Saturday, January 7, 2017

எனது 'இறுதி மணித்தியாலம்'

அன்பின் நண்பர்களுக்கு,

எனது இந்த வருடத்தின் முதல் புத்தகமாக, இந்தியாவின் சிறந்த பதிப்பகங்களுள் ஒன்றான 'வம்சி' பதிப்பக வெளியீடாக 'இறுதி மணித்தியாலம்' எனும் மொழிபெயர்ப்புத் தொகுப்பு இந்த வாரம் வெளிவருவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 



இலங்கையில் சிங்கள மொழியில் சிறுபான்மை சமூகங்களுக்காக எழுதி வரும் சிறந்த சிங்களக் கவிஞர்கள், கவிதாயினிகளது முக்கியமான கவிதைகள் பலவும் என்னால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. தொகுப்பிற்கு காத்திரமானதோர் முன்னுரையை மதிப்பிற்கும், நேசத்திற்குமுரிய எழுத்தாளர் கருணாகரன் எழுதியிருக்கிறார். 

இத் தொகுப்பை சென்னையில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், 'வம்சி' பதிப்பக அரங்குகளில் (எண்:293,294) பெற்றுக் கொள்ளலாம். 

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப் 
07.01.2017

No comments: