Sunday, April 5, 2009

ஒரு பூவெழுதும் கவிதை

"மனிதா எனக்கு ஒரே தாகமாக இருக்கிறது; உடனடியாக நீர் பாய்ச்சு "

இப்படி தாவரங்கள் தமக்கு நீர் போதவில்லை என எழுத்து வடிவ  செய்தியொன்றின் மூலம் மனிதர்களைக் கோரினால் எப்படியிருக்கும் ?

இந்த கற்பனைக்கு செயல் வடிவம் கொடுத்துள்ளனர் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.

இந்த விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட நவீன உணர் கருவியானது தாவரம் போதிய நீரின்றி வாடுவதை துல்லியமாகக் கணக்கிட்டு, அது தொடர்பான சமிக்ஞைகளை தாவரத்தை பராமரிப்பவரின் கையடக்க தொலைபேசிக்கோ அன்றி கணினிக்கோ எச்சரிக்கை ஒலியுடன் அனுப்பி வைக்கும்.

இந்த உணர்கருவிகள், தாவரங்களுக்கு தேவைக்கு அதிகமான நீர் வழங்கப்படுவதை தவிர்க்கவும் உதவுகின்றன.

மேற்படி உணர்கருவிகளை பயன்படுத்துவதால் பயிர்ச் செய்கைக்கான நீர்ப்பாசனத்தை பயனுறுதிப்பாடுள்ள வகையில் முகாமை செய்து, அதனூடாக 50 சதவீதத்துக்கும் அதிகமான நீரைச் சேமிக்க முடியும் என இந்த உணர் கருவியை உருவாக்கிய விஞ்ஞானிகளான கலாநிதி எரான் ராவெக் மற்றும் கலாநிதி அறி நட்லர் ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் 7 வருட கால தீவிர ஆராய்ச்சியின் பின்னரே இந்த உணர் கருவிகளை உருவாக்கியுள்ளனர்.

இந்த உணர்கருவியானது "வோக்கி டோக்கி" உபகரண தொழில்நுட்ப அடிப்படையில் செயற்படுவதாகவும் தாவரத்தின் தண்டுக்குள் செலுத்தப்பட்ட உலோக நுண்கருவிகள் மூலம் இந்த உணர்கருவிகள் தாவரத்திற்குத் தேவையான நீரை மதிப்பிடுவதாகவும் மேற்படி விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

250 அமெரிக்க டொலர் செலவில் 5,000 ஓர்கிட் தாவரங்களுக்கு இந்த உணர்கருவிகளை பொருத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

தகவல் உதவி - வீரகேசரி

31 comments:

துளசி கோபால் said...

நட்சத்திர வாழ்த்து(க்)கள் ரிஷான்.

ஆரம்பமே பூவா!!!!

Divya said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்திப் பகிர்வுக்கு நன்றி.. நட்சத்திர வாழ்த்துகளும்...

ராமலக்ஷ்மி said...

நல்ல தகவல். தலைப்பும் நன்று.

தமிழ் மண நட்சத்திரமாக ஜொலிக்கிறீர்கள். வாரம் முழுதும் உங்கள் பயணத்தில் உடன் வருவோம். வாழ்த்துக்கள் ரிஷான்:)!

மங்களூர் சிவா said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்.

மங்களூர் சிவா said...

கொய்ய்யால கொஞ்சம் தண்ணி ஊத்துய்யா அப்படின்னு கடிதம் எழுதுமா???

நல்ல விசயம்தான்.

SP.VR. SUBBIAH said...

நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

Anonymous said...

நட்சத்திர வாழ்த்துகள் சகோதரா...

KARTHIK said...

நல்ல விசையம்தான்

ஆனா அத இங்க வெச்சம்னா அது எப்பவும் தண்ணி குடுன்னு இல்ல கேக்கும்.

Unknown said...

ரிஷான்,
பதிவு நல்லா இருக்கு. ஆனா ஒரு விஷயம். இந்த விஞ்ஞான சோதனைகளையெல்லாம் வேறு விஷயத்திற்க்கு பயன்படுத்தலாம்.

இயற்கை, இயற்கையாக இருப்பது நல்லது.

இயற்கையாகவே அது தெரிவிக்கும்
எது வேண்டும் வேண்டாம் என்று.

மெளலி (மதுரையம்பதி) said...

நல்ல செய்தி, அறியத்தந்தமைக்கு நன்றி ரிஷான்.

நட்சத்திரமானதுக்கும் வாழ்த்துக்கள். :-)

இப்னு ஹம்துன் said...

நட்பின் ரிஷான்,

மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழ்மணத் தாரகையானதற்கு என் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

'நட்சத்திரமாக' உங்களைக் கண்டவுடன் எழுதும் பின்னூட்டம் இது, பிறகு வருகிறேன்

Anonymous said...

தாவர உணர் கருவி கண்டுபிடித்து அதன் தேவைகளை நிறைவேற்ற நினைத்த இஸ்ரேலியர்கள் கொஞ்சம் மனிதம் உணர் கருவிகளையும் தேடினால் நலம்.

கானா பிரபா said...

நட்சத்திர வாழ்த்துக்கள் பாஸ்

geevanathy said...

மனம்நிறைந்த நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பனே..

இளமாயா said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

தமிழன்-கறுப்பி... said...

வாழ்த்துக்கள் ரிஷான்...!!!

தமிழன்-கறுப்பி... said...

எதிர்பார்ப்புகளோடு இருக்கிறேன்...

தமிழன்-கறுப்பி... said...

கலக்குங்க...!

Suresh said...

Very good post machan
Your post is in youthful vikatan Good blogs machan unagalukku theriyauma nu theriyala villai athan intha comment

http://youthful.vikatan.com/youth/index.asp

Suresh said...

valthukkal for star too

Anonymous said...

Good

manjoorraja said...

நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்.

இந்த வாரம் வெற்றிவாரமாகட்டும்

Kavinaya said...

தலைப்பு அழகா இருக்கு :) பதிவும்தான். வாழ்த்துகள் ரிஷு :)

அமுதா said...

நல்ல தகவல். நட்சத்திர வாழ்த்துகள்

ARV Loshan said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.

பூத்து மலரட்டும் இந்த வாரம்.. உங்கள் டச் தெரியும் பதிவுகள் மகிழ்வளிக்கின்றன..

ஷைலஜா said...

பூவாய் மணத்து மலரட்டும் நட்சத்திரவாரம்!

M.Rishan Shareef said...

எனது அன்புக்குரிய நண்பர்கள்,

# துளசி கோபால்

# திவ்யா

# ஆ.ஞானசேகரன்

# ராமலக்ஷ்மி

# மங்களூர் சிவா

# SP.VR.SUBBIAH

# TV. Radhakrishnan

# தூயா

# கார்த்திக்

# கே.ரவிஷங்கர்

# மதுரையம்பதி

# இப்னு ஹம்துன்

# கானா பிரபா

# தங்கராசா ஜீவராஜ்

# இளமாயா

# தமிழன் - கறுப்பி

# Suresh

# மஞ்சூர் ராசா

# கவிநயா

# அமுதா

# LOSHAN

# ஷைலஜா

# தமிழ்நெஞ்சம்

# கவிநயா

# கோவி.கண்ணன்

உங்கள் அனைவரினதும் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே !

Anonymous said...

வாழ்த்துகள்!

M.Rishan Shareef said...

அன்பின் கவின்,

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கே.ரவிஷங்கர்,

//ரிஷான்,
பதிவு நல்லா இருக்கு. ஆனா ஒரு விஷயம். இந்த விஞ்ஞான சோதனைகளையெல்லாம் வேறு விஷயத்திற்க்கு பயன்படுத்தலாம்.

இயற்கை, இயற்கையாக இருப்பது நல்லது.

இயற்கையாகவே அது தெரிவிக்கும்
எது வேண்டும் வேண்டாம் என்று.//

ஆமாம்..நல்ல கருத்து.
நன்றி நண்பரே !