நீண்ட வருடங்களின் பின்னர் நான் கற்ற எனது கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தது. பல நல்ல மாற்றங்களைக் கட்டடங்களிலும் பூந்தோட்டங்களிலும் காணமுடிந்ததில் மகிழ்ச்சி.
எனது சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லாவின் 'பிஞ்சு மனசு' எனும் முதலாவது பாடல் இசைத் தொகுப்பின் இருவட்டு (Audio CD) வெளியீட்டு விழா 23-10-2009 அன்று கல்லூரி மண்டபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இலங்கை, மடவளை பஸாரைச் சேர்ந்த கவிஞர் நிஸார் எழுதி பாத்திமா ஷம்லா பாடிய இச் சிறுவர் பாடல்களை இசைத்தட்டு இருவட்டாக, விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மலையக சேவைப் பணிப்பாளர் திரு.Z.S.சிராஜ் லுத்ஃபி வெளியிட்டு வைத்தார்.
தொகுப்பிலிருந்து ஒரு பாடல் கீழே...
(இப் பாடலை வலையேற்ற உதவிய நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி !)
இந் நேரத்தில் விழாவுக்கு நேரில் சமூகமளித்தும், தொலைபேசி, மின்னஞ்சல்கள் மூலமும் தமது வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்ட அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
32 comments:
அன்பின் ரிஷான்
உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது. எனது மனமுவந்த வாழ்த்துக்கள்
அன்பு ரிஷான்,
இந்த பாடலை கேட்டேன். நன்றாக இருக்கின்றது. உங்கள் சகோதரியின் மகளுக்கு நல்ல குரல் வளம். என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிக்கவும். மேலும் பாடல் வரிகளை எழுதிய நிசார் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்.
உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது.
உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது.
வித்யாசமான குரல் உங்களுடைய அக்க மகளுக்கு இருக்கிறது. 'ழ' - என்ற வார்த்தைதான் அவருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அவளுக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள்.
எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.
ரிஷான்,
இனிய குரல் வளம் ஷம்லாவுக்கு.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
nalla kural vazam nantraga ullathu thodarattumippayanam vazthukkal
ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துகள்.
ரிஷான்
குழந்தைகள் பேசினாலே பாடுவது போல இருக்கும்! மழலைசொல் இனிதாயிற்றே! இந்தக்குழந்தை நிஜமாகவேபாடுகிறது....குரல் வளம் அற்புதம்! பாடல்வரிகளும் சிறப்பு! வாழ்த்துகளும் ஆசிகளும் குழந்தைக்கு!
அன்பின் கானாபிரபா,
//அன்பின் ரிஷான்
உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது. எனது மனமுவந்த வாழ்த்துக்கள்//
உங்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மனம் மகிழச் செய்கிறது. இரண்டையும் மருமகளிடம் சேர்ப்பித்து விட்டேன். பெரிதும் மகிழ்ந்தார்.
நீங்கள் கேட்டபடி விரைவில் தொகுப்பின் மற்றப்பாடல்களையும் அனுப்பிவைக்கிறேன்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஷேக் தாவூத்,
//அன்பு ரிஷான்,
இந்த பாடலை கேட்டேன். நன்றாக இருக்கின்றது. உங்கள் சகோதரியின் மகளுக்கு நல்ல குரல் வளம். என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவிக்கவும். மேலும் பாடல் வரிகளை எழுதிய நிசார் அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து விடவும்.//
நிச்சயம் அவர்களிடம் தெரிவித்துவிடுகிறேன் நண்பரே !
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !
அன்பின் மூர்த்தி,
//உறுத்தாத இசையோடு அந்தக் குரலினிமையும் சொற்களின் ஆழமும் உண்மையில் சிறப்பாக இருக்கின்றது.//
உங்கள் முதல் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கிருஷ்ணபிரபு,
//வித்யாசமான குரல் உங்களுடைய அக்க மகளுக்கு இருக்கிறது. 'ழ' - என்ற வார்த்தைதான் அவருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். அவளுக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள்.
எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மகிழ்ச்சி.//
நிச்சயமாக 'ழ' உச்சரிப்பில் உள்ள குறையை நானும் தொகுப்பு வெளியான பின்புதான் கண்டுகொண்டேன். உடனே கற்றுக்கொடுக்கத் தொடங்கிவிட்டேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஃபஹீமா ஜஹான்,
//ரிஷான்,
இனிய குரல் வளம் ஷம்லாவுக்கு.
மனம் நிறைந்த வாழ்த்துக்கள்//
உங்கள் வாழ்த்துக்கள் அவர் வாழ்வில் மேலும் வளம் சேர்க்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் அலாவுதீன்,
//nalla kural vazam nantraga ullathu thodarattumippayanam vazthukkal//
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் ஜெஸிலா,
//ரொம்ப அழகா பாடுறாங்க. வாழ்த்துகள்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஷைலஜா அக்கா,
//ரிஷான்
குழந்தைகள் பேசினாலே பாடுவது போல இருக்கும்! மழலைசொல் இனிதாயிற்றே! இந்தக்குழந்தை நிஜமாகவேபாடுகிறது....குரல் வளம் அற்புதம்! பாடல்வரிகளும் சிறப்பு! வாழ்த்துகளும் ஆசிகளும் குழந்தைக்கு!//
ஒரு பாடகியின் வாழ்த்துக்களும் ஆசிகளும் நிச்சயம் அப் பிள்ளையை மேலும் வளரச் செய்யும் அக்கா.
வருகைக்கும் அன்பான ஆசிகளுக்கும் நன்றி அன்பு அக்கா !
RISHAN REALLY NICE SONG.........SWEET VOICE.......I LIKE IT SO MUCH..........TELL MY REGARDS.......
அன்பின் ஹேமா,
//RISHAN REALLY NICE SONG.........SWEET VOICE.......I LIKE IT SO MUCH..........TELL MY REGARDS......//
நிச்சயம் சொல்கிறேன். வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி !
வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் சகோதரி மகள் இன்னும் பல புகழ்களை அடையவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு என் வாழ்த்துக்கள்.
அன்பின் Aren,
//வாழ்த்துக்கள் நண்பரே.
உங்கள் சகோதரி மகள் இன்னும் பல புகழ்களை அடையவேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அதற்கு என் வாழ்த்துக்கள். //
உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
ஹாய் நண்பரே! உங்கள் அக்காவின் மகளுக்கு எனது உள்ளம் கனிந்த பாராட்டுக்கள். இக் கலையில் பாண்டித்தியம் பெற்று மேன்மேலும் பலவிருதுகள் பெற வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லா இனிமையாகவும் அழகாகவும் பாடுகிறார். நல் வாழ்த்துக்கள்.
பாடல் அருமையாக இருக்கிறது.. மருமகளுக்கு வாழ்த்தினை தெரிவியுங்க ரிஷான்..
இன்று மாலை கானாவின் வானொலியில் இந்தப் பாடலைக்கேட்டேன். பின்னர் அவரிடம் யார் பாடியது எனக் கேட்டபோது உங்கள் அக்காவின் மகள் என்றார். நல்ல குரல் வளம் பாடல் வரிகள் கூட அருமை
பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள்.....மென்மேலும் வளர வாழ்த்துகள்...பாராட்டுகள்..
அன்பின் ஜனகன்,
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே !
அன்பின் டொக்டர் முருகானந்தன்,
//உங்கள் சகோதரியின் மகளான பாத்திமா ஷம்லா இனிமையாகவும் அழகாகவும் பாடுகிறார். நல் வாழ்த்துக்கள்.//
உங்கள் அன்பான வாழ்த்துக்களில் மகிழ்கிறேன்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !
அன்பின் மன்மதன்,
//பாடல் அருமையாக இருக்கிறது.. மருமகளுக்கு வாழ்த்தினை தெரிவியுங்க ரிஷான்..//
நிச்சயம் தெரிவித்து விடுகிறேன்.
நன்றி நண்பரே !
அன்பின் வந்தியத்தேவன்,
//இன்று மாலை கானாவின் வானொலியில் இந்தப் பாடலைக்கேட்டேன். பின்னர் அவரிடம் யார் பாடியது எனக் கேட்டபோது உங்கள் அக்காவின் மகள் என்றார். நல்ல குரல் வளம் பாடல் வரிகள் கூட அருமை//
நீங்கள் கேட்டு ரசித்ததில் மகிழ்ச்சி.
வானொலியில் ஒலிபரப்பிய நண்பர் கானாபிரபாவுக்கு நன்றி.
வருகைக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பர் வந்தியத்தேவன் !
அன்பின் சரண்யா,
//பாத்திமா ஷம்லாவிற்கு வாழ்த்துகள்.....மென்மேலும் வளர வாழ்த்துகள்...பாராட்டுகள்..//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி !
Post a Comment