அன்பின் நண்பர்களுக்கு,
இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், கடந்த
வருடம் காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட எனது மொழிபெயர்ப்பு நாவலான
'அம்மாவின் ரகசியம்' நாவலுக்கு '2011 ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்பு நாவலுக்கான அரச
இலக்கிய சாகித்திய விருதும், சான்றிதழும், பணப்பரிசும்' கிடைக்கப்பெற்றது
என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.இவ்வருடத்துக்கான அரச இலக்கிய சாகித்திய விருது விழா கடந்த 30.09.2012 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கை, வெயங்கொட, பத்தலகெதர, சியனே தேசிய கல்வியியல் கல்லூரி மண்டபத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. 2011ம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்கள் தெரிவு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகளும், சான்றிதழ்களும், பணப் பரிசுகளும் இந்நிகழ்வின் போது வழங்கப்பட்டன.
இக் கணத்தில் இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுனேத்ரா ராஜகருணாநாயக்க, மொழிபெயர்ப்பில் உதவிய சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹான், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், காலச்சுவடு பதிப்பகம், நாவலுக்கு முன்னுரை எழுதித் தந்த எழுத்தாளர் அம்பை, எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் இந் நாவல் வெளிவர பாடுபட்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.
என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்