
எழுத்தாளர் மலர்வதி எழுதி, அண்மையில் இளம் சாகித்ய அகாதமி விருது பெற்ற 'தூப்புக்காரி' நாவல் குறித்து மிகப் பரவலான விமர்சனங்களை வாசிக்கக் கிடைத்தது. நான் வசிக்கும் இலங்கையில் கிடைக்காத இத் தொகுப்பினை வாசிக்க இருக்கும் ஆவலினை எனது முகப்புத்தகத்தில் பகிர்ந்திருந்தேன். இந்தியா, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து எழுதி வரும் வலைப்பதிவரும், எனது அன்பு நண்பருமான
திரு. ரத்னவேல் நடராஜன் அவர்கள் உடனே எனது இலங்கை முகவரிக்கு அத் தொகுப்பினை அனுப்பி வைத்திருக்கிறார்.
நேரில் சந்தித்திராத போதிலும், எழுத்தின் மூலமாகக் கிடைக்கும் அன்பும், நட்பும், நேசமும் எதிர்பாராத நேரத்திலொரு பூத் தொடுதல் போல எவ்வளவு மகிழ்வுக்குரியதாக இருக்கிறது!
தொகுப்பு கிடைக்கப் பெற்று, மிகவும் மகிழ்வாக உணரும் இச் சந்தர்ப்பத்தில்
அன்பு நண்பர் திரு. ரத்னவேல் நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியையும்
பகிர்ந்துகொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்