Sunday, January 10, 2010

ஜனாதிபதித் தேர்தல் (வீரனைத் தேடும் போட்டி)


தின்றுகொண்டு
தின்றுகொண்டு
அவர்கள் ஒன்றாக
வரும்பொழுது
ஒருவாறு
தப்பித்த எனக்கு
கால்களை மேலே போட்டவாறு
இனி
பார்த்துக் கொண்டிருக்கலாம்
ஒருவன் மற்றவனைத்
தின்றுகொள்ளும் போது
குட்டை வால்
எஞ்சும் வரைக்கும்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்)
தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்,
                    இலங்கை


நன்றி
# உயிர்மை
# இனியொரு
# நவீன விருட்சம்

8 comments:

லறீனா அப்துல் ஹக் said...

ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.

அப்துல் ஜப்பார் said...

வாழ்க... வளர்க... தொடர்க...!

RADAAN said...

பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv

http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx

நடராஜன் கல்பட்டு said...

தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.

M.Rishan Shareef said...

அன்பின் நடராஜன் ஐயா,

//தேர்தல் வரை அடித்துக் கொள்ளும் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலுக்குப் பின் ஒன்று சேர்ந்து நம்மைத் தின்பார்கள் என்பதை அழகாகச் சொல்லி விட்டார் கவிஞர்.//


:)
கருத்துக்கு நன்றி ஐயா !

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி லறீனா அப்துல் ஹக்,

//ஒருவர்மாறி ஒருவராய் அல்லது ஒன்றாய்ச் சேர்ந்துகொண்டு மக்களைத் தின்று தின்று கொழுத்த அரசியல்வாதிகள், தமக்குள் கடித்துக் குதறிக்கொள்வது தேர்தலின்போதுதானே! மாஷா அல்லாஹ் ! யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதை. தமிழில் அதனை மொழியாக்கம் செய்துள்ள சகோ.ரிஷான் ஷெரீஃபுக்கு வாழ்த்துக்கள்.//

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி.

M.Rishan Shareef said...

அன்பின் அப்துல் ஜப்பார் ஐயா,

//வாழ்க... வளர்க... தொடர்க...!//


அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா !

விஜி said...

சூழலுக்கேற்ற கவி வரிகள் ரிஷான்.:))