அவ்வளவாக இல்லை. ஐந்தே ஐந்து நாட்கள்தான்.
அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்.
அங்கு இணையமில்லை. கைபேசி (Mobile) இல்லை.ஏதோ மந்திரித்துவிட்ட நாட்டுக் கோழியாகச் சுற்றிவந்து பார்க்கையில்தான் மின்னஞ்சல் பெட்டி (Mail inbox ) நிரம்பிவழிவது தெரிகிறது. ஊர் சுற்றி வந்த களைப்பைப் பார்க்கமுடியுமா என்ன ?
வலைப்பதிவுலக நண்பர்கள் சந்திரமௌலி, பாஸ்கர், தணிகை, கார்த்திக், பிரேம்குமார், மீறான் அன்வர், ரசிகவ் ஞானியார், ரஸீம், கலீலுர் ரஹ்மான்,குட்டிசெல்வன்,காமேஷ், அஜித்குமார்,ஆயில்யன்,நாராயணன் சுப்ரமணியம் சகோதரிகள் ஷைலஜா,ஸ்வாதி,காந்தி,சாந்தி, சூர்யா,கவிநயா, சத்யா,நட்சத்திரா, சஹாராதென்றல், வாணி, பஹீமா ஜஹான் என அத்தனை பேரும் தனி மின்னஞ்சல்கள் மூலமாகவும், குழும மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலமாகவும், தொலைபேசி அழைப்புக்கள் மூலமாகவும் எனது அழைப்பின் கதவுகளைத் தட்டிப் பார்த்துக் கொண்டேயிருந்திருக்கிறீர்கள்.
கைபேசியின் கைதவறிய அழைப்புக்களிலெல்லாம் நண்பர்களின் எண்களோடு புதுப்புது நாடுகளின் புதுப்புது எண்கள். அத்தனையோடும் எனது குரலினை இணைக்கமறந்தமைக்கு மன்னியுங்கள் நண்பர்களே. 'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு ? ' என்பதனைப் போல தொடர்பு எல்லைகள் நீங்கிய பாலைநிலமதில் கைபேசியெதெற்கு என அலுவலக நண்பரிடம் கொடுத்துப் போயிருந்தேன். அவர் எனக்கு வந்த அலுவலக எண்கள் தவிர்த்து எனக்குத் தனிப்பட்ட முறையில் வந்த தொலைபேசி அழைப்புகள் எதற்கும் பதிலெதுவும் அளிக்காமல் மௌனமாக இருந்துவிட்டிருக்கிறார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது.
குழுமத்தில் சகோதரி ஷைலஜா எழுதிய கவிதை ஆனந்தத்தில் விழிகலங்கச் செய்கிறது.
கவலையாய் இருக்கிறது
கற்பனைகள் நிஜத்தின் நிழல்தானோ
நிழல்நிஜமாகிவிடவேண்டாம் என்று
நெஞ்சம் தவிக்கிறது
கவிதை ஒன்று எழுதிவிட்டு
காணாமல் போயிருக்கும்
அன்புத்தம்பி ரிஷான்
அன்று ஒருநாள் சொன்னாரே
நினைவிருக்கிறதா
இலங்கைச் செய்திகளை
இடைவிடாது அளிக்கும்
தனக்கும் பாதுகாப்பு இல்லை என்று?
தொலைபேசியில் தொடர்பு கொண்டும்
மின்மடல்கள்பல அனுப்பியும்
பதில் ஒன்றும் இல்லை
தெரிந்தவர்கள் தகவல்சொன்னால்
செரிக்கும் என் உணவு.
நாலைந்து நாட்பிரிவுக்கே எவ்வளவு அன்பாக விசாரிக்கிறீர்கள் நண்பர்கள் ஒவ்வொருவரும்...? இந்த உலகில் இக்கணத்தின் அதிர்ஷ்டக்காரன் நான்தான் என எண்ணவைக்கிறது. ஏதோ ஒரு ஊரிலிருந்து வந்து எழுத என ஆரம்பித்து இன்னும் ஒருவருடம் கூடப் பூர்த்தியாகவில்லை. யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்ததும் இல்லை. அதற்குள் உண்மையான நண்பர்களின் ஆதிக்கத்துக்குள் நான். மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி இறைவனே...! நன்றி நண்பர்களே..!
இந்த அன்பும், நேசமும் என்றும் தொடர வேண்டுகிறேன்...!
என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்
64 comments:
அப்பாடா
வந்துட்டாயான்னா வந்துட்டான்! :))
அக்கா க"வ"லை!
தம்பி க"ட"லை!
ஒர் எழுத்து! அது கூர் எழுத்து!
ஓர்க்குட்டில் ரிசானுக்குப் பூசுவோம் தார் எழுத்து!
இப்படிக்கு
-ரிசான் ரசிகைகளின் ரசிகர் மன்றம்! :))
//அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்//
களப்பணி செஞ்சீங்களா?
இல்லை...
கடலைப்பணி செஞ்சீங்களா??
....
....
:))))
//'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு//
கைவிளக்கு வேணாம்!
கைப்பேசி வேணும்-ல!
கைவிளக்கு விட்டதுக்கு
கால்கட்டே தண்டனை! :))
ரிஷான் அன்பானவர்களுக்கு சென்ற இடம் செல்லாத இடமெல்லாம் நண்பர்கள், அதையே நீங்கள் பிரதி பலித்துள்ளீர்கள். தொடர்ந்து கலக்க என் அன்பான வாழ்த்துக்கள்.
தலைப்பு தான் என்னவோ போல உள்ளது :-(
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அக்கா க"வ"லை!
தம்பி க"ட"லை!
ஒர் எழுத்து! அது கூர் எழுத்து!
ஓர்க்குட்டில் ரிசானுக்குப் பூசுவோம் தார் எழுத்து!//
:):) சே பாவம் என் செல்லதம்பிய இப்படி வாராதீங்க இன்னொரு செல்லத்தம்பி ரவியே!!!!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்//
களப்பணி செஞ்சீங்களா?
இல்லை...
கடலைப்பணி செஞ்சீங்களா??..///
அதே அதே!!!
....பாலைவனத்தில் தனியே தன்னந்தனியே......ச்சே..பாவம் ரிஷு!!!!
அவரைச் சொல்லிக் குற்றமில்லை. அவருக்கு அறபுமொழியைத் தவிர்த்து வேறு பாஷைகள் தெரியாது...///
ரிஷான்!! கொஞ்சம் தமிழ் சொல்லிகொடுத்துடுங்கப்பா..இல்லேன்னா
இதுமாதிரி கவிதை எழுதின உடனே காணாம போகாதீங்கப்பா...நீங்கள்ளாம் பெண்ணாய் பிறந்தா தான் அந்த மனசு தவிப்பது புரிந்து தொலைக்கும்!
என்னவோ போங்க 'சொல்ல' வேண்டியவங்களுக்காவது ஒழுங்கா சொல்லிட்டு காணாம போனீங்களா?:):)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஓர்க்குட்டில் ரிசானுக்குப் பூசுவோம் தார் எழுத்து!
இப்படிக்கு
-ரிசான் ரசிகைகளின் ரசிகர் மன்றம்! :))
///
என்னது ரசிகைகள்ளா??ரசிகர்மன்றமா?ஓஒ அப்ப்டிபோகுதா கதை?:) தல யாரு (மாதவி)பந்தல்காரர் தானே?:):)
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
//'பட்டப்பகலில் வெட்டவெளியில் கைவிளக்கெதற்கு//
கைவிளக்கு வேணாம்!
கைப்பேசி வேணும்-ல!
கைவிளக்கு விட்டதுக்கு
கால்கட்டே தண்டனை! :))...//
>>>>ரவி....இந்த கால்கட்டு மொழியெல்லாம் குழந்தைக்குப் புரியுமா என்ன?:):)
July 30, 2008 8:29 AM
நல்லா கிளப்புனீங்க பீதிய!
சில முறை போன் செய்து மிஸ்டு கால் ஆன வகையில் அதிகம் பாதிக்கப்படுவேனோ என்று பயந்துபோனது நாந்தான் :)))
சொன்ன காரணங்களை எல்லாருமே நம்பும்படியாக இருப்பதாலும் எல்லோரும் நம்புவதாலும் சரி நானும் நம்பிட்டு போறேனே! :))))
i know you have work , any way thanks for quick return
கலக்குங்கள்... :)
// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அப்பாடா
வந்துட்டாயான்னா வந்துட்டான்! :)) //
வந்துட்டேங்க.. :)
இப்ப சந்தோஷம்தானே பா? :)
//ஓர்க்குட்டில் ரிசானுக்குப் பூசுவோம் தார் எழுத்து!
இப்படிக்கு
-ரிசான் ரசிகைகளின் ரசிகர் மன்றம்! :)) //
ரசிகைகளுக்கே ரசிகர் மன்றம் வைக்க ஆரம்பிச்சாச்சா கேயாரெஸ் அண்ணாச்சி ?
இப்படி பீதியக் கிளப்புறீங்களே ?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//களப்பணி செஞ்சீங்களா?
இல்லை...
கடலைப்பணி செஞ்சீங்களா?? //
ஆஹா....உங்க வேலையை இந்தச் சின்னப்பையன் செய்வானா கேயாரெஸ் அண்ணாச்சி? :P
//கைவிளக்கு வேணாம்!
கைப்பேசி வேணும்-ல!
கைவிளக்கு விட்டதுக்கு
கால்கட்டே தண்டனை! :)) //
ஆஹா..அதுக்கு இன்னும் காலமிருக்குங் கேயாரெஸ் அண்ணாச்சி :)
இப்பவே அவசரப்பட்டா எப்படிங்?
அன்பின் கிரி,
//ரிஷான் அன்பானவர்களுக்கு சென்ற இடம் செல்லாத இடமெல்லாம் நண்பர்கள், அதையே நீங்கள் பிரதி பலித்துள்ளீர்கள். தொடர்ந்து கலக்க என் அன்பான வாழ்த்துக்கள். //
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
//:):) சே பாவம் என் செல்லதம்பிய இப்படி வாராதீங்க இன்னொரு செல்லத்தம்பி ரவியே!//
நல்லா உறைக்கிற மாதிரி சொல்லுங்க ஷைலஜா அக்கா :)
//அதே அதே!!!
....பாலைவனத்தில் தனியே தன்னந்தனியே......ச்சே..பாவம் ரிஷு!!!! //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ரிஷான்!! கொஞ்சம் தமிழ் சொல்லிகொடுத்துடுங்கப்பா..இல்லேன்னா
இதுமாதிரி கவிதை எழுதின உடனே காணாம போகாதீங்கப்பா...நீங்கள்ளாம் பெண்ணாய் பிறந்தா தான் அந்த மனசு தவிப்பது புரிந்து தொலைக்கும்!
என்னவோ போங்க 'சொல்ல' வேண்டியவங்களுக்காவது ஒழுங்கா சொல்லிட்டு காணாம போனீங்களா?:):)//
ஒரு அறபிக்குத் தமிழ் கத்துக் கொடுக்குறதா?
அந்தக் கொடுமையை என்னன்னு சொல்றது?
//என்னது ரசிகைகள்ளா??ரசிகர்மன்றமா?ஓஒ அப்ப்டிபோகுதா கதை?:) தல யாரு (மாதவி)பந்தல்காரர் தானே?:):)//
அதே தல தான் ஷைலஜா அக்கா..அதே மூணெழுத்துக் காரர் :P
//>>>>ரவி....இந்த கால்கட்டு மொழியெல்லாம் குழந்தைக்குப் புரியுமா என்ன?:):) //
அதானே அக்கா...மழலை மொழியில மொழி பெயர்த்துச் சொல்லுங்க :)
அன்பின் ஆயில்யன்,
//நல்லா கிளப்புனீங்க பீதிய!
சில முறை போன் செய்து மிஸ்டு கால் ஆன வகையில் அதிகம் பாதிக்கப்படுவேனோ என்று பயந்துபோனது நாந்தான் :))) //
மிஸ்ட் கால் லிஸ்டில் நிறையப் புது நம்பர்கள்..உங்களிடமிருந்தும் வந்திருக்கிறது என நினைக்கிறேன். உங்களிடம் பேச வேண்டுமென்ற என் நீண்டநாள் கனவு நனவாகவில்லையென்ற கவலையில் தற்பொழுது இருக்கிறேன் :(
//சொன்ன காரணங்களை எல்லாருமே நம்பும்படியாக இருப்பதாலும் எல்லோரும் நம்புவதாலும் சரி நானும் நம்பிட்டு போறேனே! :))))//
அன்பின் ஆயில்யன்,
கம்பனி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி நண்பரே..ஆகவே ஒவ்வொரு வருஷமும் ஃபீல்டுக்குப் போய் நாங்கள் கொடுத்திருக்கும் மெஷின்களின் தகவலை அறிந்து வரவேண்டும்.
வெள்ளியன்று போனேன். லீவுநாள் இல்லையா?
சொல்லிவிட்டுப் போகமுடியவில்லை நண்பரே :(
//jackiesekar said...
i know you have work , any way thanks for quick return //
வாங்க சேகர் :)
நானும் வந்தாச்சு..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க விக்னேஷ்வரன் :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
:-)
நட்பு இது சரிகெடையாது
திரும்ப வந்தது மிக்க மகிழ்ச்சி
thank god
//அலுவலகத்தில் களப்பணி ( Field visit) வேலையாக கத்தார் நாட்டின் பாலைவனநகரொன்றுக்குச் சென்றிருந்தேன்//
நல்லாருக்கு
ஏன்???ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
வேண்டாம் ....போதும்....இது எல்லாம் படிச்சு டென்சனா இருக்கு
குழந்தாய்! ஒவ்வொரு மிஸ்ட் காலுக்கும், ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 108 தோப்புக்கரணம் போடவும்.
அடடா, தலைப்பை மறந்துட்டேனே... அதுக்கு 1008!
இன்னுமாட இந்த ஊரு உன்ன நம்புது...ஐயே ஐயோ
இவ்ளோ கலேபரம் நடந்திருக்கா? நீ எல்லாருக்கும் அவ்ளோ செல்லம்டா கண்ணா.. :) இனி எங்கயாவது போனா அறிவிச்சிட்டு போ.. இப்டி எல்லாரயும் தவிக்க விடாத.
உங்களின் தலைப்பு ஒரு நிமிடம் என்னை கதிகலங்கச் செய்தது என்னவோ உண்மைதான், ஆனால் முழுதும் படித்தவுடன் சொல்லிலடங்கா ஒரு நிம்மதி.
8(:-)
இதுல இருந்து ரிஷான் எல்லோருக்கும் செல்லப்பிள்ளை என்பது தெளிவு...!
இனி எங்க போனாலும் சொல்லிட்டு போங்கப்பு...:)
இத்தனை பேரின் அன்பும், அக்கறையுமே என்றைக்கும் எங்கு சென்றாலும் உங்களுக்கு அரணாக இருக்கும். வாழ்த்துக்கள் ரிஷான்!
நீங்கள் திரும்பி வரவில்லை.. நாங்கள் விரும்பி வந்துள்ளீர்கள்... வருக...பதிவு தருக...
ரிஷான்,
நலமா? :)
இனிமே, ஓடிப்போறதுன்னா, சொல்லீட்டு ஓடிப்போங்க. சரியா?:)
ஆமா! 'தனி'யா எதுக்கு ஓடிப்போனீங்க???? :)))
பி.கி.:தலைப்பை மாத்துங்க ரிஷான்.
கொஞ்சம் டச்சிங்கா இருந்துது. வாழ்த்துகள், ரிஷான்!
அட வந்திட்டீங்களா, நீங்க வருவீங்கன்னு தெரியுமே ;-)
அப்படி எங்கள விட்டு போவிங்களா என்ன.. ;)
வாங்க மைபிரண்ட் :)
வருகைக்கும் புன்னகைக்கும் நன்றிங்க :)
அன்பின் வால்பையன்,
//நட்பு இது சரிகெடையாது//
கோச்சுக்காதீங்க..இனிமே சொல்லிட்டுப் போறேன் நண்பா :)
வாங்க கார்த்திக் :)
//திரும்ப வந்தது மிக்க மகிழ்ச்சி
thank god //
நன்றி நண்பா :)
வாங்க துர்கா :)
//ஏன்???ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
ஏன்???
வேண்டாம் ....போதும்....இது எல்லாம் படிச்சு டென்சனா இருக்கு //
அப்பாவிச்சிறுமிக்கு எதுக்குங்க இவ்ளோ டென்ஷன்? :P
வாங்க கவிநயா,
//குழந்தாய்! ஒவ்வொரு மிஸ்ட் காலுக்கும், ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் 108 தோப்புக்கரணம் போடவும்.//
//அடடா, தலைப்பை மறந்துட்டேனே... அதுக்கு 1008! //
என்னங்க நீங்க ....வரும்போதே 1008 குண்டைத் தூக்கித் தலையில போடுறீங்களே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(
நல்லவேளை யாரும் கவனிக்கல.. :)
// Ajith Kumar said...
இன்னுமாட இந்த ஊரு உன்ன நம்புது...ஐயே ஐய //
வாங்க ஹீரோ சார்...
இப்படியாங்க பஞ்ச் டயலாக் விடுறது ? :)
வாங்க சஞ்சய் சார் :)
//இவ்ளோ கலேபரம் நடந்திருக்கா? நீ எல்லாருக்கும் அவ்ளோ செல்லம்டா கண்ணா.. :) இனி எங்கயாவது போனா அறிவிச்சிட்டு போ.. இப்டி எல்லாரயும் தவிக்க விடாத. //
இனிமே போகமாட்டேனுங்ணா..அப்படியே போனாலும் எல்லோர்ட்டயும் சொல்லிட்டே போறேங்ணா...
மீசைக்கார நண்பா..நன்றிங்ணா :)
வாங்க ஸயீத் :)
//உங்களின் தலைப்பு ஒரு நிமிடம் என்னை கதிகலங்கச் செய்தது என்னவோ உண்மைதான், ஆனால் முழுதும் படித்தவுடன் சொல்லிலடங்கா ஒரு நிம்மதி. //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)
வாங்க தமிழன் :)
//இனி எங்க போனாலும் சொல்லிட்டு போங்கப்பு...:) //
கண்டிப்பா சொல்லிட்டுப் போறேன் நண்பரே :)
அன்பின் ராமலக்ஷ்மி,
//இத்தனை பேரின் அன்பும், அக்கறையுமே என்றைக்கும் எங்கு சென்றாலும் உங்களுக்கு அரணாக இருக்கும். வாழ்த்துக்கள் ரிஷான்! //
நிச்சயமாக சகோதரி. அதனை நினைத்தே மகிழ்கிறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
//தமிழ்ப்பறவை said...
நீங்கள் திரும்பி வரவில்லை.. நாங்கள் விரும்பி வந்துள்ளீர்கள்... வருக...பதிவு தருக...//
வாங்க நண்பரே :)
கொஞ்சம் இருங்க..திரும்பப் படிக்கிறேன் உங்க கருத்தை :)
//NewBee said...
ரிஷான்,
நலமா? :)
இனிமே, ஓடிப்போறதுன்னா, சொல்லீட்டு ஓடிப்போங்க. சரியா?:) //
நிச்சயமா நண்பரே . சொல்லிட்டுப் போறேங்க :)
//ஆமா! 'தனி'யா எதுக்கு ஓடிப்போனீங்க???? :))) //
தனியா எல்லாம் இல்லைங்க..இன்னொருத்தரும் வந்தார். ஆனால் பாதியிலேயே கால்வலிக்குது ன்னு திரும்ப வந்துட்டார் :P
//தாமிரா said...
கொஞ்சம் டச்சிங்கா இருந்துது. வாழ்த்துகள், ரிஷான்! //
வாங்க தாமிரா :)
வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
//கானா பிரபா said...
அட வந்திட்டீங்களா, நீங்க வருவீங்கன்னு தெரியுமே ;-) //
வாங்க கானா அண்ணாச்சி..
எப்படியும் உங்க புதிரையெல்லம் அவிழ்க்க நான் வரணும்ல ? :P
வாங்க தூயா :)
//அப்படி எங்கள விட்டு போவிங்களா என்ன.. ;) //
அதானே..உங்களுக்கு இன்னும் எவ்வளவு சமையல் குறிப்பெல்லாம் கற்றுத்தர வேண்டியிருக்கு .. :P
வணக்கம் அண்ணாச்சி...
நான் கூட நீங்க வ.வா சங்கத்துல போட்ட பதிவுகளால பாதிக்க பட்ட மக்கள் உங்களை கடத்திட்டு போய்ட்டாங்கன்னு நினைத்தேன்... :P
கடந்த ஒரு நாளாய் தான் எனக்கு உறுத்தியது, ரிஷனைக் கானோமே என்று.மாஷா அல்லா.
வாங்க நாதாஸ் :)
//நான் கூட நீங்க வ.வா சங்கத்துல போட்ட பதிவுகளால பாதிக்க பட்ட மக்கள் உங்களை கடத்திட்டு போய்ட்டாங்கன்னு நினைத்தேன்... //
அவங்களுக்கு அந்த எண்ணம் இல்லாட்டிலும் நீங்களே போட்டுக் கொடுப்பீங்க போலிருக்கே :)
வாங்க அப்துல்லாஹ் :)
//கடந்த ஒரு நாளாய் தான் எனக்கு உறுத்தியது, ரிஷனைக் கானோமே என்று.மாஷா அல்லாஹ் //
பத்திரமாக இருக்கிறேன்..நன்றி நண்பரே :)
Post a Comment