இன்று கடத்திச் செல்லப்பட்டு காட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆறு வயது
சிறுமியை ஒரு ஊரே திரண்டு காப்பாற்றியிருப்பதானது மகிழ்ச்சியைத் தருகிறது.
மூவின மக்களுமாக சுமார் 2000 பேர் இணைந்து, இரண்டு மணித்தியாலங்களுக்கும்
மேல் பாடுபட்டு சிறுமிக்கு எதுவும் அசம்பாவிதம் நிகழாமல்
காப்பாற்றியிருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை வரவேற்க வேண்டும்.
ஆனால் கடந்த சில மாதங்களாக எத்தனை எத்தனை பாலியல் வன்முறைச் சம்பவங்களும்
கடத்தல்களும் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன? இவ்வாறான குற்றச்
செயல்களில்
ஈடுபடுபவர்கள் நீதிமன்றம் வழியாக தண்டனைகள் ஏதுமற்று விடுதலை செய்யப்படுவதையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
ஒரு வன்முறையாளனுக்காவது பகிரங்கமாகத் தண்டனை கொடுத்தால்தான் இச் சம்பவங்கள் மட்டுப்படுத்தப்படுமெனத் தோன்றுகிறது.
- எம்.ரிஷான் ஷெரீப்
01.06.2015
No comments:
Post a Comment