Wednesday, June 21, 2017

எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு மொழிபெயர்ப்புக்கான இயல் விருது



     சர்வதேச ரீதியில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தொகுப்புக்களுக்கு விருதுகளை வழங்கும் ‘கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது 2016’ விழா இம் மாதம் 18 ஆம் திகதி கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. இவ் விழாவில் எனது ‘இறுதி மணித்தியாலம்’ தொகுப்புக்கு சிறந்த மொழிபெயர்ப்புக்கான இயல் விருது வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்.

      இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள எனது  'இறுதி மணித்தியாலம்' எனும் இம் மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

      இக் கணத்தில், எப்போதும் ஊக்கம் தந்து என்னுடனேயே பயணிக்கும் சகோதரி கவிஞர் ஃபஹீமா ஜஹானை மகிழ்ச்சியோடு நினைவுகூர்வதோடு, இக் கவிதைகளைத் தொகுப்பாக வெளியிடத் தேர்ந்தெடுத்த வம்சி பதிப்பகத்துக்கும், இயல் விருதினை வழங்கி கௌரவிக்கும் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துக்கும், எழுதவும், மொழிபெயர்க்கவும் எப்போதும் ஊக்கமளிக்கும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியும், அன்பும் என்றும் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
21.06.2017

No comments: