Sunday, January 1, 2012

எனது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீடும், சர்வதேச சிறுகதைப் போட்டியில் முதல் பரிசும்!

2012 ஆம் ஆண்டு இனிதே மலர்ந்திருக்கிறது. நண்பர்கள், பதிவர்கள், வாசகர்கள் மற்றும் என்னை நேசிக்கும் அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !

புத்தாண்டு மலரப் போகும் தருணத்தில் எதிர்பாராமல் எனக்கு கிடைத்த பரிசு மிகுந்த ஆனந்தத்தைத் தந்திருக்கிறது. சென்ற வருடம் அதிக வேலைப் பளுவின் காரணமாக எனது சிறுகதைகளுக்கான வலைத் தளத்தில் மூன்று சிறுகதைகளை மாத்திரமே பதிவிட முடிந்தது. எழுத்தாளர் மாதவராஜ் அறிவித்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற வம்சி சிறுகதைப் போட்டி 2011 க்கு அவற்றையே கொடுத்திருந்தேன். போட்டிக்கு மொத்தமாக 373 சிறுகதைகள் வந்திருந்ததைக் கண்டேன். எனவே நிச்சயமாக பரிசை எதிர்பார்த்திருக்கவேயில்லை.

நேற்று வந்திருந்த மின்னஞ்சல்கள் மற்றும் எஸ்.எம்.எஸ் வாழ்த்துக்களின் மூலமே சர்வதேச ரீதியில் நடாத்தப்பட்ட வம்சி சிறுகதைப் போட்டியின் முதல் பரிசு எனது 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' சிறுகதைக்குக் கிடைத்திருக்கிறதென்பதை முதலில் அறிந்துகொண்டேன். இப் பரிசு பெரும் ஊக்கத்தைத் தந்திருப்பதோடு கூடவே நல்ல படைப்புக்களை மாத்திரமே தொடர்ந்தும் வழங்க வேண்டுமெனும் பெரும் பொறுப்பையும் இனிய சுமையாய் என் மீது சுமத்தியிருக்கிறது.

இக் கணத்தில் போட்டியை ஏற்பாடு செய்து நடத்திய எழுத்தாளர் மாதவராஜ், வம்சி பதிப்பகம் மற்றும் நடுவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய பரிசுகளைப் பெற்ற சக போட்டியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

இச் சிறுகதையும், ஏனைய பரிசுகளைப் பெற்ற 17 சிறுகதைகளும் ஒரு தொகுப்பாக வரவிருப்பதாகவும், பரிசு பெற்ற எனது சிறுகதைத் தலைப்பான 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' எனும் தலைப்பே தொகுப்புக்கு வைக்கப்படவிருப்பதாகவும்,எதிர்வரும் வாரத்தில் நடைபெற இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சியில்  இத் தொகுப்பை வெளியிட நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் வம்சி பதிப்பகம் அறிவித்திருக்கிறது.

அத்தோடு, எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் 08.01.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று, சரியாக மாலை 5.45 மணிக்கு, எனது மொழிபெயர்ப்பு நாவலான 'அம்மாவின் ரகசியம்' எனும் நாவல் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவரவிருக்கிறது என்பதையும் மகிழ்வுடன் அறியத் தருகிறேன்.

2011 ஆம் ஆண்டு தனது நாவலுக்காக 'சுவர்ண புஸ்தக' விருதையும், ஐந்து இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பணப்பரிசையும் வென்ற பெண் எழுத்தாளரான சுநேத்ரா ராஜகருணாநாயகவின் நாவலையே நான் மொழிபெயர்த்திருக்கிறேன். இலங்கையின் கலவர காலமொன்றில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையிது.

 இந் நாவலுக்கு எனது அபிமானத்துக்குரிய எழுத்தாளர் அம்பை முன்னுரை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு விழாவன்று இந் நாவலை எனது மதிப்புக்குரிய எழுத்தாளர்களான திரு.அசோகமித்திரன் வெளியிட, திரு.தேவிபாரதி பெற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இந் நாவலை மொழிபெயர்க்க அனுமதித்த எழுத்தாளர் சுநேத்ரா ராஜகருணாநாயக, முன்னுரை வழங்கிய எழுத்தாளர் அம்பை, தொகுப்பாக வெளிக்கொண்டு வரும் காலச்சுவடு பதிப்பகம், எழுத்தாளர் கண்ணன் சுந்தரம், எழுத்தாளர் அசோகமித்திரன், எழுத்தாளர் தேவிபாரதி மற்றும் மொழிபெயர்ப்பில் உதவிய எனது சகோதரி கவிஞர் ஃபஹீமாஜஹான் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை இக் கணத்தில் பதிவு செய்கிறேன்.

அத்தோடு எனக்கு வாழ்த்துக்களைச் சொன்ன மற்றும் நான் எழுதுவதற்கான ஊக்கத்தை தொடர்ந்து வழங்கி வரும் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு இப் பதிவையே அழைப்பிதழாகக் கொண்டு, இந் நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
01.01.2012

31 comments:

ராஜா சந்திரசேகர் said...

வாழ்த்துக்கள் தோழர்.

iniyavan said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். "எதிர்வரும் புத்தகக் கண்காட்சியில் 08.01.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று" 08.01.2012 என மாற்றிவிடுங்கள்.

மேமன்கவி பக்கம் said...

மொழிபெயர்ப்பு நாவல் முயற்சி வரவேற்க்கதக்கது. வாழ்த்துக்கள்! அந்த நாவலின் பிரதியை கிடைக்கசெய்யுங்கள். பரவலாக அறிமுகப்படுத்துவோம். தொடர்புக்கு 0785128804

மேமன்கவி பக்கம் said...

சிறுகதை போட்டியில் பரிசை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள். எங்ளுடைய எழுத்தின் மகிமையையும், வன்மையையும் எடுத்து காட்டுகிறது இப்பரிசு.

Shan Nalliah / GANDHIYIST said...

GREETINGS FROM NORWAY! RISHAN..!!! SAY HALLO TO ALL LITTERARY FRIENDS & YOUR FAMILY &RAJENDRAM FAMILY AT MAVANELLAI..WRITE ABOUT YOUR TOWN..LOVELY RIVER..GREEN MOUNTAINS ETC!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் சகோ!

கானகம் said...

Heartful of Greetings and wishing you to get many laurels like this.. Greetings Rishan..

( Sorry No tamil font)

Jeyakumar

Unknown said...

வாழ்த்துக்கள்.

Unknown said...

காக்கைகள் கொத்தும் தலைக்குரியவன் சிறுகதையை நான் வடக்குவாசல் இதழில் வாசித்து நேசித்தேன் . அக்கதைக்கு முதல் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகிறேன் .

அன்புடன்
நண்பன்
தேவராஜ் விட்டலன்
http://devarajvittalan.com/
--

Kalaimahan said...

சிறுகதை போட்டியில் பரிசை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

தருமி said...

வாழ்த்துகள் ........

RMY பாட்சா said...

வாழ்த்துகள் நண்பரே.

Kiruthigan said...

பதிவுலகத்தில் சந்தித்த இனிய பதிவர்கள் நண்பர்கள் இனிய உறவுகளாகியமையும் பின்நாளில் எம்மோடு கைகோர்த்து பல கனவுகளுக்கு செயல் கொடுக்கவும் பல்வேறு வெற்றிகளையும் பெற்று தந்த நினைவுகளோடு மீண்டும் இந்த வருடமும் பதிவுகள் பல இடுவதற்கு தி்டமிட்டுள்ளேன்.
இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

http://tamilpp.blogspot.com

Gowripriya said...

வாழ்த்துகள் :)

சுவாதி ச முகில் said...

வாழ்த்துக்கள்

கானா பிரபா said...

வாழ்த்துக்கள் ரிஷான் உண்மையில் உங்களின் இலக்கியப்பணி பரந்துபட்டிருப்பதை மகிழ்வோடு வரவேற்கிறேன்

ஆதவா said...

வாழ்த்துக்கள் ரிஷான்..... பெருமையாக இருக்கிறது... தொடர்ந்து செல்லுங்கள்!!!

அக்னி said...

வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ரிஷான் ஷெரீப் அவர்களே...

உங்கள் இந்தப் பயணத்தை எப்போதும் ஆரம்பமாகக் கொள்ளுங்கள்.
செல்லும் தூரம் மிகத் தொலைவில் என்றே எப்போதும் கொள்ளுங்கள்.
அப்போதுதான், எமக்கு நல்ல படைப்புக்கள் அதிகமாக உங்களிடமிருந்து கிட்டும்.

மீண்டும் வாழ்த்துக்கள்...

கீதம் said...

மனமார்ந்த பாராட்டுகள் ரிஷான் ஷெரிப் அவர்களே. மேலும் சிகரம் அடைய வாழ்த்துக்கள்.

மதி said...

மிக்க சந்தோஷமான செய்தி ரிஷான் செரீஃப்..! வாழ்த்துக்கள்

அமரன் said...

ரிஷான்...

மனசு குளிரும் தகவல்.. மேலும் பல படிகளைக் கடக்க வாழ்த்து.

mohamedali jinnah said...

Mā šāʾ Allāh ما شاء الله

ஓவியன் said...

அன்பான ரிஷான், மிகவும் சந்தோசமாக இருக்கின்றது .

பெருமையுடனும் மனமகிழ்வுடனும் வாழ்த்துகிறேன், இன்னும் பல மேன்மைகளைப் பெறுக என..!!

manjoorraja said...

இனிய வாழ்த்துகள் ரிஷான்.

abdullah said...

We are happy hear your achievements
keep it up, we are proud of you ALLAH bless you!!!!!!!!!!
Buhary.

இப்னு ஹம்துன் said...

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே!

இக்ராம் எம்.தாஹா said...

வாழ்த்துக்கள் சகோதரர் ரிஷான்!
அழகிய எழுத்து நடையில் வித்தியாசமான படைப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கு முதல் பரிசு கிடைத்ததில் சந்தோசம்.உங்கள் முயற்சி மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

சஞ்சயன் said...

வாழ்து்துகிறேன் நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்கள் ராஜா சந்திரசேகர், என். உலகநாதன், மேமன்கவி,Shan Nalliah, நட்புடன் ஜமால், ஜெயக்குமார், T.V.ராதாகிருஷ்ணன், Eelavan,தேவராஜ் விட்டலன், கலைமகன் பைரூஸ், தருமி, RMY பாட்சா, kiruthigan kuhendran, கௌரிப்ரியா, சுவாதி ச முகில், கானா பிரபா, ஆதவா, அக்னி, கீதம், மதி, அமரன், நீடூர் அலி,ஓவியன், manjoorraja, Buhary Nana, இப்னு ஹம்துன், இக்ராம் எம்.தாஹா, விசரன்,

உங்களது வருகையும் கருத்துக்களும் அன்பான வாழ்த்துக்களும் பெரும் மகிழ்வையும் ஊக்கத்தையும் தருகின்றன.

மிகவும் நன்றி அன்பு நண்பர்களே !

யவனிகா said...

மனம் கனிந்த வாழ்த்துகள் ரிஷான் ஷெரிப்.

ஜெயாஸ்தா said...

காலச்சுவடு போன்ற இலக்கிய தரமான களத்தில் தங்களின் பங்களிப்பு இருப்பது மென்மேலும் வளர்ச்சியைத் தரும்...! வாழ்த்துக்கள் நண்பரே...!