உலக சினிமா ஆர்வலர்கள் ஒன்றைப் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
இணையமும், நவீன தொழில்நுட்ப வசதிகளும் வீட்டிற்கே வந்து விட்ட பிறகு, நல்ல
தரமான உலகத் திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்க்கிறார்கள். நானும்
விதிவிலக்கல்ல. எங்கெல்லாம் நல்ல திரைப்படங்களைப் பற்றிய குறிப்புக்களை
வாசிக்க நேர்கிறதோ, எனது அலைவரிசைக்கு ஒத்துவரக் கூடிய திரைப்படமாகக்
காண்கிறேனோ, உடனடியாக அதைத் தேடிப் பிடித்துப் பார்த்து விடுகிறேன்.
தமிழ்
ஊடகங்களில் அநேகமானவை வெறுமனே தமிழ்த் திரைப்பட விமர்சனங்களையும்,
அவற்றுக்கான புள்ளிகளையும் இட்டு பெருமைப்பட்டுக் கொள்வதோடு நின்று
விடுபவை. தமக்குப் பிடித்த நடிகர்கள், இயக்குனர்கள் மீதான ஆராதனைகளோடு,
தமக்கு ஒரு சதம் கூடப் பயனற்ற வசூல் சாதனை விபரங்களை பெருமையோடு பகிர்ந்து
கொள்ளும் மூளையும், புத்தியும் மழுங்கிய வெறி கொண்ட ரசிகர்கள்தான்
முகநூலிலும் தெருவுக்குத் தெரு நின்று கொண்டு பல்லிளிக்கிறார்கள் அல்லது
முறைக்கிறார்கள். யதார்த்தத்தில் அவர்களிலிருந்து தப்புவதுதான் பெரும்பாடாக
இருக்கிறது.
இப்படியான இன்னல்களிலிருந்தும்,
தொந்தரவுகளிலிருந்தும் தப்பி, உலகில் வெளிவரும் நல்ல திரைப்படங்களைப்
பார்க்க நிறையத் தேட வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் அதற்கென்றே அநேகமான
நேரம் செலவாகும். அண்மையில் சிவசங்கர் எனும் நண்பர் ஒருவர், என்னை ஒரு
முகநூல் குழுமத்தில் இணைத்து விட்டிருந்தார். 'World Movies Museum' எனும்
அக் குழுமத்தையும் வழமையாகக் காணும் சாதாரணமான ஒரு குழுமமாகக் கருதி, உள்ளே
சென்று பார்த்தால், எனது கருதுகோளை அப்படியே சிதறடிக்கச் செய்துவிட்டது
குழுமத்தின் நேர்த்தியும், படைப்புக்களும்.
தாம்
பார்த்த, உலகம் முழுவதிலிருந்தும் வெளிவரும் நல்ல திரைப்படங்களைக் குறித்து
குழும நண்பர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆரோக்கியமான
விவாதங்களாக அவை இருக்கின்றன. இக் குழுமத்தில் நல்ல பதிவுகளை மாத்திரம்
பதிவிடுவதால் நம்பகத்தன்மையோடு அனைத்து நண்பர்களுக்கும் பரிந்துரைக்க
முடிகிறது. உலக சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் இணைந்து கொள்ளலாம். இந்தக்
குழுமம் ஏமாற்றவில்லை. நேரத்தை வீணடிக்கவில்லை. புதிய பதிவுகளை தினந்தோறும்
தந்துகொண்டே இருக்கிறது.
இனியும் இவ்வாறே தொடரட்டும் என்ற வாழ்த்துக்களோடும், அன்போடும்...
எம்.ரிஷான் ஷெரீப்
16.05.2017
16.05.2017
mrishanshareef@gmail.com
No comments:
Post a Comment