Monday, April 6, 2009

கண்ணீர்ப் பிரவாகம்

ஒரு சமுத்திர உடலின் மேல்
பனிமுகில் போர்வை விழுந்தது
எதன் ஈரத்தை
எது வாங்கிக் கொண்டதென்ற
கணக்குகளேதுமற்ற வெளியின் காற்று
எல்லாத் திசைகளிலும்
துளிகளாய்ப் படிந்தது

அம் மலையினுச்சியில் சிறகடிக்கிறது
ஒரு பெரும் விஷப்பறவை
கூடுகளைக் கிளைகளை
அடைந்திருக்கும் சிறுகுருவிகள்
அச்சத்தில் நடுங்கிடத் தன்
சொண்டூறி வழியும் எச்சிலில்
நகங்களைக் கூர்படுத்துகிறது மாமிசப்பட்சி
உன்னைப் போல

நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி - 'வடக்குவாசல்' பெப்ரவரி 2009 இதழ்

32 comments:

KARTHIK said...

தல நட்சத்திரம் ஆன பின்னாடியும் கவிதை தானா ???

ராமலக்ஷ்மி said...

கண்ணீர் பிரவாகம் நடுங்க வைக்கிறது வார்த்தைகளிலே வலியினைத் தேக்கி.

மாதவராஜ் said...

இப்போதுதான் பார்த்தேன்.
சந்தோஷனாயிருந்தது.
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
வெப்பம் மிகுந்த கவிதை. பாராட்டுக்க்கள்.

Anonymous said...

நட்சத்திர ரிஷானுக்கு வாழ்த்துகள்.

உங்கள் மொழிநடையில் தனித்துவத்தைக் காண்கிறேன்.

Muruganandan M.K. said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

"இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று"
கவிதை துயரத்திலும் சுவைக்கிறது.

தமயந்தி said...

sagothari ramalakshmiye solli vitargale.kavithaiyin valimai...vaazhthukal.

பிரேம்குமார் said...

நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் :)

கயல் said...

கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்டீர்கள்!அருமை! வாழ்த்துக்கள்!

Kavinaya said...

நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)

//இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று//

ஹ்ம்.. இதயம் கனக்க வைக்கும் இன்னொரு கவிதை...

ஆ.சுதா said...

நட்சத்திர வாழ்த்துகள்.
கனமான கவிதை.

நரேஷ் said...

நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!

கவிதையின் வெப்பம், மனதைச் சுடுகிறது....

பாச மலர் / Paasa Malar said...

நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...

அருமையான வரிகள்..

கடைசி இரண்டு வரிகள் படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது..

ஷைலஜா said...

\\நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று\\\

வார்த்தைபிரயோகங்கள் வழக்கம்போல அருமை ரிஷான்..... உங்களுக்கென்றே தமிழ்மகள் பிரத்தியேகமாய் அலங்கரித்த்க்கொள்கிறாள்!

ஆதவா said...

கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவும் படிக்கவேண்டும்!!

ஆதவா said...

இக்கவிதை படிக்க நிசப்தம் வேண்டுமெனக்கு...

இரவு படிக்கிறேன்...

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்! மூச்சு முட்டும் வேலைக்கு நடுவுல, இப்போ தான் தெரியும்! ஒடனே ஓடியாந்தேன்! :)

//நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்//

எனக்கு மனப்பாடமே ஆகி விட்டது!

M.Rishan Shareef said...

அன்பின் கார்த்திக்,

//தல நட்சத்திரம் ஆன பின்னாடியும் கவிதை தானா ???//

என்னிடம் இருப்பதைத்தானே தரமுடியும் நண்பா :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

M.Rishan Shareef said...

அன்பின் ராமலக்ஷ்மி,

//கண்ணீர் பிரவாகம் நடுங்க வைக்கிறது வார்த்தைகளிலே வலியினைத் தேக்கி.//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் மாதவராஜ்,

//இப்போதுதான் பார்த்தேன்.
சந்தோஷனாயிருந்தது.
நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.
வெப்பம் மிகுந்த கவிதை. பாராட்டுக்க்கள்.//

வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் globen,

//நட்சத்திர ரிஷானுக்கு வாழ்த்துகள்.

உங்கள் மொழிநடையில் தனித்துவத்தைக் காண்கிறேன்.//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் டொக்டர் எம்.கே.முருகானந்தன்,

//இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள்.

"இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று"
கவிதை துயரத்திலும் சுவைக்கிறது.//

:)
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி டொக்டர் !

M.Rishan Shareef said...

அன்பின் தமயந்தி,

உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

//sagothari ramalakshmiye solli vitargale.kavithaiyin valimai...vaazhthukal.//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பிரேம்குமார்,

//நட்சத்திரத்திற்கு வாழ்த்துகள் :)//

வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் கயல்,

//கணநேரம் சோகத்தில் உறைய வைத்து விட்டீர்கள்!அருமை! வாழ்த்துக்கள்!//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் கவிநயா,

//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷு :)

//இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று//

ஹ்ம்.. இதயம் கனக்க வைக்கும் இன்னொரு கவிதை...//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
உங்கள் பயணம் இனிதே அமையட்டும் !

M.Rishan Shareef said...

அன்பின் ஆ.முத்துராமலிங்கம்,

//நட்சத்திர வாழ்த்துகள்.
கனமான கவிதை.//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நரேஷ்,

//நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்!!!

கவிதையின் வெப்பம், மனதைச் சுடுகிறது....//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பாசமலர்,

//நட்சத்திர வாழ்த்துகள் ரிஷான்...

அருமையான வரிகள்..

கடைசி இரண்டு வரிகள் படித்து முடிக்கையில் கண்கள் பனித்தது..//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் சகோதரி ஷைலஜா,

//\\நான் மணற்கரை
கடும்விசை கொண்டு
உன் பாதச்சுவடுகளைத் தழும்பாக்கியபடி
என் மேனி முழுதும் நடக்கிறாய்
உனது தடங்களிலிருந்து தொடர்ந்தும்
எனதுள்ளிருக்கும்
கண்ணீரூற்றுக்கள் பிரவகிக்கின்றன
இருப்பினும் எப்பொழுதும்
இருட்டறைப் பிணங்களை எட்டாது
சுடுகாட்டு நிலாக்கீற்று\\\

வார்த்தைபிரயோகங்கள் வழக்கம்போல அருமை ரிஷான்..... உங்களுக்கென்றே தமிழ்மகள் பிரத்தியேகமாய் அலங்கரித்த்க்கொள்கிறாள்!//

:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஆதவா,

//கொஞ்சம் கனமான கவிதைதான்... திரும்பவும் படிக்கவேண்டும்!!

இக்கவிதை படிக்க நிசப்தம் வேண்டுமெனக்கு...

இரவு படிக்கிறேன்...//

உங்கள் மீள்வருகையையும் கவிதை குறித்தான உங்கள் கருத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன் !

M.Rishan Shareef said...

அன்பின் கே.ஆர்.எஸ்,

//மொதல்ல நட்சத்திர வாழ்த்துக்கள் ரிஷான்! மூச்சு முட்டும் வேலைக்கு நடுவுல, இப்போ தான் தெரியும்! ஒடனே ஓடியாந்தேன்! :)//

உங்கள் வருகை தாமதிக்கும்போதே நினைத்தேன்..ஏதேனும் வேலையாக இருப்பீர்களென்று :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

Unknown said...

Offfffffffffhhhhhh
Rish,,,,, words are well line up Amazing .... Poet ...
Your are God given gift for Tamil readers..
Would you please wrote 3 lines On your fans (Poet lovers)
Arif