருக்கும் மிருகங்கள்”


இந்த மிருகங்களைச் சிறைப்பிடிக்க...
பெண்களே சிறைக் கம்பிகளாக மாறவேண்டும்..இல்லையென்றல் இந்த கொடுமைகள் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்...

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

என்ன கொடுமை..அப்பப்பா பார்க்கவே தாங்கவில்லையே எப்படி அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.எல்லாவிதத்திலும் பாதிக்கப்படுபவள் பெண்ணாகத்தான் இருக்கின்றாள்....

siras said...

no comments at the moment,

தர்ஷன் said...

என சொல்வதென்றே தெரியவில்லை
ஆணாய் பிறந்ததற்காய் வெட்கப்படுகிறேன்

அண்ணாமலையான் said...

அந்த பேடிப்பயல்களை கொல்லவில்லையா?

My Blog said...

oh God.......

Prem said...

God.... So very gruesome.... With development in science, people attitude does not improve any further!

Pebble said...

Thanks for the proper explanation of each picture bro. Some of the bloggers in tamilmanam posted these pictures with the comment "These girls are punished because they rejcet to wear Hijab'.

பூங்குழலி said...

மனதை வதைக்கும் படங்கள்

ARV Loshan said...

கொடூரத்தின் உச்சம்.. பாவம் இந்தப் பெண்கள்..
இந்தப் படுபாதக செயல் செய்த பதர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது பற்றிய விபரங்களை யாராவது வெளியிடுங்கள்..

PPattian said...

மனம் கனக்குது.. என்ன சொல்வதென்று தெரியவில்லை. :(

M.Rishan Shareef said...

அன்பின் மதுவதனன் மௌ.,

//இப்போது படங்கள் தெரிகின்றன. தெரியாமலே விட்டிருந்தால் நல்லாய் இருந்திருக்கும் போல கிடக்குது. :(//

:(

உங்கள் கருத்தினைக் கண்டு படங்களை மீளப்பதிவிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Rajakamal,

//மனித உருவத்தில் உலவும் மிருகங்களை அடையாள படுத்தியது இந்த செய்திகளும் படங்களும் - இந்த மிருகங்கள் தண்டிக்கப் பட்டால் தான் மேலும் பல பெண்களின் வாழ்கை நாசமாகமல் இருக்கும்//

நிச்சயமாக.
ஆனால் தண்டனைதான் அவர்களுக்கு இல்லை :(
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கண்ணகி,

//ஆந்திர்ரவில் இதுபோல் நடந்தபோது மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்ல்ப்பட்ட்டர்களே..அதுபோல் இத்ற்கு காரணமான பாவிகளை சுட்டுத்த்ள்ளியிருக்கவேண்டும்..//

நிச்சயமாக.
ஆனால் எந்தத் தண்டனைக்கும் அவர்கள் ஆளாகவில்லை. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சிவாஜி சங்கர்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ரகசிய சினேகிதி,

//”மனித உருவில் வளர்ந்து கொண்டிருக்கும் மிருகங்கள்”


இந்த மிருகங்களைச் சிறைப்பிடிக்க...
பெண்களே சிறைக் கம்பிகளாக மாறவேண்டும்..இல்லையென்றல் இந்த கொடுமைகள் எல்லாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்...//

ஆமாம்..ஆனால் பாகிஸ்தானில் இது நடக்க வாய்ப்பே இல்லை :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் முனைவர் கல்பனாசேக்கிழார்,

//என்ன கொடுமை..அப்பப்பா பார்க்கவே தாங்கவில்லையே எப்படி அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.எல்லாவிதத்திலும் பாதிக்கப்படுபவள் பெண்ணாகத்தான் இருக்கின்றாள்....//

ஆமாம் சகோதரி.
அந்தப் பெண்களின் முழு வாழ்க்கைக்குமே அழியாத வடு இது. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சிராஸ்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் தர்ஷன்,

//என சொல்வதென்றே தெரியவில்லை
ஆணாய் பிறந்ததற்காய் வெட்கப்படுகிறேன்//

:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் மகிழ்நன்,

//மிகவும் வருத்தத்திற்குரியது...........ஆண் சமூகம் திருந்த வேண்டும்....நான் உட்பட.......என்னில் மீதமிருக்கும் ஆணாதிக்க போக்குகளும் விரைவில் அழியட்டும்//

ஆணாதிக்கப் போக்கற்று, பெண்ணையும் சக மனிதன் என மதித்தால் போதும். அந்தப் பண்பு நிச்சயம் உங்களிடமிருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே ! :)

M.Rishan Shareef said...

அன்பின் அண்ணாமலையான்,

//அந்த பேடிப்பயல்களை கொல்லவில்லையா?//

இல்லை.
அவர்களுக்கு எந்தத் தண்டனையுமில்லை.
குடும்பப் பிரச்சினைகளில் காவல்துறை தலையிடுவதில்லையாம். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Poopoova ,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் ப்ரேம்,

//God.... So very gruesome.... With development in science, people attitude does not improve any further!//

நிச்சயமாக நண்பரே.
இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகள் இன்னும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் அனானி,

//Thanks for the proper explanation of each picture bro. Some of the bloggers in tamilmanam posted these pictures with the comment "These girls are punished because they rejcet to wear Hijab'.//

:(
உண்மையில் அது காரணமில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//மனதை வதைக்கும் படங்கள்//

ஆமாம். :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் லோஷன்,

//கொடூரத்தின் உச்சம்.. பாவம் இந்தப் பெண்கள்..
இந்தப் படுபாதக செயல் செய்த பதர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்பது பற்றிய விபரங்களை யாராவது வெளியிடுங்கள்..//

இக் குற்றங்களைச் செய்தவர்கள் எவர்க்கும் தண்டனை எதுவும் வழங்கப்படவில்லை.
குற்றவாளிகள் தப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். :(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் புபட்டியன்,

//மனம் கனக்குது.. என்ன சொல்வதென்று தெரியவில்லை. :(//

:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

microthambi said...

என் ஆசிரியருக்கு நடந்த இத்தகையதொரு கொடுமையின் விளைவை நேரில் பார்த்த வலியின் அளவை பன்மடங்கு உயர்த்திவிட்டன இந்த புகைப்படங்கள்.சட்டத்தினால் குற்றவாளிகள் தண்டிக்க படவில்லை என்பது ஆத்திரபடவைக்கிறதுjj

மதார் said...

மனசு வலிக்குது , இந்த தவறு செஞ்சவங்கள கடவுள்தான் தண்டிக்கணும் .

கிரி said...

கொடுமையாக உள்ளது.. அவர்கள் தினம் தினம் செத்து செத்து பிழைப்பார்களே! நினைத்தாலே குலை நடுங்குது!

Tamilish Team said...

Hi Rishan,

Congrats!

Your story titled 'அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 9th January 2010 10:14:01 AM GMT



Here is the link to the story: http://www.tamilish.com/story/165864

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

hamaragana said...

நண்பரே உலகின் மிக கொடுரமான சிந்தனை உள்ளவனும்மனம் இறங்கும் இப்படத்தை பார்த்தல்
இதை செய்த கொடுர மிருகத்திற்கு அதே அமிலம் கொடுத்தால் என்ன !!!! அப்படி செய்தால்தான் இனி இதுபோல் நடவாது... மனம் கனக்க வைத்து விட்டீர்கள் ... தாள முடியவில்லை ..

Anonymous said...

sorry, i don't want to say anything. if they are muslim they cannot do this matter. ALLAH will see all of

Unknown said...

parkkum podu manm uruhu hintradu
awahalin walwu pawam ewwalawu kadinamaha irukkum..ellam walla allahdan awarhalukku arul puriya wendum