Tuesday, April 1, 2008

ஐ-பொட் / செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்தவர்களுக்காக...!

செல்பேசிகளைத் தண்ணீரில் நனைத்த அனுபவம் நிறையப் பேருக்கு உண்டு. தானாகவே யாரும் நனைக்கமாட்டோம். எனினும் எதிர்பாராதவிதமாக இது நடந்துவிட்டிருக்கும். அப்போது என்ன செய்யலாம்?




1) முதலில் செல்பேசியின் மின்னினைப்பைத் துண்டிக்கவும்.

2) செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.

3) ஒரு கிண்ணம் முழுவதும் 'அரிசி' யை எடுத்துக்கொள்ளவும். அரிசியானது ஈரப்பதத்தை முழுவதும் உறிஞ்சக்கூடிய ஒரு பொருளாகும். (சமைக்கப்படாத அரிசி மட்டுமே இந்தச் செய்முறைக்கு உதவும்)

4) உறையிலிட்ட செல்பேசி / ஐ-பொட் ஐ இந்தக் கிண்ணத்தில் உள்ள அரிசிக்குள் 24 மணிநேரம் வைத்திருக்கவும்.



5) செல்பேசி / ஐ-பொட்டின் - மின்கலங்களை (பேட்டரி) தனியாக வேறொரு அரிசிக்கிண்ணத்தில் வைப்பது உத்தமம்.

6) ஒட்டுமொத்த ஈரப்பதமும் துப்புறவாக உலர்வதற்கு 24 மணிநேரமாவது தேவைப்படும்.

7) அடுத்த நாள் உங்களது தண்ணீரால் நனைக்கப்பட்ட கருவி அற்புதமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.

தகவல் உதவி - ரம்யா.

24 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

எனக்கு ரெமோட் கொன்றோல் தண்ணீரில் மூழ்கிய அனுபவம்; நன்கு காயவைத்த போது மீண்டும் இயங்கியது.

இறக்குவானை நிர்ஷன் said...

தகவல் உண்மையா என்றத ஐபொட்டை தண்ணீரில் போட்டுப் பார்த்து சொல்றேன்.
என்ன சொல்றீங்க?

Unknown said...

ஏப்ரல் 1 அ வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே?

Unknown said...

நல்ல உபயகாரமான தகவல்.செல்பேசி (கைபேசி) ஐ தண்ணிரில் போட்டுவிட்டு
பின் செல்பேசி நிறுவனத்துடன்(cell shop selleing cell phones) சண்டை போடும் வழக்கத்திற்கு இனி good bye.

M.Rishan Shareef said...

அன்பின் யோகன்,

சில மின்னணுச் சாதனங்கள் வெயிலில் காயவைப்பதால் அதனுள்ளிருக்கும் சர்க்யூட்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
செல்போன் களுக்கும் அதிகளவு வெயிலுக்கும் ஆகவே ஆகாது.

ரிமோட் கொண்ட்ரோலைப் பொறுத்தவரையில் வெயிலில் காயவைத்ததில் பாதிப்பு குறைவாக அமைந்தது அது குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டிற்கு மட்டுமே பாவிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதும் காரணமாயிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

M.Rishan Shareef said...

வாங்க் நிர்ஷன்,

//தகவல் உண்மையா என்றத ஐபொட்டை தண்ணீரில் போட்டுப் பார்த்து சொல்றேன்.
என்ன சொல்றீங்க?//

தாராளமா போட்டுப் பாருங்க.
அப்புறம் வீட்டுக்காரம்மா சத்தம் போட்டாங்கன்னா நான் பொறுப்பில்லை.. :P

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் தஞ்சாவூரான்,

//ஏப்ரல் 1 அ வச்சு காமெடி கீமெடி எதுவும் பண்ணலயே?//

ஐயோ,அப்படி ஒன்றும் இல்லை நண்பரே.வேண்டுமென்றால் முயற்சி செய்து பார்க்கலாம் :P.

M.Rishan Shareef said...

அன்பின் நெல்லை,

புதிதாக மின்னணுச் சாதனங்கள்,மின்சார உபகரணங்கள் வாங்கும் போதும் அதனுடன் தரப்படும் கையேட்டினை ஒரு முறை தெளிவாகப் படித்துவிட்டு,பத்திரமாக எடுத்து வைத்துக் கொள்வது உத்தமம்.
இது போன்ற சமயங்களில் அவை பெரிதும் உதவும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

KARTHIK said...

நல்ல தகவல் ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Anonymous said...

செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.

What do you mean by this?

Anand

M.Rishan Shareef said...

வாங்க ஆனந்த்,

//செல்போனை நன்றாக ஒரு உறையிலிடவும்.//

அதாவது ஈரலிப்பாக இருக்கும் செல்போன் அல்லது ஐ பொட்டை நேரடியாக அர்சியில் இடும் போது அரிசியில் உள்ள மெல்லிய தூசு இவற்றில் ஒட்டிக் கொள்ளும் சாத்தியங்கள் இருக்கிறதல்லவா?

அதனைத் தவிர்க்கத்தான் உறையிலிடும்படி சொல்லப்பட்டுள்ளது.இங்கு குறிப்பிடப்படும் உறை என்பது மெல்லிய கடதாசியாலான உறையையே குறிக்கும்.

வருகைக்கும்,கேள்விக்கும் நன்றிகள் நண்பரே :)

ஜாம்பஜார் ஜக்கு said...

இன்னாது? மெய்யாலுமா? வாத்யார் அப்டியே உங்க செல்போன குட்தீங்கன்னா டெஸ்ட் பண்ணி பாக்க வஸ்தியா இருக்கும் :)))

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
http://jambazarjaggu.blogspot.com/2008/04/blog-post_22.html

M.Rishan Shareef said...

வாங்க ஜாம்பஜார் ஜக்கு அண்ணாத்தே....:)

இன்னா அண்ணாத்தே இப்படிக்கேட்டுப்புட்டீக..?
என்னமோ அடிக்கடி நீங்க செல்போனையெல்லாம் தண்ணில போட்டுக்குறீகன்னு சொன்னதால இந்தப் பதிவு போட்டிருக்கேன்.
இதுல என்னோட செல்போன் வேற வேணுமா?
உங்க போதைக்கு நான் ஊறுகாயா அண்ணாத்தே ?:(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

நிஜமா நல்லவன் said...

என்னோட w850 சோனி எரிக்சன் ஒரு சொட்டு தண்ணி உள்ள போனதுக்கே வேலை செய்யல. நீங்க நெசந்தான் சொல்லுறீகளா?

M.Rishan Shareef said...

வாங்க நிஜமா நல்லவன் :P,

எப்பவோ ஒரு சொட்டுத்தண்ணி உள்ளே போனதுக்கு இது சரிப்படாதுங்க..!
இப்ப போச்சுன்னா அடுத்த கணமே இதை செஞ்சுபார்க்கணும்.அப்ப சரியாகும் நண்பரே :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் :)

கோகுலன் said...

எனது நண்பரின் ஐபாட் வாஷிங் மெசினில் போட்டு துவைத்து எடுத்தும் கூட நன்றாகவே இயங்குகிறது...

:))

M.Rishan Shareef said...

வாங்க கோகுலன் :)

//எனது நண்பரின் ஐபாட் வாஷிங் மெசினில் போட்டு துவைத்து எடுத்தும் கூட நன்றாகவே இயங்குகிறது...//

அட அப்படியா? புதுவிதமான ஐ பொட்டா இருக்கே..? :)

என்ன பிராண்ட்,விலை ன்னு கொஞ்சம் விசாரித்துச் சொன்னால் எனக்கு ஒன்று வாங்க உதவியாயிருக்கும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

ரம்மி said...

எனது செல்போன் கூட கோக்கில் விழுந்துவிட்டது. பேட்டரியை வெளியே எடுத்து உலர்ந்தவுடன் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தது. வெரைசான் மாடல். இப்போது தான் முதல் முறையாக அரிசி முறை படிக்கிறேன். உபயோகமான தகவல், நன்றி.

M.Rishan Shareef said...

வாங்க கயல்விழி.. :)

//எனது செல்போன் கூட கோக்கில் விழுந்துவிட்டது. பேட்டரியை வெளியே எடுத்து உலர்ந்தவுடன் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தது. வெரைசான் மாடல்.//

உட்பகுதி சிறிதளவுதான் நனைந்திருக்கவேண்டும்.ஆனாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)

Anonymous said...

மழையில் நனைந்த என் செல்போன் வேலைசெயியவில்லை
மொனிடர் மேல் (எல்சிடி இல்லை) 1 மணி வைத்தபின் வேலை செய்தது. அரிசி விளையாடட்டில் நம்பிக்கை இல்லை. காரணம் தன்னிருடன் தொட்டுக்ாகன்டு இருந்தால் தான் அரிசி உறிஞ்சும் என நினைக்கிறன்.

M.Rishan Shareef said...

வாங்க மயூரன் :)

//மழையில் நனைந்த என் செல்போன் வேலைசெயியவில்லை
மொனிடர் மேல் (எல்சிடி இல்லை) 1 மணி வைத்தபின் வேலை செய்தது. அரிசி விளையாடட்டில் நம்பிக்கை இல்லை. காரணம் தன்னிருடன் தொட்டுக்ாகன்டு இருந்தால் தான் அரிசி உறிஞ்சும் என நினைக்கிறன்.//

மொனிட்டர் மேலுள்ள வெப்பம் செல்போனின் ஈரத்தைக் காயவைத்திருக்கும் என நினைக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)

Tech Shankar said...

Me the first (Suttaalum men makkal men makkale)

http://tamizh2000.blogspot.com/2008/03/blog-post_490.html

M.Rishan Shareef said...

//Me the first (Suttaalum men makkal men makkale)

http://tamizh2000.blogspot.com/2008/03/blog-post_490.html //

பார்த்தேன். மிகவும் அழகாகச் செய்திருக்கிறீர்கள் தமிழ்நெஞ்சம்.

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே :)